feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count
Sep
24

பாக்யராஜ் பதற்றம்...

Labels:

கண்டேன் காதலை எப்போ ரிலீஸ்? பரத் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களோ, இல்லையோ? பாக்யராஜ் எதிர்பார்கிறார். இவர் இயக்கி வரும் சித்து ப்ளஸ் 2 படமும், கண்டேன் காதலை படமும் ஒரே கதையாம்.
திரைக்கதை மன்னரான பாக்யராஜ் தனக்கேயுரிய இஞ்சி, பூண்டு, சோம்பு சமாச்சாரங்களை கலந்து எக்கச்சக்க டேஸ்ட்டில் தருவார் என்பது இருக்கட்டும்... இவரை போலவே க.கா டைரக்டர் கண்ணனும் சிந்தித்திருந்தால்? அந்த பயம்தான் பாக்யராஜுக்கு.

கண்டேன் காதலை படமே ஜப் வீ மெட் என்ற இந்தி படத்தின் ரீமேக்தான். இதற்காக படத்தை போட்டு போட்டு பார்த்து உருவாக்கியிருக்கிறார்கள். படத்தை முடித்து தயாரிப்பாளர் வசம் ஒப்படைத்த கண்ணன், இரண்டு படத்தையும் பக்கத்து பக்கத்திலே போட்டு பாருங்க. ஏதாவது வித்தியாசம் இருந்தா சொல்லுங்க என்று கூறிவிட்டு கடமையை முடித்துக் கொண்டாராம். அப்படியிருக்க, சித்துவும், கண்டேன் காதலையும் ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லை.

போகட்டும்... இரு படங்களின் கதை என்ன? அப்பா-அம்மா பிரிவு, கம்பெனி நஷ்டம், திரும்பிய இடத்திலெல்லாம் கெட்ட பெயர், இப்படி விரக்தியின் எல்லைக்கே போகும் ஹீரோ, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு எங்கெங்கோ சுற்ற, ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கிறான் துறுதுறுப்பான ஒருத்தியை. அவளது புத்துணர்ச்சி இவனுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மறுபடியும் சொந்த ஊருக்கு வந்து கம்பெனியை முன்னேற்றி வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

இந்த சில வரி கதையை எப்படி பரிமாறியிருக்கிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது இந்த விஷயத்தை முன்கூட்டியே அறிந்தவர்களுக்கு!



0 comments:

Post a Comment