feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count
Sep
24

எந்திரன் க்ளைமாக்ஸ்...

Labels:


எந்திரன் படத்தின் க்ளைமாக்ஸ் மிக மிக ரகசியமாக படமாக்கப்பட்டு வருகிறது, சென்னையில்.

படத்தின் இறுதியில் இடம்பெறும் நான்கு நிமிட நெருப்பு சண்டைக் காட்சி இது.

பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுக்கூடம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்படுவது போலவும் அதில் ரஜினியின் சண்டை இடம்பெறுவதுமாக இந்தக் காட்சி படமாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியே இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

இந்தக் காட்சி படமாக்கப்படுவதை எந்திரன் கிராபிக்ஸ் குழு (ஹாலிவுட் நிறுவனம் இது) உன்னிப்பாகக் கவனித்து, பின்னர் தேவைக்கேற்ப கிராபிக்ஸ் காட்சிகளை அதனுடன் இணைத்து பிரமாண்டப்படுத்த உள்ளது.

ஜார்ஜ் லூகாஸ் என்பவரால் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தி இது. இந்தியப் படம் ஒன்றில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

இந்தக் காட்சிகள் படமாகும்போது ரஜினிக்கு கொஞ்ச நேர வேலைதான் என்றாலும், நாள் முழுவதும் படப்பிடிப்பை அருகிலிருந்து கவனித்து வருகிறார்.



0 comments:

Post a Comment