feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

நடிகை சினேகா மீது மானநஷ்ட வழக்கு

Labels:






திருச்சி, திருச்சியில் நடிகை சினேகாவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை அடித்து உதைத்த நகைகடை காவலாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான நடிகை சினேகா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக ரியல் எஸ்டேட் அதிபர் மனைவி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள ஒரு நகைகடையில் நேற்று நடந்த விழாவில் பிரபல நடிகை சினேகா கலந்து கொண்டார். நடிகை சினேகா நகைக்கடைக்கு வந்தபோது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக முன்னோக்கி சென்றனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது நெரிசலில் அங்கிருந்த ஒரு வாலிபர் சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா இதுபற்றி அங்கிருந்த காவலாளிகளிடம் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை நீலநிற சட்டை போட்டவர் என்று அடையாளம் காட்டியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து நீலநிற சட்டை அணிந்திருந்த ஒரு வாலிபரை கண்டுபிடித்த காவலாளிகள் அவரை இழுத்து சென்று அடித்து உதைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபர் தாக்கப்படுவதை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கடை காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்பு தாக்கப்பட்ட வாலிபரையும், கடை காவலாளிகள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி காவேரி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) என்றும், அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.

இந்த நிலையில் சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

நான் எனது கணவருடன் 24-9-2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை தாக்கியதாக நகைக்கடை காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா நிருபர்களிடம் கூறியதாவது:-

இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு. என் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சினேகா மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.




எந்திரன் க்ளைமாக்ஸ்...

Labels:


எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ் மிக மிக ரகசியமாக படமாக்கப்பட்டு வருகிறது, சென்னையில்.

படத்தின் இறுதியில் இடம்பெறும் நான்கு நிமிட நெருப்பு சண்டைக் காட்சி இது.

பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுக்கூடம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்படுவது போலவும் அதில் ரஜினியின் சண்டை இடம்பெறுவதுமாக இந்தக் காட்சி படமாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியே இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

இந்தக் காட்சி படமாக்கப்படுவதை எந்திரன் கிராபிக்ஸ் குழு (ஹாலிவுட் நிறுவனம் இது) உன்னிப்பாகக் கவனித்து, பின்னர் தேவைக்கேற்ப கிராபிக்ஸ் காட்சிகளை அதனுடன் இணைத்து பிரமாண்டப்படுத்த உள்ளது.

ஜார்ஜ் லூகாஸ் என்பவரால் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தி இது. இந்தியப் படம் ஒன்றில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

இந்தக் காட்சிகள் படமாகும்போது ரஜினிக்கு கொஞ்ச நேர வேலைதான் என்றாலும், நாள் முழுவதும் படப்பிடிப்பை அருகிலிருந்து கவனித்து வருகிறார்.



வேட்டைக்காரன் songs

Labels:


Oru Chinna I.mp3
http://www.mediafire.com/?rz3dzxhlaiz

Nan Adicha.mp3
http://www.mediafire.com/?2uyjjqynjzd

Puli Urumudhu.mp3
http://www.mediafire.com/?z4mk1tznjyz

Oru Chinna II.mp3
http://www.mediafire.com/?zgqwocmfdzh

En Uchimandai.mp3
http://www.mediafire.com/?2ynzze3zd1r

Karigalan Kala.mp3
http://www.mediafire.com/?zjnmkzndqdm





எகிறும் நயன்தாரா!

Labels:

என்னை அடிக்க ரம்லத்துக்கு எந்த உரிமையும் இல்லை. அவர் என்னை அடிக்க முயன்றால் நான் யார் என்று காட்டவேண்டி வரும் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

நடிகர் - இயக்குநர் பிரபுதேவா காதலித்து கைப்பிடித்தது ரம்லத்தை. ஆனால் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு ரம்லத்தை விட்டுப் பிரிந்து நயன்தாராவுடன் ஒன்றாகச் சுற்ற ஆரம்பித்துவிட்டார். இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதோடு, தனி பங்களாவில் குடித்தனம் நடத்துவது வரை போய்விட்டார்களாம்.

இந்நிலையில் சமீபத்தில் தான் இயக்கிய முதல் இந்திப் படமான வான்டட் ப்ரிமியர் ஷோவுக்கு நயன்தாராவுடன் ஜோடியாகச் சென்ற பிரபுதேவா, பத்திரிகையாளர்களையும் ஜோடியாகவே சந்தித்து பேட்டி கொடுத்தார்.

இதன் எதிரொலியாக, பிரபு தேவா மனைவி பிரபல பத்திரிகையாளர்களை தனித்தனியாக அழைத்து தனது குமுறலை பேட்டியாகத் தந்தார்.

அதில், அடுத்தவர் கணவர் மீது ஆசைப்பட்டு அபகரித்துக் கொள்ளும் நயன்தாரா போன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், நயன்தாராவை எங்காவது இனி நேரில் பார்த்தால் அடிப்பேன் என்றும் கூறியிருந்தார் ரம்லத்.

இது பற்றி கேரளாவில் இருந்த நயன்தாராவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம். அவர் கூறுகையில், "பிரபுதேவாவுடன் காதலா என பத்திரிகையாளர்கள் தொடர்ந்து நச்சரித்த போதும் பல முறை தெளிவான என் பதிலைக் கூறிவிட்டேன்.

என்னை அடிக்க அவர் யார்... என்ன உரிமையிருக்கிறது அவருக்கு?

ரம்லத் என்னை நேரில் பார்க்கும்போது அதை நான் பார்த்துக்கொள்வேன். என்னை சபிக்கவோ, விமர்சிக்கவோ யாருக்கும் தகுதியோ, உரிமையோ கிடையாது. எனது வாழ்க்கையை நான்தான் முடிவு செய்ய வேண்டும்.

என்னைப் பற்றி என் குடும்பத்தாருக்கு நன்றாக தெரியும். அவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். மற்றவர்களின் பேச்சுகளை பற்றி நான் கவலைப்படவில்லை..." என்றார் நயன்தாரா.



நடிகை சினேகாவிடம் சில்மிஷம்

Labels:

சினேகாவுக்கு ரொம்ப சினேகமாக இருக்கிறது சர்ச்சைகள். இப்போதுதான் ரியல் எஸ்டேட் அதிபருடனான சர்ச்சை கொஞ்சம் ஓய்ந்தது. அதற்குள் அடுத்த சர்ச்சை.

திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகை கடை ஒன்று உள்ளது. இதன் 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. இதில் நடிகை சினேகா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


இதைத்தொடர்ந்து இன்று காலையே சின்னகடைவீதியில் ஏராளமான ரசிகர்களும், பொது மக்களும் கூடினர். சுமார் 11 மணி அளவில் நடிகை சினேகா சுடிதார் அணிந்து நகைக் கடைக்கு வந்தார். அப்போது அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் முண்டியத்தனர்.

அப்போது கூட்டத்தில் சிக்கிய சினேகாவிடம் வாலிபர் ஒருவர் இடுப்பை கிள்ளி “சில்மிஷம்” செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நடிகை சினேகா கடையின் காவலாளியிடம் நீல நிற சட்டை அணிந்த வாலிபர் தான் சில்மிஷம் செய்ததாக கூறினார்.

அதனை தொடர்ந்து காவலாளி 2 பேர் அந்த நபரை தேடினர். அப்போது அங்கு நின்ற நீல நிற சட்டை அணிந்த வாலிபர் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

அப்போது பாதுகாப்புக்கு நின்ற சப்-இன்ஸ்பெக்டர் சிவராமனும், ஏட்டுவும் வாலிபரை அடிப்பதை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும் காவலாளிகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

போலீசரிடம் கடை காவலாளிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சினோகா அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார்.

பின்னர் போலீசார் அந்த வாலிபரையும் 2 காவலாளியும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அந்த வாலிபர் மேலசிந்தாமணி காவேரி பார்க்கை சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்றும் நிதிநிறுவன அதிபர் என்றும் தெரிய வந்தது.


அவர் போலீசாரிடம் கூறும் போது , நான் எனது மனைவியுடன் கடைக்கு சென்றேன். அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது எனது கை தெரியாமல் சினேகா மீது பட்டு இருக்கலாம்” என்று கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.





வேட்டைக்காரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா

Labels:

சன் பிக்சர்ஸ் வழங்கும் வேட்டைக்காரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. விஜய் - அனுஷ்கா நடிப்பில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் படம் வேட்டைக்காரன். பாபுசிவன் இயக்கியுள்ள இப்படத்துக்கு விஜய் ஆன்டனி இசை. கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா, சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடந்தது.

இதற்காக விழா மேடையில் வெள்ளை குதிரையில் அமர்ந்து கவ்பாய் காஸ்ட்யூமில் விஜய் பாய்ந்து வருவதுபோன்ற பின்னணி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதன் இருபக்கமும் பல கெட்டப்பில் விஜய்யின் பேனர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பாடல்களின் சி.டி.யை டைரக்டர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார் வெளியிட, விழாவில் பங்கேற்ற நட்சத்திர வி.ஐ.பி.க்கள் பெற்றுக்கொண்டனர்.


அதைத் தொடர்ந்து படத்தில் விஜய் பலவித தோற்றங்களில் நடித்துள்ள டிரைலர் திரையிடப்பட்டது. படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களும் நேரடியாக அரங்கேற்றப்பட்டன. படத்தில் பாடிய பாடகர்களே மேடையில் எல்லா பாடல்களையும் பாடினர். ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் ஆட்டம் ஆடி, ஆரவாரம் செய்தனர்.


விழாவில் விஜய் பேசியதாவது:


இப்படத்தை தயாரித்துள்ள எம்.பாலசுப்ரமணியம் சிறந்த தயாரிப்பாளர். படப்பிடிப்பில் ஆலோசனை தந்ததுடன், எனக்கு நம்பிக்கையும் கொடுத்தார். கில்லி, குருவி படங்களில் தரணியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுசிவன் இப்படத்தை இயக்கி உள்ளார். அவரது ஸ்டைலைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்.


இந்தப் படத்துக்கு விஜய் ஆன்டனி கடினமாக உழைத்திருக்கிறார். அவர் எந்த படத்துக்கு இசை அமைத்தாலும் 2 பாடல்களையாவது ட் செய்துவிடுவார். நினைத்தாலே இனிக்கும் படத்தில் பனாரஸ் பட்டுக்கட்டி பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. குத்து பாடல்களுக்கு இசை அமைத்தாலும் அதில் எங்காவது மறைத்து மெலடியை சேர்த்துவிடுவார்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இப்படத்தை வாங்கி இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். அதைக் கேட்டவுடன் சந்தோஷமாகவும், ஷாக்காகவும் இருந்தது. கலாநிதி மாறன், சக்ஸேனா மற்றும் அவரது குழுவினருக்கு எனது நன்றி.


இவ்வாறு விஜய் பேசினார். பின்னர் ரசிகர்கள் வற்புறுத்தியதால் நான் அடிச்சா தாங்கமாட்டே. பாடலின் சில வரிகளை விஜய் பாடினார்.


விழாவில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், மிஷ்கின், எஸ்.ஏ.சந்திசேகர், ஷோபா, தரணி, சிவா, லிங்குசாமி, சேரன், பேரரசு, கே.வி.ஆனந்த், ஆர்.கண்ணன், வி.வி.கதிர், தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், ராம்குமார், எடிட்டர் மோகன், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஜீவா, கார்த்தி, ரவிசங்கர், சலீம்கோஷ், சிபி, ஷாம், கருணாஸ், ஷக்தி, நகுலன், நடிகைகள் அனுஷ்கா, அனுஜா ஐயர், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, மோசர்பேர் தனஞ்செயன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



ஜெய்ஆகாஷ் பதிலடி!

Labels:




தனக்கு டூப் போட்டு முதலிரவுக் காட்சியை எடுத்துவிட்டார் என்று ஜெய் ஆகாஷ் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் சுனைனா. மேற்படிக் காட்சியை விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார் சுனைனா.

ஆனால் அதே வேகத்தில் மறுப்பையும் தனது புகாரையும் நடிகர் சங்கத்தில் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஜெய் ஆகாஷ். நான் டூப் போட்டு அந்த காட்சிகளை எடுக்கவில்லை. அதில் நடித்திருப்பது அவர்தான். என் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதுதான் காதலில் விழுந்தேன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. அப்போது என்னிடம் வந்து அந்தப் படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சினார். நான்தான் போனால் போகிறது என்று அதில் நடிக்க அனுமதித்தேன். எங்கள் ஒப்பந்தப்படி படம் முடியாமல் வேறு படங்களில் நடிக்கக் கூடாது. ஆனால் அதையெல்லாம் பொருட்டாக நினைக்காமல் நான் உதவி செய்ததற்கு அவர் காட்டிய நன்றிக் கடன் இதுதானா? சங்கமே விசாரிக்கட்டும் என்கிறார் ஜெய் ஆகாஷ்.





ராவண் பாடல் இணையதளத்தில்

Labels:


இணையதளம் தலைவலி தளமாக மாறி வருகிறது. ராணுவ பாதுகாப்புடன் நடத்தப்படும் எந்திரன் படக்காட்சிகளையே சுட்டு நெட்டில் வெளியிடுகிறார்கள் என்றால், மற்ற படங்கள் பற்றி கூற‌ தேவையில்லை. வலைதளம் மணிரத்னத்தின் ராவண் படத்துக்கும் வினைதளமாக மாறியிருக்கிறது.

சமீபத்தில் எந்திரன் படத்தின் பாடல் காட்சியொன்று யு டியூபில் வெளியானது. சில நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ, பெரு நாட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இதுதவிர படத்தின் சில பிரதான ஸ்டில்களும் வெளியாயின.

வேட்டைக்காரன் படத்தின் பாடல் ஒன்றும் இணையத்தில் வெளியானது. பாடலை கேட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இது வேட்டைக்காரன் பாடல் அல்ல என்று தெ‌ளிவுபடுத்தினார். அதன் பிறகே அனைவருக்கும் நிம்மதி வந்தது.

இந்நிலையில் யு டியூபில் சக்கைபோடு போடுகிறது, பைரான்பி ஜென்னத் ஹே.. என்ற பாடல். இது மணிரத்னத்தின் ராவண் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடலாம். படத்தின் ஸ்டில்ஸையே பத்திரமாக பாதுகாக்கும் மணிரத்னம், பாடலை எப்படி கோட்டைவிட்டார் என கோடம்பாக்கத்தில் நெற்றி சுருக்குகிறார்கள்.

பட்டு‌க்கோட்டையா‌ரின் பாடல் வ‌ரிதான் நினைவுக்கு வருகிறது, திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.




நயன் சவால்!

Labels:

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தில் வாயையே திறக்காமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி ரமலத் இப்போது பத்திரிகைகளிடம் தனது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக கண்ணீரும் கவலையுமாக முன்னணி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், இனிமேலும் என் கணவருடன் நயன்தாராவை பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன் என்று கூறியிருப்பதுதான் அதிர்ச்சி.

அந்த பேட்டியில் அப்படி என்னதான் கூறியிருக்கிறார் ரமலத்?

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும். நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்? இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ரமலத்.

உடனடியாக இந்த பேட்டி குறித்த தகவல் சென்னையில் இருந்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் போனது. பேட்டியை போனிலேயே படித்து காண்பித்தார்களாம். முழுவதையும் கேட்ட நயன் சொன்ன பதில்தான் டெரர். என்னை அடிப்பேன் என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமலத். இதை வைத்தே நான் அவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடியும். வருகிற 28 ந் தேதி விஜய் டி.வி நடத்தவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நானும் பிரபுதேவாவும் சேர்ந்து கலந்து கொள்ளப் போகிறோம். முடிந்தால் அங்கு வந்து அடிக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டாராம். ஆக, 28 ந் தேதி இருக்கு பஞ்சாயத்து!




காமசூத்ரா வீடியோவில் ராக்கி சாவந்த்!

Labels:

எப்போதும் பரபரப்பு தன்னைச் சுற்றிச் சுழன்றபடியே இருக்க வேண்டும் என்பதுதான் நடிகை ராக்கி சாவந்தின் ஒரே விருப்பம்.

சுயம்வரம், நிச்சயதார்த்தம், அதை ரத்து செய்தது என பத்திரிகைகளின் முதல்பக்கத்துக்கு தொடர்ந்து தீனிபோட்டு வரும் ராக்கி இப்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது சர்ச்சை என்றுகூட சொல்ல முடியாது. பரபர செய்தி... அவ்வளவுதான்.

காமசூத்ரா வீடியோவில் அவர் தத்ரூபமாக தோன்றி அதிர வைத்துள்ளார். இணையத்தில் இப்போதைய பரபரப்பு இந்த காமசூத்ரா வீடியோதான்.

இந்தப் படத்தில் இருப்பது ராக்கி சாவந்த் இல்லை என்று ஆரம்பத்தில் மறுப்பு கூறப்பட்டது. இப்போது, 'அட ஆமால்ல... ராக்கி சாவந்த்தான்' எனச் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

'காமசூத்ரா சொல்லித் தரும் ராக்கி சாவந்த்' எனும் தலைப்பில் இந்த வீடியோக்கள் அனைத்து தேடியந்திரங்களிலும் கிடைக்கின்றன.

"திரையுலகுக்கு வரும் முன்பு ராக்கி பல வேலைகள் பார்த்தவர் என்றும், காமசூத்ரா கற்றுத் தந்ததும் அதில் ஒரு வேலையாக இருக்கலாம்!" என்றும் மும்பை பத்திரிகைகள் எழுத ஆரம்பித்துள்ளன.

இந்த பரபரப்பையும் ஜாலியாக என்ஜாய் பண்ணுகிறார் ராக்கி, வழக்கம்போல!



நாயகி தேடும் தனுஷ்

Labels:

உண்மையிலேயே கோடம்பாக்கத்தில் ஹீரோயின் பஞ்சம் தலைவி‌ரித்தாடுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தனுஷ்.

ஆடுகளம் படத்தில் ஒப்பந்தமான த்‌ரிஷா, இந்தி வாய்ப்பு வந்ததும் ஆடுகளத்துக்காக வாங்கிய அட்வான்ஸை திருப்பி‌க் கொடுத்தார். இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் ஸ்ரேயா. வெற்றிமாறன் படத்தை தொடங்க தாமதமானதால் அவர் படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆடுகளம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஹீரோயின் இல்லாமல் என்பது முக்கியமானது. பட யூனிட் ஹீரோயின் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது.

தெலுங்கில் ராம்சரண் தேஜா, ஜெனிலியா நடித்த ரெடி படத்தை தமிழில் ‌ரீமேக் செய்கிறார்கள். தமிழில் நடிப்பவர் தனுஷ். அவருக்கு ஜோடியாக நடிக்க ஜெனிலியாவிடம் கால்ஷீட் கேட்டிருந்தனர். இந்தியில் இரண்டு கோடி சம்பளம் வாங்கும் ஜெனிலியா கால்ஷீட் இல்லையென்று கைவி‌ரிக்க, வேறு நடிகையை தேடி வருகிறார்கள்.

யாராவது இருந்தால் சொல்லுங்கப்பா.



ரஜினி மகள் வைத்த கடன்

Labels:


கோவா படத்தைத் துவங்கிக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் படத்தை இன்னும் முடித்தபாடில்லை வெங்கட் பிரபு. அவரது சிக்கனத்தை மீறி இந்தப் படத்தில் தாராளமாக விளையாடிக்கொண்டிருக்கிறாராம். ஆரம்பத்தில் சொன்ன பட்ஜெட்டைவிடப் பல மடங்கு அதிகரித்துவிட்டதாம். ஆனாலும் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்துக்கொண்டிருக்கிறார் சௌந்தர்யா.



இந்த நிலையில் கோவா டீம் மலேசியாவுக்குப் போனது. கிட்டத்தட்டப் பதினைந்து நாட்களுக்கு மேலாக அங்கே தங்கியிருந்தார்களாம். சுல்தான் தி வாரியர், கோவா ஆகிய இரண்டு படங்களிலுமே பணம் முடங்கிவிட்டதால் மலேசியா ஷெட்யூலுக்குத் திடீர்ப் பணத் தட்டுப்பாடு வந்துவிட்டதாம் சௌந்தர்யாவுக்கு. படப்பிடிப்பு முடிந்து கிளம்பும் போது சுமார் ஐம்பது லட்ச ரூபாய் பற்றாக்குறை. ஆனாலும் ரஜினி மகள் என்பதால் ஓட்டல் நிர்வாகம் உள்ளிட்ட மொத்த பேரும் தமிழ்நாட்டுக்குப் போய் அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம். வாக்குறுதி கொடுத்ததைப் போலவே சென்னைக்கு வந்து பணத்தை அனுப்பி வைத்தாராம் சௌந்தர்யா.





காதலனை கைப்பிடிக்கிறார் மேக்னா நாயுடு

Labels:

காதலனை கைப்பிடிக்கிறார் மேக்னா நாயுடு

சிம்புவுடன் ‘சரவணா’, சரத்குமார் ‘வைத்தீஸ்வரன்’ உட்பட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகை மேக்னா நாயுடு. இவரும் இந்தி நடிகர் குஷால் பஞ்சாபியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இதை கேட்டதும் இருவருமே மறுத்து வந்தனர். இந்நிலையில் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.


கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்கள் திருமணம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் மும்பையில் நடக்கிறது.


இதுகுறித்து மேக்னா தரப்பில் விசாரித்தபோது, ‘‘குஷால், மேக்னாவும் நடனத்தை காதலிப்பவர்கள். இருவரும் பல முறை வெளிநாடுகளில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


அப்போது திருமணம் செய்ய விரும்புவதாக குஷால், மேக்னாவிடம் கூறினார். சில மாதங்கள் கழித்து மேக்னாவும் சம்மதித்தார். இருவீட்டு பெற்றோர்களும் சம்மதித்ததை அடுத்து நிச்சயதார்த்தம் நடந்தது’’ என்று கூறினர்.



உன்னைப்போல் ஒருவன் சுவாரஸ்யம்

Labels:

எந்தக்கதைக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு சிறப்பம்சம். அதுவும் சினிமா போன்ற வெகுஜன மீடியாவிற்கு சுவாரஸ்யம், மிக அவசியம். இதுதான் கதை, க்ளைமேக்ஸை திரையில் காணுங்கள் என்று சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. காலையில் ஆரம்பித்து மாலையில் முடிகிறது கதைக்கரு. இரண்டு மணி நேர படபடப்பு. பரபரப்பு. பரிதவிப்பு. துவக்கம் முதல் இறுதிவரை கமல்ஹாசனுக்கு ஒரே உடை. மோகன்லாலுக்கு இரண்டு.

தமிழ் மக்கள் ரசனைக்கேற்ப படம் எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது மக்களை ஏய்க்கும் குணம். அறிவீனம். ஹிந்தியில் ஆமிர், அப் தக் சப்பன் என்று பல சினிமாக்கள் உலகத்தரம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டன. அப்படி ஒரு பயணம்தான் உன்னைப்போல் ஒருவன்.

ஹேராம் படத்தில் ஒரு வசனமுண்டு. வயதான சாகேத் ராம் கமலைப் பார்த்து பேரன் சாகேத் ராம், “எங்க தாத்தா எப்பவுமே ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னு எந்தக் கதையையும் ஆரம்பிக்க மாட்டார். நான் இருந்த ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னுதான் ஆரம்பிப்பார்” என்பார். அதைப்போல பெரும்பாலான படங்களில் வெகுவாரியான முக்கியத்துவத்தைத் தன் கதாபாத்திரத்திற்கே கொடுப்பவர் கமல்.

ஆனால், இந்தப் படத்தின் நாயகன் என மோகன்லாலையே சொல்லவேண்டும். நடிப்பதற்கான அதிகபட்ச வாய்ப்பும் அவருக்கே. மிடுக்கான தோற்றமும் கம்பீரமான குரலுமாய் லால் இன்னொரு சிவாஜி. கமலுக்கு இயல்பான கதாபாத்திரம். தீபாவளிக்கு டிவி பேட்டி கொடுப்பதுபோல எல்லா காட்சிகளிலும் அனாசயமாய் நடித்துவிட்டுச் செல்கிறார். கருவறுத்தல் பற்றிப் பேசுகையில் நம்மையுமறியாமல் கண்களில் நீர் ஊறுகிறது.

ஆரிஃப் ஆக வரும் போலீஸ் கதாபாத்திரம் கன கச்சிதம். எங்கேயோ பார்த்ததுபோல இருக்கிறதே என்று யோசித்தால், அட… அபியும் நானும் படத்தில் சர்தார்ஜியாக வரும் ஹீரோ! கமல்ஹாசன் படத்தில் மற்ற நடிகர்களைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமே.

சேதுராமனாய் வரும் மற்றொரு போலீசிடம் மோகன்லால், “ஒரு வேளை இந்த ஆப்ரேஷன் தோத்து நீங்க…” என்று ஆரம்பிக்கையில், “செத்துப்போய்ட்டான்னு கேக்க்றீங்களா சார், நோ ப்ராப்ளம் சார். ட்யூட்டி ஃபர்ஸ்ட்” என்கிறார். இப்படிப்பட்ட ஆட்கள் உண்மையிலும் இருக்கிறார்கள் என்று நினைக்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது.

ஷ்ருதியின் இசை எப்படி இருக்கிறதென்ற ஆர்வத்துடன்தான் சென்றேன். ஆனால், படத்தின் போக்கில் இசையை ஊர்ந்து கவனிக்கவில்லை. எப்படியும் மோசம் என்று சொல்லமுடியாது. இசை சரியில்லை என்றால் உடனே காட்டிக் கொடுத்துவிடும். கேமரா, தொழில்நுட்பம், வசனம் என அனைத்தும் கதையைச் சுற்றியே பயணிக்கிறது. பிரதானமாய். பிரமாதமாய்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகனானதால், விமர்சனத்தை இத்துடன் நிறுத்திக் கொள்வது நலமென்று தோன்றுகிறது. பாடல், நடனம், காதல், காமெடி, சண்டை, பஞ்ச் வசனம், ஏன்… ஹீரோயின் கூட இல்லாத தரமான தமிழ் சினிமா தந்த கமல்ஹாசனுக்கு எம் வந்தனங்கள். உன்னைப்போல் ஒருவனாய் இருக்க நாங்களும் விரும்புகிறோம்.





ஆறுமுகம், திருதிரு ,துறுதுறு

Labels:

இந்த வாரம் நான்கு படங்கள் வெளியாகின்றன. ஆறுமுகம், திருதிரு துறுதுறு, கண்ணுக்குள்ளே மற்றும் சூரியன் சட்டக்கல்லூ‌ரி.

பரத் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா ஆறுமுகத்தை இயக்கியிருக்கிறார். ப்‌ரியாமணி ஜோடி. வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பது படத்தின் ப்ளஸ். தேவா இசையமைத்திருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.

சத்யம் சினிமாஸும், ‌ரியல் இமேஜும் இணைந்து திருதிரு துறுதுறு படத்தை தயா‌ரித்துள்ளன. நந்தினி இயக்கம். ரொமா‌ண்டிக் காமெடியான இதில் அ‌ஜ்மலுடன் பெங்களூருவை சேர்ந்த ரூபா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அபர்ணா நடித்திருக்கும் படம் கண்ணுக்குள்ளே. இதில் ஒரு குழந்தைக்கு தாயாக அவர் நடித்துள்ளார். லேனா மூவேந்தன் படத்தை இயக்க மிதுன் ஹீரோவாக நடித்துள்ளார்.

சிவசக்தி பாண்டியன் பல வருடங்களுக்குப் பிறகு சூ‌ரியன் சட்டக்கல்லூரி படத்தை தயா‌ரித்துள்ளார். க‌ஜினி, மித்ரா என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஆர்.பவண் இயக்கம். படத்தின் கதையை சிவசக்தி பாண்டியனே எழுதியிருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார்.

கடைசி நிமிடத்தில் மேலும் சில படங்கள் திரைக்கு வர வாய்ப்புள்ளது.



விஜயின் வேட்டைக்காரன் + சூர்யாவின் ஆதவன்

Labels:

தமிழ் சினிமா ரசிகர்களிடையில் மிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இரு படங்கள் வெகுவிரைவில் வெளியாகவுள்ளன.
சினிமா வாழ்க்கையின் பிரவேசத்திலிருந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை மனதில் இடம் பிடித்து தற்போது அவர்களினாலேயே விமர்சிக்க வைத்துள்ள நடிகர் விஜயின் வேட்டைக்காரன்.

இளைஞர்கள் ரசிக்கின்ற, இளம் பெண்கள் காதலிக்கின்ற தற்போதைய சினிமா ரசிகர்களின் நாயகன் சூர்யாவின் ஆதவன்.

தொடர் வெற்றிகளை தந்து முன்னணியிலுள்ள சூர்யா மற்றும் தற்போது சற்று சினிமாவில் வீழ்ந்துள்ள விஜய் ஆகியோரின் இரு படங்கள் வெளியாகவுள்ளன.

இதில் விசேடம் என்னவென்றால் உண்மையான இரு நண்பர்களின் போட்டிக்காலம் இது!

எனது இன்றைய பதிவு சிறிய ஆய்வு தான்! இது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்! சும்மா.

அரசியல் வாழ்க்கையில் பிரவேசிக்க எண்ணியுள்ள விஜயை அவருடைய பல ரசிகர்கள் கைவிட்டுள்ளனர். சிலர் அவரை தனது மனதிலிருந்தே நீக்கிவிட்டனர்.



விஜயின் வெற்றி படங்களுக்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும், முக்கியமான ஒரு காரணம் உள்ளது. அது தான் விஜய் அனைவரது உள்ளங்களிலும் இடம் பிடித்திருந்தமை.

ஆனால் இன்று அவர் பல ரசிகர்களின் மனதில் பிடித்திருந்த இடத்தை இழந்துள்ளார். காரணம் அவரது அரசியல் பிரவேசம்!

அதனால் வெளிவரவுள்ள வேட்டைக்காரன் எவ்வளவு சிறந்த படமாக இருக்கின்ற போதிலும், அது வெற்றி பெறுமா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்த வண்ணமே உள்ளது.

விஜயின் இறுதியாக வெளிவந்த படமான வில்லு வரையுள்ள அனைத்து படங்கள் வெளிவரும் போதும் ஓர் எதிர்பார்ப்பு மனதில் இருந்த வண்ணமே இருக்கும். ஆனால் அது இப்போ இல்லை.

ஆனால், சூர்யாவின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான கதைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.



இவரின் ஒரே நோக்கம், சினிமாவில் தான் கைப்பற்றியுள்ள நிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே!

அதனால் வெளிவரவுள்ள ஆதவன் அனைவரது உள்ளங்களிலும் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளதாக சினி ரசிகர்களின் தெரிவிக்கின்றனர்.

இதனால் இம்முறை வெளிவரும் படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என்பது அனைவரது மனதிலும் உள்ள ஒரு கேள்வி!
இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்! நிச்சயம் காலம் பதில் கூறும்!





Dr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்...

Labels:

ண்ணா. நான் ஒரு தடவை கோட் பண்ணா, அதை நானே ரிவியூ பண்ண மாட்டேன்ணா.

நான் இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சி சாப்ட்வேர் இஞ்சினியரானவனில்லை, டுடேரியல் காலேஜ்ல படிச்சி ஆனவன்.

SW லைஃப் சைக்கிள் ஒரு வட்டம்டா. இன்னைக்கு நல்லா ஓடறது நாளைக்கு புட்டுக்கும், இன்னைக்கு புட்டுக்கறது நாளைக்கு நல்லா ஓடும்.

PM : என்ன விஜய் புது மாட்யூல்ல மாட்டிக்கிட்டியா?
வி : அந்த மாட்யூல், இந்த மாட்யூல், உங்க மாட்யூல், எங்க மாட்யூல் எல்லாத்துலயும் நான் கில்லிடா.
PM : பேசும் போது எல்லாம் கில்லியா பேசு, ஆனா கோடிங்ல மட்டும் ஜல்லியடி.

ஓட்டேரி நரி : விஜய், நம்ம பிராஜக்ட் UATல புட்டுக்கிச்சி
விஜய் : விடு. புரடக்‌ஷன்ல பாத்துக்கலாம்.

(இதை புரியாதவங்க கில்லி படம் இன்னொரு முறை பார்க்கவும் ;) )

நீ கோட் தேட மட்டும் தான் கூகுள் யூஸ் பண்ணுவ. நான் ஸ்பெல்லிங் செக் பண்ணவும், சினிமா விமர்சனம் தேடவும், ஹீரோயின் படம் தேடவும், வெப் சைட் தேடவும், நியூஸ் தேடவும், கேம்ஸ் தேடவும், சினிமா ரிலிஸ் தேடவும், கிரிக்கெட் இன்ஃபர்மேஷன் தேடவும், அரசியல் விஷயம் தேடவும், சினிமா டவுன்லோட் லிங் தேடவும் கூகுள் யூஸ் பண்ணுவேன்டா.

நீ செக் பண்ணா மட்டும் தான் ப்ரோக்ராம் எர்ரர் கொடுக்குமா? ஏன், நாங்க எல்லாம் செக் பண்ணா எர்ரர் கொடுக்காதா? கொடுக்குமா கொடுக்காதா?
கொடுக்கும். நான் எழுதன ப்ரோக்ராம் யார் செக் பண்ணாலும் எர்ரர் கொடுக்கும்.

எவன் கோடிங் பண்ணா கம்ப்யூட்டர் வெடிச்சி பொறி கிளம்புறது கண்ணுக்கு தெரியுதோ அவன் தான் விஜய். நான் தான் விஜய்.




கவுண்டர்’ஸ் டெவில் ஷோ - சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்

Labels:

வழக்கமா நம்ம நிகழ்ச்சிக்கு ஒரு நடிகரையோ இல்லை இயக்குனரையோ இல்லன்னா ஏதாவது பிரபலமான வலைப்பதிவரையோ தான் அழைச்சிட்டு இருந்தோம். முதல் முறையா இந்த நிகழ்ச்சிக்கு துறை சார்ந்த ஒருவரை கூப்பிட்டு வந்திருக்கோம். அது என்ன துறை சார்ந்த ஒருத்தர்னு பாக்கறீங்களா? அதான் எப்பவுமே தமிழ் படத்துல பல்பு வாங்கறதுக்குனே வருவாங்களே ஒரு கூட்டம், அதான் அந்த சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ். அதுல இருந்து ஒருத்தரை புடிச்சிட்டு வந்திருக்கோம். இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாடா கீபோர்ட் மண்டையா. அது என்னடா நாய் மாதிரி கழுத்துல டோக்கன் மாட்டிருக்க?

சா.இ : இது டோக்கன் இல்லை. என் டேக்.

க: டேய் அதை ஏண்டா இங்க போட்டிருக்க? எப்ப பார்த்தாலும் அதை கழுத்துலயே மாட்டிட்டு அலையறீயே. ஏன் அது இல்லைனா கார்ப்பரேஷன் காரன் வந்து நாய் புடிக்கிற வண்டில ஏத்திட்டு போயிடுவானு பயமா?

சா.இ : நோ மிஸ்டர் பெல். இது இருந்தா தான் ஊர்ல எல்லாரும் மதிப்பாங்க. அதான்.

க: டேய் நாயே நாயே. இப்படியே நீங்க போட்டுட்டு திரிஞ்சா இன்னும் கொஞ்சம் நாள்ல உங்களை யாரும் மதிக்க மாட்டாங்கடா. மிதிப்பாங்க.
அப்பறம் ஏன்டா தப்பு தப்பா இங்கிலிஸ் பேசினாலும் கூச்சப்படாம ஊருல இருக்குற ஆயவைக்கூட விட்டு வைக்காம ”ஹை பாட்டி, யூ ஆர் மை ஸ்வீட்டினு” இங்கிலிஸ்ல பேசறீங்க?

சா.இ : யூ சீ. நாங்க எவ்ரிடே யூ.எஸ், யூ.கே, ஆஸ்ட்ரேலியா க்ளைண்ட்ஸ்'கிட்ட இண்ட்ராக்ட் பண்றோம். சோ வீ ஆர் யூஸ்டு டூ இட். வாட் சே யா?

க: என்னடா மண்டையா 1431 பயாரியா பல்பொடி விக்கறவன் மாதிரி மலேசியா, சிங்கப்பூர்னு கலர் கலரா ரீல் விடற. சரி, நீங்க எல்லாம் தனியா எங்கயும் சாப்பிடவே போக மாட்டீங்களா? கூட்டமா பொண்ணுங்களைக் கூப்பிட்டு தான் போவீங்களா?

சா.இ : யூ ஆர் மிஸ்டேக்கன். அது டீம் இண்ட்ராக்‌ஷன்.

க : டேய் மௌஸ் பால் மண்டையா. டீம் இண்ட்ராக்‌ஷனு கண்ட பொண்ணுங்களையும் கூப்பிட்டு பீசா ஹட்டு, மெக் டோனால்ட்ஸ்னு போறிங்களே. என்னைக்காவது ஃபேமிலி இண்ட்ராக்‌ஷனு சொல்லி அப்பா அம்மாவை இந்த மாதிரி கூப்பிட்டு போய் சந்தோஷப்பட வெச்சிருக்கீங்களாடா?

சா.இ : நோ மிஸ்டர் கவுண்ட்ஸ். அவுங்களுக்கு அந்த மாதிரி எல்லாம் சாப்பிட்டு பழக்கமில்லை. அவுங்களுக்கு அதெல்லாம் ஒத்துக்காது.

க: ஆமாம். இவர் பொறக்கும் போதே ஒரு கைல பர்கரும், இன்னொரு கைல பீசாவும் வெச்சிக்கிட்டு பொறந்தாரு. டேய் ஜாவா மண்டையா, யார் கைல ரீல் விடற. தோசைல சட்னி சாம்பார் ஊத்தி பிசையற மாதிரி பீசால சாஸ் ஊத்தி சாப்பிடற நாயி நீயீ. உனக்கு இவ்வளவு பில்ட் அப்பா?

சா.இ : @#$

க: சரி, அது ஏன்டா ட்ரெயின்ல ஏறினா செண்பகமே செண்பகமேனு பால் கறக்கற ராமராஜன் மாதிரி டவுசர் போட்டு திரியறீங்க?

சா.இ : யூ சி இந்தியாவுல ரொம்ப ஹாட் மேன். வென் ஐ வாஸ் இன் யூ எஸ்

க: ஆரம்பிச்சிட்டானுங்கடா. இவனுங்க அக்கப்போரு தாங்கலயேடா. இதே ஒரு அட்டு ஃபிகர் வெயிட் பண்ண சொல்லுச்சினாலும், மெரினா பீச்லயும் உச்சி வெயில்ல நிப்பானுங்க. ஆனா வெளில இவனுங்க கொடுக்குற பில்ட் அப்புக்கு மட்டும் அளவே இல்லையேடா. அது ஏன்டா பொண்ணுங்களுக்கு வேலை வந்தா மட்டும் போட்டி போட்டு லாஜிக் சொல்லி தரேனு விடாம கடலை போடறீங்க. அதே பசங்களுக்கு ஒண்ணுனா அப்ஸ்காண்ட் ஆகிடறீங்க?

சா.இ: இதெல்லாம் யாரோ புரளி கிளப்பிவிட்டுட்டாங்க கவுண்ட்ஸ். அவனவனுக்கு இருக்குற ஆணியையே இப்பல்லாம் புடுங்க முடியல. இதுல எங்க இருந்து லாஜிக் சொல்லி தரது.

க: அது என்னடா எப்ப பார்த்தாலும் ஆணி, கடப்பாரைனு? எல்லாம் சரி, அது ஏன் நீங்க எல்லாம் லூயி பிலிப், பீட்டர் இங்கிலாண்ட், வேன் ஹிசைனுனு ரெண்டாயிரம் கொடுத்து தான் சட்டை பேண்ட் எல்லாம் வாங்கி போடுவீங்களா? வெள்ளைக்காரனே திருப்பூர்ல இருந்துதாண்டா வாங்கி போடறான். நீங்க என்னனா அதையே திரும்ப அவன்கிட்ட இருந்து கண்ட பிடிக்கு காசு கொடுத்து வாங்கறீங்க?

சா.இ: பிராண்டட் சட்டையெல்லாம் வாங்கினா தான் ரொம்ப வருஷம் தாங்குது.

க: டேய். சும்மா அடிச்சி விடாதடா பீட்டர் இங்கிலாண்ட் மண்டையா. உங்க வீட்ல போய் உங்க அப்பா சட்டை பேண்ட் எல்லாம் எடுத்து பாரு. பத்து, இருபது வருஷத்துக்கு முன்னாடி எடுத்ததெல்லாம் கூட இன்னும் நச்சுனு இருக்கும். அவர் என்ன உன்னை மாதிரி ஆயிரக்கணக்குல கொடுத்தா எடுத்தாரு. சும்மா பில்ட் அப் கொடுக்காத மேன். அது எல்லாம் சரி, இந்த சின்ன வயசுல உங்களுக்கு எல்லாம் காது கேக்காம போயிடுச்சே அது எப்படிடா?

சா.இ : இல்லையே. எனக்கு நல்லா காது கேக்குமே.

க: அப்பறம் எதுக்குடா எல்லாரும் காதுல எப்ப பார்த்தாலும் செவிட்டு மெஷினை வெச்சிக்கிட்டே அலையறீங்க?

சா.இ : அது செவிட்டு மெஷின் இல்லை கவுண்ட்ஸ். ஐ பாட். ஆப்பிள் கம்பெனி கண்டுபிடிச்சது.

க: ஆப்பிள் கம்பெனி கண்டுபிடிச்சிதோ, வாழப்பழக் கம்பெனி கண்டுபிடிச்சிதோ அதை என்னத்துக்குடா எப்ப பார்த்தாலும் காதுல வெச்சிட்டு அலையறீங்க? பாட்டு கேக்காம ஒரு நிமிஷம் கூட உங்களால வெளிய வர முடியாதா?

சா.இ: எல்லாம் சும்மா பில்ட் அப் தான்.

க: அதான்டா நானும் சொல்றேன். நீங்க கொடுக்கற பில்ட் அப் தான் தாங்க முடியலையேடா, PC ஸ்ரீராம் ரேஞ்சுக்கு கைல ஒரு அடி நீளத்துக்கு கேமரா வெச்சிக்கிட்டு சுத்தறது, அப்ப அப்ப ஆத்தா கோவில்ல குடிக்கிற கூலு, கஞ்சினு சொல்லிட்டு திரியறது, ராத்திரி நேரத்துலயும் ராஜ பார்வை கமல் மாதிரி கூலிங் கிளாஸ் போட்டுட்டு சுத்தறது, மொக்கை படமா இருந்தாலும் முன்னூறு ரூபாய் கொடுத்து மால்ல படம் பாக்கறதுனு நீங்க பண்ற அலும்பு தாங்கலடா. இனிமேவாது திருந்துங்கடா. இல்லைனா இனிமே நான் பேச மாட்டேன். என் கைல இருக்குற கீ போர்ட் தான் பேசும்.

சா.இ: திட்டி மெயில் அனுப்புவீங்களா?

க: உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. நீயெல்லாம் வாங்கினா தான் திருந்துவ.

கவுண்டர் கையில் கீபோர்டை எடுத்து ஓங்க, சா.இ தலை தெறிக்க ஓடுகிறார்.




மணல் கயிறு படம் ரீமேக்

Labels:

மணல் கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்...



வேட்டைக்காரன் விமர்சனம்.

Labels:

இந்த விமர்சனம் யார் மனதையும் புண்படுத்த அல்ல। உங்கள் விருப்பு வெறுப்புக்களை மறந்து சிரிக்கவே.

வேட்டைக்காரன். எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தின் பெயரில் வெளிவர இருக்கும் தற்கால எம்.ஜி.ஆர், சூப்பர் ஸ்டார் விஜய் 'நடிப்பில்' வெளிவர இருக்கும் அதிரடி திரைப்படம். படம்தான் இன்னும் வெளிவரவில்லையே, அதற்குள் எப்படி விமர்சனம் வந்துள்ளது என குழம்ப வேண்டாம். படத்தின் இயக்குனர் என் நண்பனின் நண்பர் அல்ல. அதனால் அவரிடம் மட்டும் இந்தப்படத்தை நேற்று திரையிட்டுக் காட்டியுள்ளார் இயக்குனர். நானும் அப்படியே ஆர்வமிகுதியில் ஒட்டிக்கொண்டு படத்தை பார்த்துவிட்டேன். என்னுடன் அப்படியே ஒரு இருநூறு பேர் பார்த்தனர். அவர்களுடன் ஒரு இரண்டாயிரம் பேர் பார்த்தனர். இது மக்களுக்கு படத்தின் மீதுள்ள ஆர்வத்தையே காட்டியது.

வழக்கமாய் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கெட்டப் போட்டு மேக்கப்பிலும், நடிப்பிலும் வித்தியாசம் காட்டும் விஜய் இந்தப்படத்தில் தனது இயல்பான முகத்தில் நான்கு நாள் மீசை தாடியுடன் நடித்துள்ளார். 'மதுர' திரைப்படத்தில் கர்சீப்பை காலிலும், 'போக்கிரி'யில் கையிலும் கட்டி கெட்டப் மாற்றி நடித்திருந்த விஜய் இந்தப் படத்தில் கர்சீப்பை தலையில் கட்டி மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தோற்றமளிக்கிறார்.

கதை என்னவென்றால், விஜய் உழைத்துதான் 'உணவு' உண்ண வேண்டும் என்ற கொள்கை கொண்ட இளைஞர். ஆனால் தற்சமயம் வேலையில்லாமல் இருக்கும் காரணத்தால் ஓசியில் 'டீ' மட்டுமே குடித்து வாழ்கிறார். இதுவரையில் விஜய் படங்களில் நாம் பார்த்திராத (கேட்டிராத) அறிமுகப் பாடல் இப்படத்தில் உண்டு. 'டண்டனக்கு டண்டணக்கு' என்பதற்கு பதிலாக 'டண்டானக்கு டண்டாணக்கு' என மிகவும் புதிதாக இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. "நீ அடிச்சா தான் மாஸ்.. நான் கடிச்சாலே மாஸ்" போன்ற பஞ்ச் டயலாக்குகளுடன் தொடங்கிய படம், காமடியன் சத்யனுடன் சில நகைச்சுவைகள், பின் உள்ளூர் தாதாவின் கடையடைப்பை எதிர்த்து அவர்களை துவம்சம் பண்ணுதல், பின் ஊர்காரர்கள் இவருக்கு ஆரத்தி எடுத்தல் என்பது போன்ற படு வித்தியாசமான காட்சிகளுடன் கதை விர்ர்ர்ர்ர்ரென நகர்கிறது. இந்நிலையில் நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு பஸ் ஸ்டாப்பில் அனுஷ்காவை சந்திக்கிறார் விஜய். அனுஷ்காவின் பாவாடை ஓரமாக கிழிந்துள்ளதைக் கண்டு அனுஷ்காவை தெருவில் வைத்தே திட்டி தீர்க்கிறார். இந்தியாவின் பொருளாதாரம் இதனால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது பற்றியும், ஓபாமாவின் வீட்டு நாய்க்கு இதனால் எப்படி வயித்துப்போக்கு ஏற்பட்டது எனவும், மிகவும் காட்டமாகவும், தீவிரமாகவும் விளக்குகிறார். தனது வலது கையை மார்பு வரையில் மல்லாக்க உயர்த்தி, "கிழிஞ்சாதான் பாவாட.. கிழியலேனா மானாட மயிலாட" என்று 'அர்த்தத்துடன்' பஞ்ச் டயலாக் பேசுகிறார். அனுஷ்காவை கிழிந்த பாவாடையை தைக்கும் படி திட்டிவிட்டு, பின் தன் வீட்டில் தனது கிழிந்த ட்ரவுசரைப் பார்த்து அழுகும் காட்சியில் விஜய் பின்னியிருக்கிறார். அழுதுகொண்டே ஸ்விட்சர்லாந்தில் ஒரு குத்துப் பாட்டு பாடுகிறார். இதற்கு நடுவில் அனுஷ்கா பாவாடையை மாற்றியவுடன் ஒரு குத்துப் பாடல் வருகிறது. (இந்தப் பாடலில் அனுஷ்காவின் உடைக்கு முதலில் போட்டிருந்த கிழிந்த பாவாடையே பரவாயில்லையென ரசிகர்கள் முணுமுணுத்தது கேட்டது) இந்தக்கட்டத்தில் தான் கதையில் யாருமே எதிர்பாராத திருப்பம் வருகிறது, அதாவது அனுஷ்காவுக்கு விஜய் மேல் காதல் பிறக்கிறது. ஆனால் விதியோ சதி செய்கிறது!! "யாருமே பார்க்காத அந்த பாவாடை கிழிசலை நீ எப்படி பார்த்த? நீ பார்த்துதொலைச்சது மட்டுமல்லாமல் ஊரையெல்லாம் கூட்டி என் தங்கச்சியோட மானத்தை வாங்கிவிட்டியேடா!!" என கத்திக்கொண்டே அனுஷ்காவின் அண்ணன் திரையில் நுழையும் சமயம் இடைவேளை வந்துவிடுகிறது.

ஓரமாய் பாவாடை கிழிந்ததற்காக ஆத்திரத்தில் கத்திய விஜய், குத்துப்பாடல்களில் பாவாடையே போடாமல் ஆடும் அனுஷ்காவை ஒன்றுமே சொல்லாதது பெண் ரசிகைகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்துப் பாட்டு முடிந்தவுடன் விஜயின் முதுகில் கத்தியால் ஒரு குத்து விழுகிறது. திரும்பிப் பார்த்தால் தன்னுடன் ஒரு காலத்தில் கபடி விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டனும், அனுஷ்காவின் அண்ணனும் நிற்கிறார்கள். தாங்கள் குத்தவில்லையென்றும், இயக்குனர் தான் விஜய் செய்யும் அலும்பு தாங்காமல் குத்தச் சொன்னார் எனவும் அவர்கள் எவ்வளோ முறை கெஞ்சியும் விஜய் அவர்களை மன்னிக்காமல் ஊரே அதிரும்படி கர்ஜிக்கிறார். பின் குத்துப்பட்ட காயம் ஆறுவதற்குள் அனுஷ்காவை திருமணம் செய்து காட்டுவதாக சபதம் எடுக்கிறார் விஜய். பின்பாதி படத்தில் முதுகில் ரத்தம் சொட்டியபடியே மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். விஜய்யின் வேதனையை பொறுக்க முடியாத நண்பர் சத்யன், விஜய்யின் ரத்தகாயத்தில் 'M-Seal' பூசி அடைக்க வரும் சமயத்தில், விஜய் அவரை தடுத்து, உழைப்பின் உன்னதத்தை பற்றி, நமீதாவுடன் ஒரு ரீமிக்ஸ் பாடல் பாடுகிறார். "ஏன்டா இவன் சம்பந்தமில்லாம பாடுறான்?" என்ற குழப்பத்தில் அழுதுகொண்டே சத்யன் வெளியேரும் போது நம் கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. வில்லனின் சதியால்(??!!!) நண்பனை இழந்த ஆத்திரத்தில், தான் செய்த சபதம் கடைசி சீனில் நினைவுக்கு வர, வெறிகொண்ட வேங்கையென எதிரிகளை வேட்டையாடப் புறப்படுகிறார் வேட்டைக்காரன் விஜய்.

வில்லனை வீழ்த்தினாரா? பஞ்சாப் கேப்டன் அனுஷ்காவின் மேல் வைத்திருக்கும் ஒரு தலை காதல் என்ன ஆனது? சபதத்தில் விஜய் ஜெயித்தாரா? முதுகில் ரத்தம் நின்றதா? சத்யன் என்ன ஆனார்? ஆடியோ கேசட்டில் இருக்கும் இன்னும் ஒரு குத்துபாடல் எப்போது வரும்? போன்ற பல விஷயங்களுக்கு அழகாக விடை சொல்கிறது இந்த வேட்டைக்காரன்.

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய விஜயின் வித்தியாசமான படங்களின் வரிசையில், மற்றுமொரு வைரம் தான், இந்த வேட்டைக்காரன். வேட்டைக்காரன் வெல்வான்.





கவிதைக்கு உண்மையும் அழகு..

Labels:



1)முதலிரவு முடிந்த அடுத்த நாள்
நீ சோம்பல் முறிப்பதை
பார்க்கும் போது,
மீண்டும் முதலில்
இருந்து தொடங்கத்
தோன்றும் எனக்கு.

2)நீ முறித்துபோட்ட
சோம்பல்களை தேடுவதாய் சொல்லி
நான் காற்றில் துளாவும் போது
நீ சிரிப்பதில் இருக்கிறது
நம் அடுத்த சோம்பலுக்கான வித்து..

3)கண்ணாமூச்சி ஆட்டத்தில் என்
கண்களை நீ கட்டிவிடும் போதெல்லாம்
என் கண்கள்,
துணியை தாண்டி உன்னைப் பார்க்கும்
பரிணாம வளர்ச்சியை
பெற்று விடுகின்றன..

4)சேலை கடையில்
உன்னைப் பார்த்து,
"இந்த பொம்மை
கட்டியிருக்கும் சேலை
போல் வேண்டும்"என
கடைக்காரனிடம் கேட்கும்
பெண்களை பார்த்திருக்கிறேன்..

5)காமம் முடிந்தபின்னும்
கட்டிப்பிடிக்க முடியும்
என்பது,
காதலர்கள் மட்டுமே
அறிந்த ரகசியம்..

6)"பூவை பறித்துக்கொடு"
என அழுகும்
பெண்களை பார்த்திருக்கிறேன்..
"பூவை பறிக்காதே"
என அழுகும் பெண்
நீ மட்டுமே..!

7)அழகாய் இருக்கிறாய் என
நீ திமிர் செய்வதில்
வருத்தமில்லை எனக்கு..
என் வருத்தமெல்லாம்,
உன் அழகுக்கு
இந்த திமிர் பத்தாது
என்பதுதான்..!!

8)"ஒரே ஒரு முத்தம் கொடேன்" என
நான் கெஞ்சும் போதெல்லாம்,
நீ சொல்லும் "முடியாது போடா"க்கள்,
உன் முத்தங்களை விட அழகானவை..
அதற்காகவே பலமுறை
நான் முத்தம் கேட்டதுண்டு..!!

9)"ம்ம்ஹ்ம்ம், சீ, போடா" என்ற
வார்த்தைகளை மட்டுமே வைத்து
பல மணிநேரம் அழகாய் பேச
உன்னால் மட்டுமே முடியும்..!

10)"நாயே"என நீ செல்லமாய்
திட்டும் போதெல்லாம்
எங்கோ ஒரு நாய்
வாலையாட்டுவதற்கு பதிலாக
தலையை ஆட்டுகிறது..

11)அவ்வப்போது,
"நீ கணவனாய்
நான் மனைவியா
இருந்திருக்கக் கூடாதா?"
என நான் வருந்தியதுண்டு..
பிள்ளைப் பேறு என்ற பெயரில்
உனக்கு வலியைக் கொடுக்க
விரும்பவில்லை நான்..!

12)"நீ விளையாட்டுக்கு கூட
திட்ட மாட்டாயா?"என
நீ கேட்டபோது
திட்டுவதென்றால் என்ன என்பதே
எனக்கு மறந்துபோயிருந்தது!!

13)என் கவிதைகள்
என்னை விட
உனக்குதான் விசுவாசமாய் உள்ளன..
உன்னை வருத்தப்பட வைத்தால்
தானாக அழிகின்றன..

14)கவிதைக்கு பொய்யழகாமே!!
உன்னைப் பற்றிய கவிதைகளில்
உண்மையை சொல்கிறேனே,
பரவாயில்லையா உனக்கு?





உனக்காக நானும், காதலும்..

Labels:


*நாம் சந்திக்கப் போவதாய்
முடிவு செய்யும் இடத்துக்கு
நாம் வருகிறோமோ இல்லையோ...
சரியான நேரத்திற்கு
காதல் வந்துவிடுகிறது..!!

*ஐந்து மணிக்கு
நீ வருவதாய்ச் சொன்னால்,
ஐந்து மணிக்காக நானும்,
உனக்காக ஐந்து மணியும்
காத்திருக்கிறோம்...!

*உன்னை அடிக்கடி
வெளியே அழைத்துச் செல்வதெல்லாம்
நீ கிளம்பு அழகை ரசிப்பதற்காகத்தான்..
மனைவி கிளம்பும்போது
அவசரப்படுத்தும் கணவர்கள்
மடையர்கள்..!!

*நீ சாமி கும்பிடும்
அழகைப் பார்க்கையில்,
நாத்திகனாய் இருந்தாலும்
'சாமி இருந்துவிட்டுப் போகட்டுமே'
எனத் தோன்றுகிறது!!

*உன் வயதை மட்டும்
ஆண்டுகளில் அல்ல,
'ரிக்டரிலேயே' பதிவு
செய்கிறார்கள்!!





பாக்யராஜ் பதற்றம்...

Labels:

கண்டேன் காதலை எப்போ ரிலீஸ்? பரத் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களோ, இல்லையோ? பாக்யராஜ் எதிர்பார்கிறார். இவர் இயக்கி வரும் சித்து ப்ளஸ் 2 படமும், கண்டேன் காதலை படமும் ஒரே கதையாம்.
திரைக்கதை மன்னரான பாக்யராஜ் தனக்கேயுரிய இஞ்சி, பூண்டு, சோம்பு சமாச்சாரங்களை கலந்து எக்கச்சக்க டேஸ்ட்டில் தருவார் என்பது இருக்கட்டும்... இவரை போலவே க.கா டைரக்டர் கண்ணனும் சிந்தித்திருந்தால்? அந்த பயம்தான் பாக்யராஜுக்கு.

கண்டேன் காதலை படமே ஜப் வீ மெட் என்ற இந்தி படத்தின் ரீமேக்தான். இதற்காக படத்தை போட்டு போட்டு பார்த்து உருவாக்கியிருக்கிறார்கள். படத்தை முடித்து தயாரிப்பாளர் வசம் ஒப்படைத்த கண்ணன், இரண்டு படத்தையும் பக்கத்து பக்கத்திலே போட்டு பாருங்க. ஏதாவது வித்தியாசம் இருந்தா சொல்லுங்க என்று கூறிவிட்டு கடமையை முடித்துக் கொண்டாராம். அப்படியிருக்க, சித்துவும், கண்டேன் காதலையும் ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லை.

போகட்டும்... இரு படங்களின் கதை என்ன? அப்பா-அம்மா பிரிவு, கம்பெனி நஷ்டம், திரும்பிய இடத்திலெல்லாம் கெட்ட பெயர், இப்படி விரக்தியின் எல்லைக்கே போகும் ஹீரோ, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு எங்கெங்கோ சுற்ற, ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கிறான் துறுதுறுப்பான ஒருத்தியை. அவளது புத்துணர்ச்சி இவனுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மறுபடியும் சொந்த ஊருக்கு வந்து கம்பெனியை முன்னேற்றி வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

இந்த சில வரி கதையை எப்படி பரிமாறியிருக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது இந்த விஷயத்தை முன்கூட்டியே அறிந்தவர்களுக்கு!



விஜய் துவங்கப் போகும் சேனல்

Labels:


கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே தனக்காகத் தனியாக ஒரு சேனல் துவங்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் விஜயகாந்த். நினைத்த மாதிரியே அதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டாராம். வருகிற தேர்தலுக்குள் அவரது சேனல் பிரகாசிக்கும் என்கிறார்கள். இதற்காக ஆள் எடுக்கும் வேலைகளில் மும்முரமாகிவிட்டார் கேப்டனின் மச்சினர் சுதிஷ்.


ஆனால் காதும் காதும் வைத்த மாதிரி எப்பவோ விண்ணப்பித்து அனுமதியும் வாங்கிவிட்டாராம் விஜய். அரசியலுக்கு வர வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பாகவே எதற்கும் இருக்கட்டும் என்று விண்ணப்பித்தார்களாம். விஜய் சேனல் துவங்கப் போகிறார் என்றதும், வெளிநாட்டில் வாழும் இந்தியர் ஒருவர் கோடிக்கணக்கில் முதலீடு செய்து பார்ட்னராக முன் வந்திருக்கிறாராம். மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறது விஜய் வட்டாரம்.




மீடியாவிடம் சிக்கிய நயன் ,பிரபுதேவா !

Labels:

Next தீபாவளி இவங்களுக்கு தலை தீபாவளியா இருக்குமோ? இருக்கிற பொழப்பையெல்லாம் விட்டுட்டு இந்த மேட்டர்லேயே பழியா கிடக்கிற தமிழ்சினிமா ரசிக பெருமக்களுக்கு.... நீங்க நினைக்கிற மாதிரி அது ஒன்ணும் அவ்வளவு சாதாரணமான விஷயமா தெரியலே மக்களா... நயன்தாராவும், பிரபுதேவாவும் நெருக்கமாக இருந்தாலும் எந்த விழாவுக்கும் ஒன்றாக வந்ததில்லை. ஆனால் கடந்த வாரம் மும்பையில் ஒரு தியேட்டரில் இருவரையும் ஒன்றாக பார்த்த மீடியா வூடு கட்டி அடித்துவிட்டது.

தான் இயக்கிய வான்ட்டட் படத்தின் முதல் காட்சியை பார்க்க மும்பைக்கு போயிருந்தார் பிரபுதேவா. கூடவே நயன்தாராவும். பிரிமியர் ஷோவில் எல்லாரும் வந்திருக்கும் போது நயன்தாராவும் இருந்திருந்தால் சிக்கல் இல்லை. ஆனால் இது பிரிமியர் இல்லை. தியேட்டர் ஷோ. அங்குதான் ஜோடியாக போனார்கள் இருவரும். இருவரையும் வழி மறித்துக் கொண்ட மீடியா, உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா? என்று கேள்வி எழுப்ப, நோ கமெண்ட்ஸ் என்று பதிலளித்தார் நயன்தாரா.

ஆனால் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக தெலுங்கு, மற்றும் இந்தி படவுலகத்தில் கிசுகிசுக்கிறார்கள். இப்போதிருக்கும் சூழலில் அது சாத்தியமா? பிரபுதேவா முறைப்படி விவாகரத்து வாங்கிய பிறகுதானே திருமணம் செய்து கொள்ள முடியும்? இப்படி ஏராளமான கேள்விகள். இந்த விவகாரத்தில் பிரபுதேவாவுக்கு ஆதரவாக பலரும், அவரது மனைவி ரமலத் என்கிற லதாவுக்கு ஆதரவாக சிலரும் இருக்கிறார்கள். இவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் இந்த காதல் கல்யாணத்தில் முடியுமா? அல்லது பாதியிலேயே புட்டுக் கொள்ளுமா என்று தெரியும்.






கருணாநிதியுடன் கமல் சந்திப்பு

Labels:

Kamal Haasan
முதல்வர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் கமல். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டுள்ளது.

கமல் நடித்துள்ள உன்னைப்போல் ஒருவன் படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் முதல்வர் [^] பாத்திரமும் இடம்பெறுகிறது. அந்த ரோலில் யாரையும் நடிக்க வைக்காமல், முதல்வர் கருணாநிதியின் குரலை இடம்பெறச் (மிமிக்ரி?) செய்துள்ளார் கமல். மேலும் முதல்வரின் கோபாலபுரம் வீடும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

முதல்வரின் அனுமதி பெற்றே கமல் இதைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. முதல்வரின் வீடு திரையில் இடம்பெற்றது இதுவே முதல்முறை.

இந்த நிலையில் தனது படம் [^] வெளியான ஒரு வாரம் கழித்து முதல்வரைச் சந்தித்தார் கமல் [^]. முதல்வரின் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டாராம்.