feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

தில்ஷன் சதம்: இலங்கை வெற்றி

Labels:

செஞ்சுரியன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. மழை குறுக்கிட, "டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி தென் ஆப்ரிக்காவை 55 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. தில்ஷன் சதம், மெண்டிசின் சுழல் ஜாலம் இலங்கை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்(மினி உலக கோப்பை) நேற்று துவங்கியது. முதல் போட்டியில் "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித், பீல்டிங் தேர்வு செய்தார்.
ஜெயசூர்யா ஏமாற்றம்:
இலங்கை அணிக்கு அனுபவ ஜெயசூர்யா அதிர்ச்சி துவக்கம் அளித்தார். இவர், ஸ்டைன் "வேகத்தில்' வெறும் 10 ரன்களுக்கு வீழ்ந்தார். இதற்கு பின் தில்ஷன், கேப்டன் சங்ககரா இணைந்து சூப்பராக ஆடினர். பார்னல், ஸ்டைன், காலிஸ், மார்கல் உள்ளிட்ட தென் ஆப்ரிக்க வேகங்களை மிகச் சுலபமாக சமாளித்தனர். இருவரும் பவுண்டரிகளாக விளாசித் தள்ள, ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.
சங்ககரா அரைசதம்:
இந்த நேரத்தில் பந்துவீச வந்த டுமினி திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் அரைசதம் கடந்த சங்ககரா(54) அவுட்டானார். இரண்டாவது விக்கெட்டுக்கு சங்ககரா-தில்ஷன் ஜோடி 158 ரன்கள் சேர்த்தது.
தில்ஷன் சதம்:
தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த தில்ஷன் ஒரு நாள் அரங்கில் 3வது சதம் எட்டினார். இவர் 106 ரன்களுக்கு(16 பவுண்டரி, 1 சிக்சர்) ஸ்டைன் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஜெயவர்தனா பொறுப்பாக ஆடினார். இவருக்கு சமரவீரா அருமையாக "கம்பெனி' கொடுத்தார். ஜெயவர்தனா 77 ரன்கள் எடுத்தார். சமரவீரா 37 ரன்களுக்கு வெளியேறினார். கண்டம்பி(6) ஏமாற்றினார். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.
மெண்டிஸ் ஜாலம்:
கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா(2) ஏமாற்றம் அளித்தார். பின்னர் கேப்டன் ஸ்மித், காலிஸ் இணைந்து துணிச்சலாக போராடினர். அதிரடியாக ஆடிய ஸ்மித், குலசேகரா வீசிய 10வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்து மிரட்டினார். இதையடுத்து "சுழல் மாயாவி' மெண்டிசை அழைத்தார் கேப்டன் சங்ககரா. இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. தான் வீசிய முதல் பந்திலேயே ஸ்மித்தை(58) வெளியேற்றினார். தொடர்ந்து சுழலில் அசத்திய மெண்டிஸ் அடுத்தடுத்த பந்துகளில் காலிஸ்(41), டுமினியை(0) அவுட்டாக்கினார். மலிங்கா வேகத்தில் டிவிலியர்ஸ்(24) வீழ்ந்தார். அனுபவ பவுச்சர்(26), போத்தா(21) அதிக நேரம் நீடிக்கவில்லை.
தென் ஆப்ரிக்க அணி 37.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து "டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்ட நாயகன் விருதை தில்ஷன் தட்டிச் சென்றார்.
---------
முதன் முதலாக...
* நேற்று துவங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில், முதல் பந்தை ஸ்டைன் வீசினார். அதில் தில்ஷன் ரன் எடுக்கவில்லை.
* ஸ்டைன் பந்தில் தில்ஷன் முதல் பவுண்டரி அடித்தார்.
* முதல் விக்கெட் கைப்பற்றியவர் ஸ்டைன். வீழ்ந்தவர் ஜெயசூர்யா.
* மார்கல் பந்தில் "பிரி-ஹிட்' வாய்ப்பில் முதல் சிக்சரை தில்ஷன் விளாசினார்.
* முதல் அரைசதம் சங்ககரா அடித்தார்.
* முதல் சதத்தை தில்ஷன் எடுத்தார்.
-----------
ஆர்வம் குறைவு
"டுவென்டி-20' வரவால் ஒரு நாள் போட்டிகளுக்கு மவுசு குறைந்து வருவது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியிலேயே அம்பலமானது. சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்கா விளையாடும் போட்டியை காண உள்ளூர் ரசிகர்கள் அதிகம் வரவில்லை. இதனால், அரங்கின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கைகள் காலியாக கிடந்தன.
-----------
ஜெயவர்தான "50'
நேற்று அசத்தலாக ஆடிய இலங்கை வீரர் ஜெயவர்தனா ஒரு நாள் அரங்கில் தனது 50வது அரைசதம் அடித்தார்.
------------------
ஸ்கோர் போர்டு
இலங்கை
தில்ஷன்(கே)மார்கல்(ப)ஸ்டைன் 106(92)
ஜெயசூர்யா எல்.பி.டபிள்யு.,(ப)ஸ்டைன் 10(9)
சங்ககரா(கே)+(ப)டுமினி 54(74)
ஜெயவர்தனா(கே)டுமினி(ப)பார்னல் 77(61)
சமரவீரா(கே)மெர்வி(ப)பார்னல் 37(47)
மாத்யூஸ்(ப)ஸ்டைன் 15(14)
கண்டம்பி(கே)டுமினி(ப)பார்னல் 6(5)
குலசேகரா-ரன் அவுட்(மெர்வி/ஸ்டைன்) 1(1)
முரளிதரன்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 13
மொத்தம்(50 ஓவரில் 8 விக்.,) 319
விக்கெட் வீழ்ச்சி: 1-16(ஜெயசூர்யா), 2-174(சங்ககரா), 3-181(தில்ஷன்), 4-297(ஜெயவர்தனா), 5-297(சமரவீரா), 6-314(கண்டம்பி), 7-317(குலசேகரா), 8-319(மாத்யூஸ்).
பந்துவீச்சு: ஸ்டைன் 9-2-47-3, பார்னல் 10-0-79-3, காலிஸ் 7-0-43-0, மார்கல் 4-0-39-0, போத்தா 9-0-53-0, மெர்வி 10-0-42-0, டுமினி 1-0-11-1.
தென் ஆப்ரிக்கா
ஸ்மித்(ப)மெண்டிஸ் 58(44)
ஆம்லா (ப)மாத்யூஸ் 2(10)
காலிஸ்(கே)மாத்யூஸ்(ப)மெண்டிஸ் 41(48)
டிவிலியர்ஸ்(கே)ஜெயவர்தனா(ப)மலிங்கா 24(38)
டுமினி(ப)மெண்டிஸ் 0(1)
பவுச்சர் எல்.பி.டபிள்யு.,(ப)மாத்யூஸ் 26(29)
மார்கல்-அவுட் இல்லை- 29(32)
போத்தா(கே)மாத்யூஸ்(ப)மலிங்கா 21(20)
மெர்வி-அவுட் இல்லை- 3(4)
உதிரிகள் 2
மொத்தம்(37.4 ஓவரில் 7 விக்.,) 206
விக்கெட் வீழ்ச்சி: 1-9(ஆம்லா), 2-90(ஸ்மித்), 3-113(காலிஸ்), 4-113(டுமினி), 5-142(டிவிலியர்ஸ்), 6-163(பவுச்சர்), 7-198(போத்தா).
பந்துவீச்சு: மலிங்கா 7.4-0-43-2, குலசேகரா 7-0-44-0, மாத்யூஸ் 8-1-43-2, முரளிதரன் 8-0-46-0, மெண்டிஸ் 7-0-30-3.





0 comments:

Post a Comment