feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count
Sep
24

எகிறும் நயன்தாரா!

Labels:

என்னை அடிக்க ரம்லத்துக்கு எந்த உரிமையும் இல்லை. அவர் என்னை அடிக்க முயன்றால் நான் யார் என்று காட்டவேண்டி வரும் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

நடிகர் - இயக்குநர் பிரபுதேவா காதலித்து கைப்பிடித்தது ரம்லத்தை. ஆனால் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு ரம்லத்தை விட்டுப் பிரிந்து நயன்தாராவுடன் ஒன்றாகச் சுற்ற ஆரம்பித்துவிட்டார். இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதோடு, தனி பங்களாவில் குடித்தனம் நடத்துவது வரை போய்விட்டார்களாம்.

இந்நிலையில் சமீபத்தில் தான் இயக்கிய முதல் இந்திப் படமான வான்டட் ப்ரிமியர் ஷோவுக்கு நயன்தாராவுடன் ஜோடியாகச் சென்ற பிரபுதேவா, பத்திரிகையாளர்களையும் ஜோடியாகவே சந்தித்து பேட்டி கொடுத்தார்.

இதன் எதிரொலியாக, பிரபு தேவா மனைவி பிரபல பத்திரிகையாளர்களை தனித்தனியாக அழைத்து தனது குமுறலை பேட்டியாகத் தந்தார்.

அதில், அடுத்தவர் கணவர் மீது ஆசைப்பட்டு அபகரித்துக் கொள்ளும் நயன்தாரா போன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், நயன்தாராவை எங்காவது இனி நேரில் பார்த்தால் அடிப்பேன் என்றும் கூறியிருந்தார் ரம்லத்.

இது பற்றி கேரளாவில் இருந்த நயன்தாராவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டோம். அவர் கூறுகையில், "பிரபுதேவாவுடன் காதலா என பத்திரிகையாளர்கள் தொடர்ந்து நச்சரித்த போதும் பல முறை தெளிவான என் பதிலைக் கூறிவிட்டேன்.

என்னை அடிக்க அவர் யார்... என்ன உரிமையிருக்கிறது அவருக்கு?

ரம்லத் என்னை நேரில் பார்க்கும்போது அதை நான் பார்த்துக்கொள்வேன். என்னை சபிக்கவோ, விமர்சிக்கவோ யாருக்கும் தகுதியோ, உரிமையோ கிடையாது. எனது வாழ்க்கையை நான்தான் முடிவு செய்ய வேண்டும்.

என்னைப் பற்றி என் குடும்பத்தாருக்கு நன்றாக தெரியும். அவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். மற்றவர்களின் பேச்சுகளை பற்றி நான் கவலைப்படவில்லை..." என்றார் நயன்தாரா.



0 comments:

Post a Comment