Sep
24
ராவண் பாடல் இணையதளத்தில்
Posted by
bayo
Labels:
cinema

இணையதளம் தலைவலி தளமாக மாறி வருகிறது. ராணுவ பாதுகாப்புடன் நடத்தப்படும் எந்திரன் படக்காட்சிகளையே சுட்டு நெட்டில் வெளியிடுகிறார்கள் என்றால், மற்ற படங்கள் பற்றி கூற தேவையில்லை. வலைதளம் மணிரத்னத்தின் ராவண் படத்துக்கும் வினைதளமாக மாறியிருக்கிறது.
சமீபத்தில் எந்திரன் படத்தின் பாடல் காட்சியொன்று யு டியூபில் வெளியானது. சில நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ, பெரு நாட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இதுதவிர படத்தின் சில பிரதான ஸ்டில்களும் வெளியாயின.
வேட்டைக்காரன் படத்தின் பாடல் ஒன்றும் இணையத்தில் வெளியானது. பாடலை கேட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இது வேட்டைக்காரன் பாடல் அல்ல என்று தெளிவுபடுத்தினார். அதன் பிறகே அனைவருக்கும் நிம்மதி வந்தது.
இந்நிலையில் யு டியூபில் சக்கைபோடு போடுகிறது, பைரான்பி ஜென்னத் ஹே.. என்ற பாடல். இது மணிரத்னத்தின் ராவண் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடலாம். படத்தின் ஸ்டில்ஸையே பத்திரமாக பாதுகாக்கும் மணிரத்னம், பாடலை எப்படி கோட்டைவிட்டார் என கோடம்பாக்கத்தில் நெற்றி சுருக்குகிறார்கள்.
பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது, திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment