feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!

Labels:

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II


நம்ம டவுசர் புகழ் கி"ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.

காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.

ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!

கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.

ரா.ரா: யார் யாரு???

கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!

செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.

கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட...

ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???

கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???
....

2 நிமிடம் கழித்து

கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?

1 நிமிடம் கழித்து:

கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.

ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?

கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்... ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.

ஜி.பாலையா: ஹாஹாஹா

கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.

காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...

கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...சொல்லு

புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!

கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?

செந்தில்: ஒரு விளம்பரம்தான்...

கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????

கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...

கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?

கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...

கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!

ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...





SW இஞ்சினியர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

Labels:

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க. ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு வெள்ளிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சபடாம சொல்லிட்டு போக முடியுது?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகஷேன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க. அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது?

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க?




கவுதம் லூசுதேவ மேனன்

Labels:


இந்த கட்டுரை, கவுதம் 'லூசு'தேவ மேனனைத் தவிர வேறு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...!!

சமீப காலமாக நம்மூர் மக்கள் கவுதம்மேனனை தலையில் தூக்கிவைத்து ஆடுவதில் மும்முரமாக உள்ளதைக் கண்டதின் பலனாகவே இதை எழுதுகிறேன். இவரின் முதல் சில சினிமாக்களில் இவர் பெயர் வெறும் 'கவுதம்'. பின் 'கவுதம் மேனன்'. பின் 'கவுதம் வாசுதேவ மேனன்'. பின்வரும் நாட்களில் கவுதம் 'லூசு'தேவ மேனனாகக் கூட மாறலாம்.

ஆங்கிலப் படங்களை திருட்டு விசிடியில் பார்த்து படம் எடுப்பதை வரவேற்பவன் நான். ஏனென்றால் இங்கிருக்கும் பல இயக்குனர்கள் சொந்தமாக சிந்தித்து படமெடுத்தால் நம் கதி அவ்வளவுதான். ஆனால் கவுதம் என்ற அறிவுஜீவி, தான் காப்பி அடித்ததை ஒத்துக்கொள்ள மறுப்பதோடல்லாமல், காப்பியடிக்கப்பட்ட கதை தன் வாழ்வில் தனக்கு நடந்த சம்பவம் என கொஞ்சமும் கூச்சப்படாமல் சொல்லும் ஒரு வெட்கங்கெட்ட கேரக்டர். அது எப்படியோ தெரியவில்லை, கவுதம் வாழ்க்கைல நடந்த கதையை அமெரிக்காகாரன் 'Forrest Gump'னு TomHanksச வச்சு படமா எடுத்துட்டான். (என்னால கவுதமை பற்றி எழுத்துத் தமிழ்ல இதுக்கு மேல எழுத முடில. அதுனால பேச்சுத்தமிழ்லயே எழுதிறேன்.!!)

முதல்ல 'வானரம்' ஆயிரம் படத்த பாப்போம். ஒரு அருமையான அமெரிக்க படத்தை காப்பி அடிச்சதையாவது ஒழுங்கா அடிச்சுச்சா இந்த அதிகப்பிரசங்கி? முதல் காட்சில புருசன் சூர்யா ரத்தம் ரத்தமா கக்குறத பார்த்து பொண்டாட்டி சிம்ரன் சாவகாசமா "ஹேய் வாட் ஹேப்பண்ட் (Hey, what happened?)"னு ரொம்ப ஜாலியா, கூலா ஒரு வசனம் பேசுச்சு பாருங்க, எனக்கு ரத்தவாந்தியே வந்துருச்சு. அடுத்த சீன்ல அடுத்த அட்டாக் என்னன்னா, அப்பன் சாகுறத பார்த்து மகள் ரசிச்சுட்டே சொல்லுவா "(mom.See.He is smiling!!)மாம். சீ.. ஹி இச் ஸ்மைலிங்"னு!!! அடங்கொன்னியா!! என்னால முடிலடா சாமி!!
ஸ்கூல் ஃபீசு கட்ட வக்கில்லாம தங்கச்சிகிட்ட கடன் வாங்குன அப்பன், பையன அமெரிக்கா அனுப்புவாராம். பையன் அங்கபோயி ஜாலியா கும்மாளம் போடுவாராம்!! அப்பன், பையனோட நண்பர்கள் முன்னாடி பொண்டாட்டி மேல சாஞ்சுகிட்டே தண்ணியடிப்பாராம், அதுவும் 1980கள்ல. இப்ப அப்படி பண்ணாலே எந்தப் பையனும் செருப்பால அடிப்பான். ஆனா படத்துல பையனும் பொண்டாட்டியும், அப்பன் தண்ணியடிக்கிறத கும்பலா ரசிக்கிறாங்கப்பா.

எல்லாத்தையும் விட காமெடி, "மாலினி நீ அவ்ளோ அழகு"னு சூர்யா சொல்றப்ப சிம்ரன் ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க, அய்யோ அம்மா... செத்துப்போன எங்கப்பத்தா கூட அழகா சிரிக்கும்டா சாமி. படம் இப்ப முடிஞ்சிரும் அப்ப முடிஞ்சிரும்னு பார்த்தா கிழவன் சூர்யா நடந்துகிட்டே அட்வைச போடுறான், பையன் ஆடிகிட்டே அருவைய போட்றான். "ஐ தின்க் ஐ ஃபெல் இன் லவ் வித் யூ (i think i fell in love with you)"னு படத்துல அத்தனை பேரும் பத்து தடவ சொல்றாய்ங்க. எனக்கு பைத்தியமே புடிச்சு போச்சு. ஆங்கில படத்த காப்பியடிச்ச சரி, அதுக்காக வசனத்தையுமா ராசா காப்பியடிக்கிறது??!!!

இன்னொன்னு..
கவுதம் படத்துல எல்லாருமே நீளமா முடி வளர்த்துகிட்டு கெட்ட கெட்ட வார்த்தையா பேசுவாய்ங்க. எல்லாமே ஆங்கிலப் படத்துல வர்ற "Fuck, Cunt, Son of a bitch, etc" போன்ற மிகக் கேவலமான வார்த்தைகள். இந்த லூசுதேவ மேனன் அதைக் கூட விடுறதில்ல. எல்லா வார்த்தையையும் அப்படியே தமிழ்ல டப்பிங் பண்ணி வசனம் எழுதிரும். நமக்கு தியேட்டர்ல பாக்குறப்ப "****தா வாடா" "பெரிய போலீஸ் ******டையாடா நீ", "உன் பொம்பளை****** தூக்கிட்டேன்டா"னு முக்கால்வாசி சென்சார் பண்ணித்தான் கேக்கும்! ஆனா ஈயடிச்சான் காப்பில கவுதமை மிஞ்ச முடியாது. பெரிய ஜார்ஜ் புஷு பேரன்னு நினைப்பு, காதலை சொல்றதை கூட "நான் உன்ன விரும்புறேன்"னு இவரு படத்துல சொல்ல மாட்டாய்ங்க. "ஐ ஃபெல் இன் லவ் வித் யூ"னு எஸ்.எம்.எஸ் அனுப்புற மாதிரிதான் பேசுவாய்ங்க. அப்பத்தான் படம் உலகசினிமா அளவுல இருக்குமாம். இப்படி போயி ஒரு பொண்ணுகிட்ட காதலை சொன்னா, லவ் லெட்டர் இல்ல, நம்மல மென்டல்னு நினைச்சு நம்ம மேல ஒரு ஈவ்டீசிங் கேசு கூட கொடுக்காது.

வேட்டையாடு விளையாடு படம் அப்படியே RED DRAGON மற்றும் இன்னும் சில சீரியல் கில்லர் படங்களின் காப்பி. அதுல வில்லன்களை ஓரினசேர்க்கையாளர்களாகவும், பெண்களை வல்லுறவு கொள்ளும் வெறியர்களாகவும் காமிச்சிருப்பாரு இந்த அரைவேக்காட்டு இயக்குனர்!! எங்க போயி சொல்றது. அந்தப் படத்துல நடிச்சதுக்கு கமலே வருத்தப்பட்டது வேற விஷயம். பச்சைக்கிளி முத்துச்சரம் 'Derailed' என்ற படத்தின் அச்சு அசல் காப்பி.

சமீபத்துல ஒரு இணையதள நேர்காணல்ல இந்த லூசுதேவ மேனன் ஒரு செம காமெடி பண்ணாரு. நிருபர், இயக்குனர் மிஸ்கின் பத்தி கேட்டதுக்கு, கருத்து சொல்ல மாட்டாராம் இவரு. ஏன்னா மிஸ்கின் இரண்டு படம் தான் இயக்கியிருக்காராம். ஆனா சுப்பிரமணியபுரம் நல்ல படம், சசிகுமார் நல்ல டைரக்டர்னு மட்டும் அதே நேர்காணல்ல சொல்லுவாராம். சசிகுமார் மட்டும் என்ன மூணு படமா இயக்கிருக்காரு!!
http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon-2.html

சூர்யா மட்டும் இல்லென்னா வாரணம் ஆயிரம் 'சாம் ஆண்டர்சனின்' 'யாருக்கு யாரோ' ரேஞ்சுக்கு ஆயிருக்கும்.

நண்பர்களே நிறைய படங்களை பாருங்க. எது நல்ல படம், யார் நல்ல இயக்குனர் என்பதை முதலில் உங்கள் மனதில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஊரில் நிறைய பேர் சொல்கிறார்கள் என நீங்களும் குமபலோடு கோவிந்தா போடுவதால்தான் கவுதம் வாசுதேவ மேனன் போன்ற ஆட்கள் நிறைய முளைக்கிறார்கள்.

ஆனா எனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. ஏன்னா அடுத்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ல கவுதமோட சோடி போட்டுருக்குறது 'ஆம்பிளை ஷகீலா' சிம்பு. அதுவும் போக, எப்பவும் இணையத்துல நல்ல ஆங்கில பாடல்களை தேடி, சுட்டு, மெட்டு போடும் ஆரீஸ் ஜெயராஜும் இந்தப்படத்துல கிடையாது. சிம்புவும்-கவுதமும் மட்டும் சேர்ந்துருக்காங்கப்பா.



நடிகர் சங்கத்தில், ஜெய் ஆகாஷ் புகார்

Labels:



மதன் படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்தது சுனைனாதான் என்று அப்படத்தின் இயக்குநர் ஜெய் ஆகாஷ் கூறியுள்ளார்.

நடிகர் ஜெய் ஆகாஷ் முதன் முதலாக டைரக்டு செய்துள்ள படம், மதன். இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார்.

சுனைனா, ரேணுகா மேனன் ஆகிய இருவரும் ஜெய் ஆகாஷ் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். படத்தில் படுக்கை அறை காட்சிகளுடன் கூடிய ஒரு பாடல் காட்சி இடம் பெறுகிறது. அதில், சுனைனா படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார்.

ஆனால், அந்த காட்சியில் நான் நடிக்கவில்லை. ஒரே ஒருநாள் மட்டுமே மதன்' படத்தில் நான் நடித்தேன். எனக்கு பதில், டூப்' நடிகையை நடிக்க வைத்து ஆபாசமாக படமாக்கி இருக்கிறார்கள்'' என்று சுனைனா புகார் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சுனைனா மீது ஜெய் ஆகாஷ் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்து இருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

காதலில் விழுந்தேன் படத்துக்கு முன்பே சுனைனாவை, மதன்' படத்துக்காக நான் ஒப்பந்தம் செய்து இருந்தேன். மதன்' படத்தில்தான் சுனைனா முதல் முதலில் நடித்தார். அவரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினேன்.

படுக்கை அறை காட்சியில் அவர்தான் நடித்து இருந்தார். டூப்' நடிகையை பயன்படுத்தவில்லை. முதல்கட்ட படப்பிடிப்பின்போது சுனைனா என்னிடம் வந்து, காதலில் விழுந்தேன்' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாகவும், அந்த படத்தில் நடிப்பதற்கு தன்னை அனுமதிக்கவேண்டும் என்றும் கெஞ்சினார்.

ஒரு இளம் நடிகையின் வாழ்க்கை நம்மால் பாதிக்கப்பட வேண்டாம் என்ற பரந்த மனதுடன், காதலில் விழுந்தேன்' படத்தில் நடிப்பதற்கு சுனைனாவுக்கு நான் அனுமதி கொடுத்தேன். அந்த பரந்த உள்ளத்துக்கு சுனைனா நன்றிக்கடன் செய்து விட்டார்.

படத்தில் அறிமுகப்படுத்தியவர்களை எந்த நடிகரும், நடிகையும் மறக்க மாட்டார்கள். கடைசிவரை நன்றிக்கடனாக இருப்பார்கள். சுனைனா நன்றிக்கடனாக இல்லையென்றாலும், என் மீது அபாண்டமாக பழி சுமத்தி இருக்க வேண்டாம். அவரால் என் இமேஜ்' பாதிக்கப்பட்டு விட்டது.

எனவே இந்த பிரச்சினை பற்றி நடிகர் சங்கம் விசாரித்து, சுனைனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெய் ஆகாஷ் கூறியிருக்கிறார்.





my love



என் காதலிக்கு...

நீ காதலி, அன்புடையவள் அல்ல என்பதை அறிவேன். இந்த அறிதலின் மேல் வைத்த காதலில் மட்டுமே இந்தக் கடிதமேயொழிய உன் மேல் காதல் துளியும் கிடையாது. கண்ணாடியில் கல் எறிந்து, அது உடைவதை வேடிக்கைப் பார்க்கும் குழந்தையைப் போல நீ என்னைக் காதலிக்க வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறாய். நான் நொறுங்கி விழுந்த பொழுதுகள் அத்துணையிலும் உன் கால் என் கண்ணீர் துகள்களில் பட்டுக் கிழியாமல் இருப்பதற்காக சற்று தள்ளியே நொறுங்கியிருக்கிறேன்.

கடல் அலைகளில் பெயர் எழுதுவது வேடிக்கையென்றேன். நீ கேளாமல் எழுதி, நம் காதலை அலைகள் தழுவட்டுமென்றாய். அவைகளோ அழித்துப் போயின, அழிந்தும் போயின.
உன் கோபங்கள் எப்பொழுதுமே, தூக்க மறுத்த அம்மாவிடம் குழந்தை காட்டும் கோபம் போல்தான் என நினைத்து, ஏமாந்து போன குழந்தை நான். உன் கோபங்கள் பக்கத்து வீட்டுக்காரனது போன்றவை. நெஞ்சம் கொஞ்சமும் அல்லாது, வஞ்சமும், பாச வறட்சியும் மட்டுமே நிறைந்தது.

எதிர்பார்த்தாய். ஏமாந்துபோனாய். கோபப்பட்டாய். வெளியேறினாய். காதலிக்க மட்டும் இல்லவே இல்லை. என்னைக் காதலிப்பதாய் அடிக்கொரு முறை என் கைப்பற்றி சொன்னாலும் கூட, அடிப்பாவி நீ காதலிக்கவே இல்லை.
நீ ஏன் பிரிந்தாய் என எழுதவோ, சொல்லவோ நேரமில்லையெனக்கு. அது பிடிக்கவுமில்லை. ஏன், எனக்கு அது தெரியவே தெரியாது!!
இன்று இதை எழுதுவதும், நீ இல்லாது, நான் எப்படியிருக்கிறேன் எனத் தெரியத்தான். எனக்கும், உனக்கும், நமக்கும், உலகத்துக்கும்.

உன்னைக் காதலிக்க ஆயிரம் காரணம் இருந்தது என்னிடம். உன்னைப் போன்ற மகள் வேண்டும் என்பதில் இருந்து உன்னையே மகள் போல் பாதுகாக்க வேண்டுமென்பது வரை. உன்னைப் பற்றி எனக்கு எல்லாமும் தெரியுமென்றே நினைத்திருந்தேன். எல்லாம் அல்ல எதுவுமே தெரியாது எனப் புரிந்தது என்னையும் காதலையும் ஏதோ முகம் துடைக்கும் காகிகதத்தைப் போல் நீ எறிந்தபோது. நைந்துபோனேன் நான். கிழிந்துபோனது காதல்.

காதலி பிரிந்ததற்காக உயிர் விடும் ஆண்மையில் அழுக்குப் படிந்த ஆண் நான் கிடையாது. எனக்கானவள், எனக்கருகில் இருந்த நீ அல்ல எனத் தெளிவாய் உணர்த்திச் சென்றிருக்கிறாய். இத்தனை பெண்களில் எவள் என்னவள் எனத் தெரியாவிடினும், நீ அவள் கிடையாது எனக் கூறிச்சென்றிருக்கிறாய். எதற்காய் உயிர் விட?

உலகில் உன்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்களென எனக்குத் தெரியும். அவர்களுக்கு உன்னைப் போல் அல்லாது, கொஞ்சமேனும் அன்புக்கு அர்த்தம் தெரிந்திருக்கக்கூடும். அவர்களில் யாரோ ஒருத்தி எனக்கானவளாக இருக்கலாம். நினைக்கையில் மனம் திரும்பப் புதிதாய் பிறக்கிறது. உயிர்போகும் வலி கொடுத்து உடலில் இருந்து பிய்ந்து போகும் நகம் போலத்தான் தோற்றமளிக்கிறாய் நீ. எதற்காக உயிர் விட?

எப்போதாவது நாம் உறவாடிய பொழுதுகள் உன் நெஞ்சைத் துளைத்து என்னிடம் வருவாயென என் 'இரு'தயத்தின் 'ஒரு தயம்' சொல்லும் போதெல்லாம், அவசரமாய் என் 'மறு தயம்' கேட்கிறது, "மீண்டும் செத்துப் போகப்போகிறாயா?" என்று. எனது ஆனந்தம் ஆரம்பமாவதும், முடிவுறுவதும் எனக்குள் தான், எனக்குள் மட்டும் தான் என தாமதமாய் உணர்த்தினாலும் சரியாக உணர்த்திப் போயிருக்கிறாய். நான் உயிருடன் இருக்கும் போது, பின் எதற்காக உயிர் விட?

உனக்காய் நான் செய்து வைத்த மனைவிக்கான அரியணையில், நீ, அனுபவம் எனும் பூவை வைத்துவிட்டுப் போயிருக்கிறாய். உன்னைக் காதலித்ததைவிட அதிகமாய் நாளை என் மனைவியைக் காதலிக்கக் கற்றுக் கொடுக்கும் அந்தப் பூ. பின் எதற்காக உயிர் விட?

உண்மையாய் காதலிக்காமல் பிரிந்து சென்ற நீயே, என்னைக் காதலிக்க வைக்க முடியுமெனில். நாளை என்னை உண்மையாய் காதலிக்கப் போகிறவள் என்னை என்செய்ய வைப்பாளோ? அதை அனுபவிக்காமல் நான் ஏன் உயிர் விட?

அழகும், அன்பும், காதலும், காமமும் சரியாய் கலந்து நாளை நான் பெறப்போகும் குழந்தையின் கொஞ்சல்களைக் கேட்காமல் செத்தொழிந்து போனால் என் ஆறரிவில் அர்த்தமில்லை என்றே அர்த்தம்.

ஆனாலும்.....

அவ்வப்போது நான் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, என்
தலைக் கவசத்துக்குள் வந்து போகும் உன் கூந்தல் வாசம். லேசாய் என்னை அழவைத்துப் பார்க்கும்.
என் பணப்பையில் எப்போதோ நான் வைத்த உன் புகைப்படம் மங்கிப் போய் இருக்கும், இன்னமும். அதை எடுத்தெறிய எத்தனிக்கும் போதெல்லாம் இன்னும் மங்காமல் மனதின் மூலையில் ஒட்டியிருக்கும் உன் நினைவுக் குப்பைகளில் ஏதோ ஒரு குப்பை என்னைத் தடுக்கும்.
இவை மட்டுமே நான் உன்னை உண்மையாய் காதலித்ததை இன்னமும் எனக்கு சொல்லிக் கொண்டிருப்பவை. காதலிக்கத் தெரிந்தவன் நான், என எனக்கு உணர்த்திக் கொண்டிருப்பவை.
உலகில், மனித கலாச்சாரத்தில் அரிதாய்ப் போன 'காதல்' என்னும் கலையை கற்று தெரிந்த நான், ஏன் உயிர் விட வேண்டும்?





ஸ்ருதிஹாசனை போனில் பாராட்டினார் ஜெயலலிதா

Labels:


உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்திருக்கும் கமல் மகள் ஸ்ருதியை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‌பாராட்டியுள்ளார். சமீபத்தில் வெளிவந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் கமல்ஹாசனின் உன்னைப்ப‌ோல் ஒருவன். சராசரி படங்களை போல் இல்லாமல் இந்த படம் மிகவும் வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஹைலைட்களில் ஒன்று கமலின் மகள் ஸ்ருதிஹாசனின் இசை. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் இவரின் பின்னணி இசை பிரமிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. மேலும் இப்படத்தில் இவர் மூன்று பாடல்களை பாடியுள்ளார். முதல் படத்தி‌லேயே தமது தி‌றமையை நிரூபித்து காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ள ஸ்ருதியை ஏராளமான வி.ஐ.பி.,க்கள், திரையுலக பிரபலங்கள் ஏராமானோர் வாழ்த்து மற்றும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் தங்கள் பங்குக்கு "இசை தேவதை" என்ற பட்டத்தை ஸ்ருதிக்கு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா ஸ்ருதிக்கு போன் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். சுமார் பத்து நிமிடங்கள் வரை ஸ்ருதியிடம் பேசிய ஜெயலலிதா, இசையுலகில் மேலும் பல சாதனைகளை செய்ய வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதி.




ரஜினி - கமலுக்கு கிடைக்குமா விருது? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Labels:


நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு தமிழக அரசின் திரைப்பட விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த 2007ம் ஆண்டு நடந்த தமிழக அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் சந்திரமுகிக்காக ரஜினிக்கும், வேட்டையாடு விளையாடு படத்துக்காக கமலுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்நி‌லையில் இந்த ஆண்டும் ரஜினி மற்றும் கமலுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன சிவாஜி படத்துக்கு நிச்சயம் விருது வழங்கப்படும் என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தசாவதாரத்தில் வித்தியாசமான 10 கெட்-அப்களில் வந்து கலக்கிய கமல்ஹாசனுக்கு விருது கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருவருமே கடந்த 2 ஆண்டில் ஹிட் படங்களை கொடுத்திருப்பதால் ரஜினி மற்றும் கமலுக்கு இந்த ஆண்டின் தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கப்படலாம் என தெரிகிறது. இது தவிர ரஜினியின் கவுரவ நடிப்பில் நட்பை பறைசாற்றி வெளியான குசேலன் படமும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.




தில்ஷன் சதம்: இலங்கை வெற்றி

Labels:

செஞ்சுரியன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. மழை குறுக்கிட, "டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி தென் ஆப்ரிக்காவை 55 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. தில்ஷன் சதம், மெண்டிசின் சுழல் ஜாலம் இலங்கை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்(மினி உலக கோப்பை) நேற்று துவங்கியது. முதல் போட்டியில் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித், பீல்டிங் தேர்வு செய்தார்.
ஜெயசூர்யா ஏமாற்றம்:
இலங்கை அணிக்கு அனுபவ ஜெயசூர்யா அதிர்ச்சி துவக்கம் அளித்தார். இவர், ஸ்டைன் "வேகத்தில்' வெறும் 10 ரன்களுக்கு வீழ்ந்தார். இதற்கு பின் தில்ஷன், கேப்டன் சங்ககரா இணைந்து சூப்பராக ஆடினர். பார்னல், ஸ்டைன், காலிஸ், மார்கல் உள்ளிட்ட தென் ஆப்ரிக்க வேகங்களை மிகச் சுலபமாக சமாளித்தனர். இருவரும் பவுண்டரிகளாக விளாசித் தள்ள, ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.
சங்ககரா அரைசதம்:
இந்த நேரத்தில் பந்துவீச வந்த டுமினி திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் அரைசதம் கடந்த சங்ககரா(54) அவுட்டானார். இரண்டாவது விக்கெட்டுக்கு சங்ககரா-தில்ஷன் ஜோடி 158 ரன்கள் சேர்த்தது.
தில்ஷன் சதம்:
தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த தில்ஷன் ஒரு நாள் அரங்கில் 3வது சதம் எட்டினார். இவர் 106 ரன்களுக்கு(16 பவுண்டரி, 1 சிக்சர்) ஸ்டைன் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஜெயவர்தனா பொறுப்பாக ஆடினார். இவருக்கு சமரவீரா அருமையாக "கம்பெனி' கொடுத்தார். ஜெயவர்தனா 77 ரன்கள் எடுத்தார். சமரவீரா 37 ரன்களுக்கு வெளியேறினார். கண்டம்பி(6) ஏமாற்றினார். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.
மெண்டிஸ் ஜாலம்:
கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா(2) ஏமாற்றம் அளித்தார். பின்னர் கேப்டன் ஸ்மித், காலிஸ் இணைந்து துணிச்சலாக போராடினர். அதிரடியாக ஆடிய ஸ்மித், குலசேகரா வீசிய 10வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்து மிரட்டினார். இதையடுத்து "சுழல் மாயாவி' மெண்டிசை அழைத்தார் கேப்டன் சங்ககரா. இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. தான் வீசிய முதல் பந்திலேயே ஸ்மித்தை(58) வெளியேற்றினார். தொடர்ந்து சுழலில் அசத்திய மெண்டிஸ் அடுத்தடுத்த பந்துகளில் காலிஸ்(41), டுமினியை(0) அவுட்டாக்கினார். மலிங்கா வேகத்தில் டிவிலியர்ஸ்(24) வீழ்ந்தார். அனுபவ பவுச்சர்(26), போத்தா(21) அதிக நேரம் நீடிக்கவில்லை.
தென் ஆப்ரிக்க அணி 37.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து "டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்ட நாயகன் விருதை தில்ஷன் தட்டிச் சென்றார்.
---------
முதன் முதலாக...
* நேற்று துவங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில், முதல் பந்தை ஸ்டைன் வீசினார். அதில் தில்ஷன் ரன் எடுக்கவில்லை.
* ஸ்டைன் பந்தில் தில்ஷன் முதல் பவுண்டரி அடித்தார்.
* முதல் விக்கெட் கைப்பற்றியவர் ஸ்டைன். வீழ்ந்தவர் ஜெயசூர்யா.
* மார்கல் பந்தில் "பிரி-ஹிட்' வாய்ப்பில் முதல் சிக்சரை தில்ஷன் விளாசினார்.
* முதல் அரைசதம் சங்ககரா அடித்தார்.
* முதல் சதத்தை தில்ஷன் எடுத்தார்.
-----------
ஆர்வம் குறைவு
"டுவென்டி-20' வரவால் ஒரு நாள் போட்டிகளுக்கு மவுசு குறைந்து வருவது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியிலேயே அம்பலமானது. சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்கா விளையாடும் போட்டியை காண உள்ளூர் ரசிகர்கள் அதிகம் வரவில்லை. இதனால், அரங்கின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கைகள் காலியாக கிடந்தன.
-----------
ஜெயவர்தான "50'
நேற்று அசத்தலாக ஆடிய இலங்கை வீரர் ஜெயவர்தனா ஒரு நாள் அரங்கில் தனது 50வது அரைசதம் அடித்தார்.
------------------
ஸ்கோர் போர்டு
இலங்கை
தில்ஷன்(கே)மார்கல்(ப)ஸ்டைன் 106(92)
ஜெயசூர்யா எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்டைன் 10(9)
சங்ககரா(கே)+(ப)டுமினி 54(74)
ஜெயவர்தனா(கே)டுமினி(ப)பார்னல் 77(61)
சமரவீரா(கே)மெர்வி(ப)பார்னல் 37(47)
மாத்யூஸ்(ப)ஸ்டைன் 15(14)
கண்டம்பி(கே)டுமினி(ப)பார்னல் 6(5)
குலசேகரா-ரன் அவுட்(மெர்வி/ஸ்டைன்) 1(1)
முரளிதரன்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 13
மொத்தம்(50 ஓவரில் 8 விக்.,) 319
விக்கெட் வீழ்ச்சி: 1-16(ஜெயசூர்யா), 2-174(சங்ககரா), 3-181(தில்ஷன்), 4-297(ஜெயவர்தனா), 5-297(சமரவீரா), 6-314(கண்டம்பி), 7-317(குலசேகரா), 8-319(மாத்யூஸ்).
பந்துவீச்சு: ஸ்டைன் 9-2-47-3, பார்னல் 10-0-79-3, காலிஸ் 7-0-43-0, மார்கல் 4-0-39-0, போத்தா 9-0-53-0, மெர்வி 10-0-42-0, டுமினி 1-0-11-1.
தென் ஆப்ரிக்கா
ஸ்மித்(ப)மெண்டிஸ் 58(44)
ஆம்லா (ப)மாத்யூஸ் 2(10)
காலிஸ்(கே)மாத்யூஸ்(ப)மெண்டிஸ் 41(48)
டிவிலியர்ஸ்(கே)ஜெயவர்தனா(ப)மலிங்கா 24(38)
டுமினி(ப)மெண்டிஸ் 0(1)
பவுச்சர் எல்.பி.டபிள்யு.,(ப)மாத்யூஸ் 26(29)
மார்கல்-அவுட் இல்லை- 29(32)
போத்தா(கே)மாத்யூஸ்(ப)மலிங்கா 21(20)
மெர்வி-அவுட் இல்லை- 3(4)
உதிரிகள் 2
மொத்தம்(37.4 ஓவரில் 7 விக்.,) 206
விக்கெட் வீழ்ச்சி: 1-9(ஆம்லா), 2-90(ஸ்மித்), 3-113(காலிஸ்), 4-113(டுமினி), 5-142(டிவிலியர்ஸ்), 6-163(பவுச்சர்), 7-198(போத்தா).
பந்துவீச்சு: மலிங்கா 7.4-0-43-2, குலசேகரா 7-0-44-0, மாத்யூஸ் 8-1-43-2, முரளிதரன் 8-0-46-0, மெண்டிஸ் 7-0-30-3.





ஐஸ்வர்யா ராய்க்கு 9 வது இடம்

Labels:

உலகின் அழகான பெண்கள் வரிசைப் பட்டியலில் ஐஸ்வர்யா ராய்க்கு 9வது இடம் கிடைத்துள்ளது.

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ஹார்பர்ஸ் அண்ட் குயின் பத்திரிகை உலகின் அழகான 100 பெண்களை வரிசைப்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் முன்னாள் உலக அழகியான இந்தியாவின் ஐஸ்வர்யா ராய்க்கு 9 வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் அவர் இதே இடத்தில் தான் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜுலி முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து பிரபல மாடல் அழகி கிறிஸ்டி டுர்லிங்டன் 2 வது இடத்தை பிடித்துள்ளார். ஜோர்டான் மகாராணி ரானியா 3 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





A R Rahman Vinnai Thaandi Varuvaaya Mp3 Promo Song Theme

Labels:



http://www.mediafire.com/?qkcmmzmdzzl



நட்பே சாகும்வரை! சசிக்குமார்

Labels:

காதலைவிட நட்பே சாகும்வரை நம்முடன் இருக்கும்; இயக்குநர் சசிக்குமார்

சுப்பிரமணியபுரம், நாடோடிகள் படங்களின் மூலம் இளைஞர்கள் மனசில் பச்சக்குன்னு ஒட்டிக்கிட்டவர் இயக்குநர் சசிக்குமார். இவர் மதுரையில் நடந்த அனைத்து கல்லூரி மாணவியருக்கான மாநில கலை போட்டி விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

’’மாணவ பருவத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும். எனவே இந்த பருவத்தை மகிழ்ச்சியாகவும், ஜாலியாகவும் அனுபவியுங்கள். வாழ்வில் பல தோல்விகளையும், அவமானங்களையும் கடந்துதான் சாதிக்க வேண்டி உள்ளது.


நானும் நிறைய தோல்விகளை தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்தேன். ஆனால் எவ்வளவு போராட்டத்திலும் கடுமையாக உழைத்தால் வெற்றி பெறலாம்.

ஆனால் வெற்றியின் மூலம் கிடைக்கும் புகழ், பெருமைக்கு அடிமையாகி விடக்கூடாது. புகழும் பெருமையும் நமக்குத்தான் அடிமையாக இருக்க வேண்டும். நாம் பெறும் வெற்றிக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருப்பவர்கள் நண்பர்கள்தான்.

எனவே நண்பர்களை எந்த நிலையிலும் மறக்கக்கூடாது. நட்பை எதற்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது. காதலை விட நட்புதான் சிறந்தது. நட்பு மட்டுமே சாகும்வரை நம்முடன் இருக்கும். காதல் கூட பாதியில் வருவதுதான். எனவே நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’என்று பேசினார்.





தொழிலதிபருக்கு டாட்டா காட்டிய ராக்கி சவந்த்?

Labels:

தனது வருங்கால கணவரை சுயம்வரம் மூலம் தேர்ந்தெடுக்கப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தி திரையுலக பிரபல நாயகி ராக்கி சவந்த் அறிவித்திருந்தார்.

அவர் நடத்திய சுயம்வரத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒரு தனியார் தொலைக்காட்சி ராக்கி சவந்த் சுயம்வரத்தை நேரடியாக ஒளிபரப்பியது. அதில் பல சுற்றுகளுக்கு பிறகு இறுதிச்சுற்றுக்கு 4 பேரை ராக்கி சவந்த் தேர்ந்தெடுத்தார்.

அந்த 4 பேரில், எலேஷ் பருஜன்வாலா என்ற வாலிபரை தனது வருங்கால கணவராக ராக்கி சவந்த் தேர்ந்தெடுத்தார். எலேஷ், குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். கனடா நாட்டில் டொரண்டோ நகரில் ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

எலேஷை திருமணம் செய்து கொள்ளப் போவதாக ராக்கி சவந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருவரும் கழுத்தில் மாலையுடன் திருமண கோலத்தில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். சில நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்றனர்.

இந்நிலையில், எலேஷை ராக்கி சவந்த் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு இருவருக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளே காரணம் ஆகும். தற்போது ராக்கி சவந்தும், எலேஷும், பதி பத்னி அவுர் வோ' என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்கள்.

இதன் இறுதி பகுதி ஒளிபரப்பாகும்போது, தங்களது திருமணம் ரத்து செய்யப்படுவதாக இருவரும் அறிவிப்பார்கள் என்று ராக்கி சவந்தின் நெருங்கிய தோழிகள் தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருவரும் உண்மையில் எண்ணியதே இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

எலேஷை திருமணம் செய்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு ராக்கி சவந்த் நேரடியாக பதில் அளிக்கவில்லை. இருப்பினும், எலேஷுடன் திருமணம் கிடையாது என்பதை சூசகமாக உணர்த்தினார்.

எலேஷும், நானும் வெவ்வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறோம். அவர் மேற்கத்திய கலாச்சாரத்தை விரும்புகிறார். நான் கிழக்கத்திய கலாச்சாரத்தை விரும்புகிறேன். ஓர் இந்தியப் பெண், மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுபவரை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நான் கருதவில்லை. தற்போது ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் கூட, எனக்கும், அவருக்கும் இடையே நிறைய ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன என்று ராக்கி சவந்த் கூறினார்.





பாலாவும் ஜீவாவும்

Labels:

ஜீவாவையும், ஜித்தன் ரமேஷையும் கழற்றிவிடப் போகிறார் பாலா என்று அரசல் புரசலாக கோடம்பாக்கத்தில் உலா வந்த செய்தி, இப்போது உறுதியாகிவிட்டது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்த மேற்படி படத்திலிருந்து விலகிக்கொண்டாராம் பாலா. இப்போது அதேகதையில் சகோதர நடிகர்களுக்குப் பதிலாக இப்போது நடிக்கப் போகிறவர்கள் விஷாலும் ஆர்யாவும் என்கிறார்கள்.


தீராத விளையாட்டு பிள்ளை படத்திற்குப் பிறகு பாலா படத்திற்காக ஒரு வருடம் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் விஷால். இந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது அநேகமாக கல்பாத்தி அகோரமாக இருக்கலாம் என்கிறார்கள். தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாலா, இந்த முறை சற்றே தனது பிடிவாதத்தில் இருந்தும் இறங்கி வந்திருக்கிறாராம். அதனால்தான் அவரால் விஷாலை வரச்சொல்லி கதை பற்றி விவாதிக்கிற அளவுக்கு முடிந்திருக்கிறது.


சமீபகாலமாகக் கடும் பண நெருக்கடியால் சிக்கித் தவித்த பாலா, இந்த முடிவை இப்போது எடுக்காவிட்டால், வேறு பல விபரீதங்களைச் சந்தித்திருப்பார் என்றும் தகவல்கள் உலா வருகின்றன. எது எப்படியோ? விஷாலைக் காப்பாற்றித் தன்னையும் காப்பாற்றிக்கொண்டால் சந்தோஷம்.



சென்னைக்கு வந்த சிந்து மேனன்

Labels:

இட்லியிலிருந்து ஆவி வருதுன்னு சொல்லுங்க நம்புறேன். அதுக்காக ஆவி, பிசாசுன்னு என்னை பயமுறுத்தாதீங்க" என்றார் சிந்து மேனன்.
பொண்ணு சென்னைக்கு வந்து சில மணி நேரம்தான் ஆகுது. அதுக்குள்ளே போன்லே பேசி பயமுறுத்த ஆரம்பிச்சிட்டோம்ல...

ஆவி மேல எனக்கு நம்பிக்கையெல்லாம் இல்லை. ராத்திரி ஒரு மணிக்கு சுடுகாட்டுக்கு போக சொல்லுங்க. எல்லாருக்கும் முன்னாடி நான்தான் நிற்பேன் என்கிறார் அஹ்ஹ்ஹா... சிரிப்புடன். சிந்து சொன்னா அதை சீரியசா எடுத்துக்கணும். ஏன்னா, ஈரம் படத்திலே ஆவியா வந்து அத்தனை பேரையும் போட்டுத்தள்ளுவதே இவர்தானே!

எனக்கு இந்த படத்திலே ரொம்ப பிடிச்சதே ஆவியோட கேரக்டர்தான். பொதுவா இதுபோன்ற படங்களில் வெள்ளை புடவை கட்டிக்கிட்டு பின்னாடி சாம்பிராணி புகை பறக்க ஜல் ஜல்லுன்னு நடந்து போற மாதிரிதான் ஆவிகளை காமிப்பாங்க. ஆனால் அறிவழகன் வேற மாதிரி காமிச்சிருக்கார். அதுதான் ஹைலைட் என்றார் சிந்து.

ஆமா, தமிழ்நாட்டையே மறந்திட்டீங்களே, ஏனுங்க? என்றால் நல்ல கதைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இடையிலே கன்னடம், தெலுங்கு, மலையாளம்னு இருபது படங்களுக்கு மேல் பண்ணிட்டேன். ஷங்கர் சார் படங்கள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்திற்காக ஹீரோயின் தேடிட்டு இருக்கும்போதுதான் என் போட்டேவை ஏதோ ஒரு மேகசின்லே பார்த்தாராம் ஷங்கர் சார். அறிவழகனிடம் சொல்லியிருக்கார். ஐதராபாத்திற்கே வந்து என்னிடம் கதை சொன்னார். அப்பவே சைன் பண்ணிட்டேன் தெரியுமா? நான் உங்களை விட்டு எங்கேயும் போயிர மாட்டேன் என்றார் சிந்து மேனன்.



த்ரிஷா ஆட்டம்!

Labels:

மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் ஓடி ஓடி உட்கார்ந்து கொள்கிறார் தமன்னா. அசின், த்ரிஷா, நயன்தாரா, நடிக்க வேண்டிய படத்திலெல்லாம் தமன்னாவின் ஆதிக்கம்.
இதனால் அரண்டு போயிருக்கிறார்கள் மேற்படி நடிகைகள். அதிலும் இந்திக்கு போவதாக கொஞ்சமே கொஞ்சம் இடத்தை காலி பண்ணிய த்ரிஷா, அந்த வாய்ப்பும் சரவர அமையாமல் திரும்பி வந்தால், இவரது பழைய ஏரியா ஹவுஸ்ஃபுல்! எல்லா வாய்ப்பும் தமன்னாவுக்கே...

பிரியதர்ஷனின் இந்திப்படம் துவங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதால், தோழிகளுடன் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டாராம். எப்பவுமே ஈசிஆர் சாலையில் ஆட்டம் போடும் த்ரிஷ் இந்த முறை, கேரள எல்லைப்புறம் ஒதுங்கியிருக்கிறார். (மேட்டர் சீக்ரெட்டாக இருக்கட்டும் என்றுதான்...) இடையில் ரம்யாகிருஷ்ணனின் பிறந்த நாள் பார்ட்டியையும் கோலகலமாக கொண்டாடினாராம்.

அந்த இடத்தில்தான் அடித்தது யோகம். இத்தனை நாட்களாக மலையாள படங்களில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்த த்ரிஷாவை அந்த பார்ட்டியில் பார்த்து அழைப்பு விடுத்தார்களாம் சில மலையாள ஹீரோக்கள். சம்பள விஷயத்தில் தாராளம் காட்டினால், மலையாளம் என்ன? போஜ்பூரின்னா கூட ரெடி என்றாராம் த்ரிஷ். பேச்சு வார்த்தை பிரைட்டாக முடிய, இன்னும் சில தினங்களில் த்ரிஷாவின் மலையாள பட அறிவிப்பு முறைப்படி வரலாம் என்கிறார்கள்.




ஆயிரம் வதந்திகள்

Labels:

நோட்டீஸ்

பேருந்தில் நோட்டீஸ் ஒட்டாதே
என நோட்டீஸ் ஒட்டப்பட்டது...

சூடு
வெளியில் சூடு என்று ஆட்டோவில் ஏறினேன்
ஆட்டோக்காரனும் வைத்தான் சூடு மீட்டருக்கு

மரம் வளர்ப்போம்

மரம் வளர்ப்போம் விழிப்புணர்வு கூட்டம்
அமந்திருக்கிறார்கள் மர நாற்காலியில்

பிறந்தநாள்

குழந்தையின் பிறந்த நாள் தங்கசங்கிலி
அடகுகடையில் வைக்கப்பட்டது செலவுக்காக
தலைவனுக்கு பிறந்தநாளாம்.


மறுமணம்

அவனைப்பற்றி ஆயிரம் வதந்திகள்
பாவம் விதவையை மறுமணம் செய்தவன்.





Madhumitha Latest HQ Wallpapers, Stills, Pics, Photo Gallery, Images

Labels:






ஈரம் சினிமா விமர்சனம்

Labels:




மழைக்காலத்தில் பார்க்கும் அனைவருமே அழகாக தெரிவதாய் உணர்ந்திருக்கிறேன். எல்லோர் முகத்திலும் மென்மை தெரியும். அல்லது முகத்தில் தண்ணீரால் கழுவியது போலவே இருக்கும். அதை எப்போதும் ரசிப்பேன். ஏன்னா நம்ம முகம் அந்த டயத்திலதான் கொஞ்சமாச்சும் அழகாத்தெரியும். அதே போலத்தான் காதலும் மழைக்காலங்களில் இன்னும் அழகாகிவிடும். காதல் எத்தனை முறை பார்த்தாலும் அழகுதான். காதலியோடு கொட்டும் மழையில் நனைந்த படி கட்டியணைத்து முத்தமிட்டிருக்கிறீர்களா! வாய்ப்பு கிடைத்தவன் கடவுளை பார்த்திருப்பான்!.

ஷங்கர் படம்னாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவரு டைரக்சன் பண்ற படம்னு இல்லாம தயாரிக்கற படங்கள் மேலயும் அப்படித்தான் மிதமிஞ்சிய ஆர்வம் தொத்திக்குது. காதல்ல தொடங்கி 23ர்டு புலிகேசி, வெயில்,கல்லூரி இதோ இப்போ ஈரம். பேரு ஈரம்னு வச்சிட்டு டிரெய்லரும் மழையும் இருட்டுமா காட்டினதால என்ன கதையா இருக்கும்னு ஆர்வம் இன்னும் பத்திகிச்சு.

தமிழ்ப்படமே பாக்கறதில்லைங்கற என்னோட சுடுகாட்டு சபதத்த சிகரட் லைட்டர்ல எரிச்சிட்டு எவ்ளோ செலவானாலும் பராவல்ல சத்யம்லதான் ஈரம் பாக்கறதுனு முடிவு பண்ணோம் சங்கத்துல. என்னோட சொத்த முழுசா வித்த பணத்தையும் செலவழிச்சு டிக்கட் வாங்க வேண்டி இருந்துச்சு. ஒரு டிக்கட் 120ரூ. பாப்கார்ன் பெப்சி 100ரூ. தண்ணி பாட்டில் 20ரூ. கொஞ்சம் கூட மனசுல ஈரமே இல்லைங்க தியேட்டர்காரனுக்கு. இவ்ளோ செலவளிச்சு படம் பாக்க போனா இன்டர்வெல்ல தம்மடிக்க டிரைப்பண்ணோம்னு அடிக்கலாம் வரானுங்க! நாகரீகம் இல்லாதவனுங்க! காசு குடுத்து என்னங்க பிரயோசனம் சும்மா சீட்டு மேல கால போட்டுகிட்டு தம்மடிச்சுகிட்டே படம் பாக்கற சுகமே தனி. டிநகர் கிருஷ்ணவேனில 20ரூவாய்க்கு பால்கனி டிக்கட். 5ரூவாக்கு தேங்கா உருண்டை. சுகமே தனி.ம்ம் சத்யம்னு பேர் வச்சுகிட்டு கொள்ளையடிக்கிறானுங்க!

அது கிடக்கட்டும். ஏழைங்க பிரச்சனை. 200ரூவா செலவழிச்சாலும் குடுத்தான் பாருங்க டிக்கட்டு. சூப்பர் டிக்கட்டுங்க எனக்கு பக்கத்து சீட்ல அய்யோ அய்யோ! இரண்டு பேரு அய்யோ அய்யோ! அது பத்தி தனி பதிவா போட்டுக்கறேன். இப்போ !

ஈரம் படம்? படத்தோட கதை என்னமோ ராசாத்தி வரும் நாள். மைடியர்லிசா மாதிரி சப்பை பேய்ப்படக்கதைதான். ஏன் எல்லா பேய்ப்படத்திலயும் பொண்ணுங்களே பேயா வராங்க! ஜகன் மோகினிலருந்து லேட்டஸ்டா வந்த யாவரும் நலம் வரைக்கும். ம்ம் இதுக்கு பின்னால இருக்கற ஆணாதிக்க நுண் அரசியல்லாம் நமக்கெதுக்கு!. நாம படத்தபத்தி பேசுவோம். பேய்ப்படத்தில வராமாதிரியே ஒரு பெரிய வீடு. கெட்ட வாட்ச் மேன். கெட்ட பக்கத்துவ்வீட்டுக்காரி. காமக்கொடூர பக்கத்துவீட்டுக்காரன். சைக்கோவா ஒரு புருஷன். நல்ல காதலன். பாவப்பட்ட பழிவாங்கும் பேய்! எல்லாருக்கும் தண்ணில கண்டம்! இதையெல்லாம் வச்சு சுத்தி சுத்தி வித்தியாசமா ஏற்கனவே பல கதைகள் பண்ணிருந்தாலும் இது புதுசா இருக்கு!

அதற்கான காரணம் படத்தின் மேக்கிங். படம் முழுக்க கார்கல மேகம் சூழ காட்சிகள் நகருது. எல்லா காட்சியுமே ஈரமான பிண்ணனியோட சுத்துது. தண்ணி சொட்டுற மாதிரி நிறைய அருமையான வீடியோக்கள் பாத்திருப்போம். அதேமாதிரி அருமையா தண்ணிய படம் முழுக்க தெளிச்சு விட்டிருக்காங்க. நமக்கு கூட பேண்ட் லைட்டா ஈரமானமாதிரி பீலிங்ஸ் வருது. மேல் பக்கமில்ல கால்பக்கம். அதான் இந்த படத்தோட மிகப்பெரிய வெற்றி.
கேமரா மேன் கண்ணுல தண்ணிய ஊத்திகிட்டு படம் எடுத்துருப்பார் போல! குளிர்ச்சியான பிண்ணனி! இசை யாருனு தெரியல ஒரு சோக மெலடி அப்படியே உருக்கி மனச கரைக்குது. இனிமேதான் டவுன்லோட் பண்ணிகேட்கணும். பிண்ணனி இசை அடங்கொன்னியா அப்படியே இங்கிலீஸ் படரேஞ்சு! ( கவனிக்கவும் ஒன்லி ரேஞசுதான் .. நோ காப்பிபையிங்).

படத்துல ரெண்டு ஹீரோ ஒருத்தரு கொஞ்சம் சிவப்பு விஷாலாட்டம் அழகா இருக்காரு. மிருகம் படத்துல காட்டுத்தனமா நடிச்சவரு இதில சாஃப்டா போலீஸா வராரு. குட். நந்தா ஒரு நல்ல நடிகர். இன்னும் யூஸ் பண்ணிருக்காலம். இல்ல இன்னும் அவர் வேற மாதிரி நடிச்சிருக்கலாம். ஹீரோயின் சிந்துமேனன் பாத்திரத்த சரியா புரிஞ்சுகிட்டு வெளக்கிருக்கார். ஹீரோயின் பக்கத்துவீட்டுப்பொண்ணா ஒரு குட்டி பெரிய பொண்ணு வருது. கண்ணுல செம ஸ்பார்க்.. சூப்பரா நடிச்சிருக்கு. முகம் சுமார்தான்.

மொத்தமா ஒரு நல்ல ஜாலியான பயங்கரமான அட்வெஞ்சரான படகு சவாரி பண்ண உணர்வு வருது படம் பார்க்கும் போது. அதுக்கு மேல என்ன வேணும் படம் ஓடிரும். மொத்தமா பாக்கும் போது ஏதோ இங்கிலீஸ் படத்த ரெண்டாவது வாட்டி பாக்கற மாதிரி இருந்தாலும் தமிழுக்கு புதுசு மாதிரிதான் தெரியுது.!

படத்தோட பெரிய குறை! ஒன்றரை மணிநேரத்துல சொல்லிறக்கூடிய கதைய எதுக்கு தேவையில்லாம இரண்டரை மணிநேரம் ஒட்டறாங்கனு தெரியல. இன்டர்வெல்லுக்கு அப்புறம் ஒருமணிநேரம் கொட்டாவி!

மத்தபடி ஈரம் – வெரி நைஸ்! ஒன் டைம் மஸ்து வாட்ச்



உன்னைப் போல் ஒருவன் விமர்சனம்

Labels:

ஒரே நாளில் நிகழும் கதை. ஒரே இடத்தில் நிகழும் கதை என்றும் சொல்லலாம். பாடல்களே இல்லாத படம். மிக வேகமான திரைக்கதை. இடைவேளை வந்ததே தெரியவில்லை (என்னப்பா அதுக்குள்ள இன்டர்வெல் விட்டுட்டான் - இது என்னுடைய மகள் மற்றும் பலர்). இன்டர்வெல் பாப்கார்ன் பக்கெட் தீருவதற்குள் கிளைமாக்ஸ் வந்து எந்த அலட்டலும் இல்லாமல் படமும் முடிவடைந்துவிடுகிறது.

சலங்கை ஒலி படத்தில் கமலின் நடன அசைவுகளை அறைகுறையாக படம்பிடிக்கும் ஒரு அசட்டு சிறுவனை ஞாபகமிருக்கிறதா? தசாவதாரம் படத்தில் அமெரிக்காவில் கமலுக்கு காரோட்டும் அமெரிக்க இந்தியனை ஞாபகம் இருக்கிறதா? அந்த அசட்டுச் சிறுவன்தான் இந்த அமெரிக்க இளைஞன். அந்த இளைஞன் தான் சக்ரி டோலட்டி. இந்தப் படத்தின் இயக்குனர். ஜெயித்துவிட்டார்.

படத்தின் ஹீரோ அறிமுக வசனகர்த்தா இரா.முருகன். பைனரி போல வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக அசத்தியிருக்கிறார். கமலுக்கு படத்தில் வசனம் மட்டுமே துணை. படத்தில் ஓரிரு காட்சிகள் தவிர அவர் எதிரில் ஆள் இல்லாமல்தான் தன்னுடைய ஆக்ஷ்ன் மற்றும் ரியாக்ஷன்களை காட்டி நடித்திருக்கிறார்.

படத்தில் கமலுக்கு பெயர் கிடையாது. எந்த மதம் எந்த ஜாதி என்கிற அடையாளம் கிடையாது. அவர் ஒரு காமன் மேன் அவ்வளவுதான். எந்தமாதிரியான காமன் மேன்? ஆர்.கே. இலட்சுமணனின் கார்டுன்களில் சமுக அவலங்களை ஓரமாக நின்று நையாண்டி பார்வை பார்க்கும் காமன் மேனா? இல்லை. நடுரோட்டில் (யாரோ) ஒரு கர்பிணிப் பெண்ணை மதத்தை காரணம் காட்டி சிதைத்த ஒரு கொடுர வர்க்கத்தின் கோரம் பொறுக்க முடியாமல் அவர்களை அழித்தொழிக்க முயலும் ஆக்ரோஷமான காமன் மேன்.

தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் தகர்க்க முடியும் என்று சீறும் காமன்மேனுக்கும், அதிகாரவர்க்கத்தின் முரண்பாடுகளில் சிக்கித் தவிக்கும் ஒரு போலீஸ் கமிஷனருக்கும் இடையில் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் உன்னைப் போல் ஒருவன். கமல் ஆடு, மோகன்லால் புலி. புலி தான் ஜெயிக்கும் என்பது தெரிந்த கதை. ஆனால் திகட்டாத அறிவார்ந்த திரைக்கதையால் படம் வெற்றியடைகிறது.

ராகவன் மரார் என்ற பெயருடைய மலையாள கமிஷனராகவே படம் முழுக்க வந்து அசத்துகிறார் மோகன்லால். அபியும் நானும் படத்தில் “சிங்“காக வந்த கணேஷ் வெங்கட்ராம் இந்தப் படத்தில் ஃபிட்டான அதிரடிப்படை வீரராக ஜொலிக்கிறார். பரத்ரெட்டியும் ஓகே.

குஜராத், பெஸ்ட் பேக்கரி, மீனம் பாக்கம் குண்டு வெடிப்பு, கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு என கடந்த 15 ஆண்டு காலத்தில் மதத்தின் பெயரால் நடந்த அத்தனை துர் சம்பவங்களும் வசனங்களில் வந்து போகின்றன. கத்தியின் கூர்மையான விளிம்பில் நடப்பது போல அபாயமான விவகாரங்களை அருமையான உரையாடல்களாக மாற்றியிருக்கிறார்கள்.

உடன் வேலை செய்பவன் குண்டு பட்டு செத்தால் கூட காப்பாற்றாமல்,அதை செய்தியாக்கிவிட்டு, நாங்கள்தான் முதன் முதலில் இந்த செய்தியை படம் பிடித்தோம் என்று (துட்டு பார்க்க) விளம்பரம் தேடும் 'Exclusive' டெலிவிஷன் செய்தி நிறுவனங்களை ஒரு பிடி பிடித்திருக்கிறார்கள். அதுவும் கமிஷனரிடமே சிகரெட் கேட்கும் அந்த செய்திப் பெண்ணின் காரக்டர், மீடியாக்களின் அலட்சியம் மற்றும் அகம்பாவத்தின் உருவகம். 26/11 என்று வருணிக்கப்படும் தாஜ் ஹோட்டல் மற்றும் விக்டோரியா ரயில் நிலைய குண்டு வெடிப்பின் போது மீடியாக்களின் அசட்டுத்தனமான (Exclusive வெறி பிடித்த) கவரேஜை பார்த்துக்கொண்டே தீவிரவாதிகள் காய் நகர்த்தியதை இந்தப் படம் கிண்டலடிக்கிறது.

தீவிரவாதிகள் என்றால் அவர்கள் முஸ்லீம்கள்தான் என்று தற்போதைய உலகம் நினைப்பதை இல்லை என்று மறுக்க காமன்மேன் காரக்டர் மூலம் இந்தப் படம் சொல்ல முயல்கிறது. ஆனால் அந்தச் செய்தி சாதாரண இரசிகனை போய் சேர்ந்திருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. காரணம்? விசுவலில் (தீவிரவாத)முஸ்லீம்கள்தான் காட்டப்படுகிறார்கள். அவர்களின் கோபம் மட்டும்தான் காட்டப்படுகிறது. அவர்களால் பாதிக்கப்படும் (அப்பாவி)முஸ்லீம்கள் படத்தில் இல்லை.

எல்லா இடங்களிலும் எள்ளலும் துள்ளலுமாக வந்த வசனம், கடைசிக் காட்சியில் ஒரு வரி கூட இல்லாமல் போனதில் பல இரசிகர்களுக்கு ஒரு Unfinished உணர்வை தந்துவிட்டது. கிராமப்புறங்களில் இந்தப் படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரியவில்லை.

நல்ல படம். வெற்றிப்படமா என்பது படத்தின் பட்ஜெட்டையும், பார்க்கும் இரசிகர்களின் எண்ணிக்கையையும் பொறுத்தது.





கண்டேன் காதலை

Labels:


கண்டேன் காதலை படத்தின் புரமோஷனுக்காக தனியாக ஒரு பாடலை ஷூட் பண்ணி இணைக்கப் போகிறார்கள் என்று பேச்சு அடிபட்டதல்லவா? அதுதான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. அந்தப் பாட்டுக்கு ஆகக்கூடிய செலவு குறித்து யோசித்த தயாரிப்பாளர்கள் (மோசர்பேர்) இந்தத் திட்டத்தையே கைவிட முடிவெடுத்தார்களாம்.


ஆனால் படத்தை வாங்க முடிவு செய்த சன் டிவி வேறு விதமாக நினைக்கிறது. புரமோஷன் பாடல் கட்டாயம் வேண்டும் என்று சொல்லிவிட்டது. செலவை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த மோசர்பேர், படத்தின் நாயகன் பரத்தை அணுகியது. ஆளுக்குப் பாதி பணத்தை போட்டு இந்தப் பாடலை எடுத்துவிடலாம் என்பது நிறுவனம் முன்வைத்த டீல். இப்படியெல்லாம் எந்த ஹீரோவும் மெனக்கெடுவதில்லை என்பதால் இந்த யோசனை பரத்தை நெளியவைத்த்தாம். ஆனாலும் படம் நல்லபடியாக வெளிவர வேண்டுமே என்பதால் ஒப்புக்கொண்டதாகக் கிசுகிசுக்கிறார்கள்.


இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு எடுக்கப்படும் இந்த புரமோஷன் பாட்டு பரத்தின் சினிமா வாழ்வுக்கு புரமோஷன் தருமா என்று பார்க்கலாம்.



உன்னைப்போல் ஒருவன்

Labels:


'A' Wednesday என்ற பெயரில் இந்தியில் வெளியான திரைப்படத்தின் கதையானாலும், திரைக்கதையில் இந்தித் திரைப்படத்தின் சாயல் சற்றும் இல்லாமல் உன்னைப்போல் ஒருவனை படமாக்கியிருப்பது அருமை. குறிப்பாக 'A' Wednesday 26/11 மும்பை தாக்குதலுக்கு முன்னர் படமாக்கப்பட்டிருந்தது.

'தீவிரவாதத்தை எதிர்க்க தீவிரவாதம் தான் தீர்வாகும்' என்ற திரைப்படத்தின் மையக்கருத்து நடைமுறைக்கு எந்த அளவில் சாத்தியமென்ற விவாதம் ஒருபுறமிருந்தாலும் அது நிச்சயம் யோசிக்கப்பட வேண்டிய விஷயம் தான்.

சிறைகளில் தீவிரவாதிகளே இல்லையென்றால் அல்லது பிடிபட்ட தீவிரவாதிகளை பிடிபட்ட மாத்திரத்திலேயே கொன்றுவிட்டால் விமான கடத்தல்களுக்கும் அதனைத் தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்கும் இடமே இல்லாமல் போயிருக்கும் என்பது உண்மையே. அதனால் 26/11-மும்பை தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்பதும் சரியே

(எனினும் நியூயார்க்-9/11 லண்டன்-7/7 விதமான தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட தான் செய்வார்கள் என்ற உண்மையையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். )

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களை மட்டுமே தீவிரவாதிகள் என்ற முத்திரைக் குத்தாமல் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் எந்த சமூகத்தை சார்ந்தவரும் தீவிரவாதியே என சொல்லியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

கந்தஹார் சம்பவத்திற்காக முன்னாள் அரசை மறைமுகமாக சாடியிருப்பதும்; மும்பை 26/11 தாக்குதலின் போது தீவிரவாதிகளின் ஊடுவருவலுக்கு காரணம் யாரென உளவுத்துறையும் அரசும் Blame Game ஆடியதை குத்தியிருப்பதும்; Enough is Enough, 26/11 War என்ற தலைப்புகளில் குடைச்சல் கொடுத்த தொ(ல்)லைக் காட்சிகளுக்கும் குறிப்பாக தொலைக்காட்சி நிருபர்களுக்கு சவுக்கடி கொடுத்திருப்பதும் இயக்குனருக்கு சலாம் போட வைக்கிறது.

அதே போன்று 26/11 தாக்குதலுக்கு பின்னர் பொறுப்பற்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக மும்பை நகரமே ஒன்று கூடியது போன்ற நிலையை பேரணிகள், ஊர்வலங்கள் மூலம் ஏற்படுத்திய மும்பை நகர மக்கள் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் எங்கு சென்றார்கள் என்ற கேள்வியை எழுப்பியிருப்பது சபாஷ் போட வைக்கின்றன.(நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மும்பையில் 45% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது)


கமல்ஹாசன் அவர்களின் பெயர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போனதை திரையில் கமல் அவர்களே சொல்கையில் ரசிகர்களின் கூச்சல் காதைக் கிழிக்கிறது. வசன கர்த்தா இரா.முருகன் அவர்களுக்கும் , திரைக்கதையில் அசத்தியிருக்கும் கமல் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மோகன்லாலின் நடிப்பு காவல்துறை ஆணையாளர் வேடத்திற்கு கனக்கச்சிதம், அவரது மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு அந்த வேடத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது. லட்சுமி, சந்தானபாரதி இருவருக்கும் அதிக காட்சிகள் இல்லையென்றாலும் திறம்பட செய்திருக்கிறார்கள்.

வசனங்களில் அடிக்கடி வீசும் ஆங்கில வாடையை சற்றே குறைத்திருக்கலாம். ஸ்ருதிஹாசன் தனது அறிமுக இசையிலேயே அசத்தியிருப்பது திரைப்படத்திற்கு மேலும் பலம். திரைப்படத்தில் பாடல் காட்சிகள் இல்லையென்றாலும் கமல்ஹாசன் அவர்களே எழுதியிருக்கும் "நின்றே கொல்லும் தெய்வங்களும்; இன்றே கொல்லும் மதபூசல்களும்" போன்ற பாடல் வரிகள் நம்மை சிந்திக்கச் செய்பவை.

'உன்னைப்போல் ஒருவன்' சாமானியன் ஒருவனின் உள்ளக்குமுறல்.




நயன்தாராவும், பிரபுதேவாவும்

Labels:

நயன்தாராவும், பிரபுதேவாவும் ஒரே இடத்திற்கு தம்பதியரைப் போலப் போய்வந்திருக்கிறார்கள். அதுதான் கொஞ்ச நாட்களாக அடங்கிக் கிடந்த மீடியாவை உசுப்பிவிட்டிருக்கிறது.


வான்ட்டட். இது போக்கிரியை ரீமேக் செய்து பிரபுதேவா டைரக்ட் செய்த இந்திப் படம். வெளியாகிய சில தினங்களிலேயே இது வெற்றிப்படம் என்ற உறுதி கிடைத்திருக்கிறது. ஆனால் இப்படத்திற்கு சிறப்புக் காட்சி எதுவும் போடப்படவில்லை. அதனால் இப்படத்தை நயன்தாராவுடன் பார்க்க விரும்பிய பிரபுதேவா, மும்பையில் உள்ள தியேட்டருக்கு வந்தார். இருவரும் வந்திருப்பதை அறிந்த மீடியா அங்கே குவிந்துவிட, உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது திருமணம் எப்போது போன்ற கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் நோ காமெண்ட்ஸ் என்ற ஒரே பதிலை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்கள் இருவரும்.


ஆனால் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக இந்தி, தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வருகின்றனவாம். நடிப்புக்கும் முழுக்கு போடப் போகிறாராம் நயன்தாரா. என்ன நடக்கப் போகிறதோ?

*



ஜக்குபாய் பட பாடல்

Labels:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமாரின் "ஜக்குபாய்' படத்தின் பாடல்களை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பிரெஞ்ச் மொழி படத்தை தழுவியது. இதில் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது. பின் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு சரத்குமாரை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் கே.எஸ்.ரவிகுமார். சரத்குமாரின் ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ள இப்படத்தின் பெரும் பகுதிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 27-ல் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிற விழாவில் இப்படத்தின் பாடல்கள் அடங்கிய சி.டி.யை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார். தீபாவளிக்கு இப்படம் வெளிவருகிறது