feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

லண்டன் என்னும் வசீகரம்

Labels:


சென்ற வார நடுவிலிருந்து இந்த வார மத்தி வரை லணடன் வாசம். ஈஷா யோகாவின் அடுத்த நிலையில் பயில்வதற்காக ஒரு வார தங்கல் அப்படியே லண்டனையும் பார்க்க ஒரு வாய்ப்பு.

கூட்டம், கோட்டு சூட்டு போட்டு காலையில் சாண்ட்விச்சோ இல்லை ஆப்பிளையோ சாப்பிட்டுக்கொண்டே பாதாளத்தில் ஓடும் ட்யூபை பிடிக்க ஓடும் அவசரகதி மக்கள், செல்லில் ஒரு பக்கம் சைன மொழியில் ஒருவர், இன்னொரு பக்கம் எமிரா என்று தெலுங்கு, மெர்சி என நன்றி கூறும் பிரெஞ்சு, சி சி என அமோதிக்கும் இத்தாலியர், கருப்பர், ஆங்காங்கே தென்படும் சர்தார்கள் என்ன பாஷை பேசுகிறார்கள் என்றே புரியாத இன்னும் பலர் ஆக மொத்த உலகமும் சங்கமிக்கும் வசீகரம் லண்டன். ஐந்தில் நாலு பேர் புகைக்கிறார்கள்.

இதில் சிலர் தகுந்த விசா இல்லாமல் அப்படியே எல்லையை கடந்து வந்தவர்கள். நான் சென்ற சமயம் வசந்த காலமாதலால் நல்ல வெய்யிலிருந்தது.


காலையிலும் மாலையிலும் இலவசமாக பேப்பர் தருகிறார்கள். இல்லையென்றால் பாதள ரயிலில் எதிர் எதிரகாக அமந்துகொண்டு எதிர்த்தார் போல் இருப்பவரின் முகத்தை சிரிக்காமல் எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டுவர முடியும்? ஆக பேப்பரில் முகத்தை புதைத்துக் கொள்ளலாம். அதிலும் அனேகமாக ப்ரிட்னி ஸ்பியர்ஸ் வயிறு உப்பி இருப்பது நிச்சயம் அவர் கருவுற்றிருக்க வேண்டும் என்ற முக்கியமான தலைப்பு செய்தியை படித்து தெரிந்து கொள்ளலாம். இல்லை 8ம் பக்கம் திருப்பி லவ் லண்டன் லவ் பகுதியில்

"முந்தா நேத்து நார்த்தர்ன் லைனில் நாம ஒருத்தர ஒருத்த பார்த்து சிரிச்சோம் நான் வெஸ்ட் கெனிங்ஸ்டனில் இறங்கிவிட்டேன். நீ ப்ளு கலர் ஜாக்கெட் அணிந்திருந்தாய், உனக்கு ஓக்கேன்னா தண்ணி அடிக்கலாமா" என்பது போன்ற கண்டதும் டேடிங் டெக்ஸ்ட் மெசேஜ் படிக்கலாம். லண்டனின் விலைவாசியினால் இளம் வயதினர் பலர் தனித்தே வாழ வேண்டியுள்ளது. சிங்கிள்ஸ் க்ளப் மிகவும் அதிகமாக உள்ள நகரம் லண்டன். வாரத்தின் இறுதி என்றில்லாமல் தினமும் நள்ளிரவு வரை சத்தமான இசையுடன் குடித்து தீர்த்து விடுகிறார்கள். குடித்துவிட்டு பெண்கள் செய்யும் வன்முறை அதிமாகி உள்ளது.


இவை தவிர ராணி மாளிகையும், பிக் பென் கடிகாரமும், டவர் ப்ரிட்ஜும், லண்டன் கண்ணும், ட்ரஃபாலகர் ஸ்கொயரும், பிக்கடில்லி சர்கஸ்ஸும் இங்கு மிகப் பிரசித்தமாதலால் இப்பகுதிகளில கூட்டம் அதிகமாக இருக்கிறது. லண்டன் கண் முப்பது நிமிடங்கள் சாகவாசமாக சுற்றி இறக்கி விடும். நீண்ட வரிசை இருப்பதால் ஒரு பாதி நாள் இதிலேயே கழிந்து விடும்.

உங்களுக்கு இட்லியும் மசாலா தோசையும் சாப்பிட்ட பின் ஒரு காப்பியும் குடிக்க வேண்டும் என தோன்றினால் ஈஸ்ட் ஹாமில் ஹை ஸ்ட்ரீட் சென்றுவிட்டால், வசந்த பவனில் ஆரம்பித்து சரவண பவன் சென்னை தோசா, செட்டி நாட் என சகல ஹோட்டல்களும் உள்ளது. ப்ளாட்பாரத்தை பாதி ஆகரமித்து மேற்கூறையில் பல சாமன்களை தொங்கவிட்டு அப்படியே நம்ம சென்னை ரங்கநானதை நினைவூட்டும் பல கடைகளும் உண்டு. எங்கு போனால் என்ன தென் மக்கள் தென் மக்களே.