ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் ஏ.ஆர்.ரஹ்மான்
Tuesday, September 29, 2009 | 0 Comments
உன்னைப் போல் ஒருவன் - 'ஆனந்தவிகடன்' விமர்சனம்
நகரின் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு அவற்றை வெடிக்கச் செய்யாமல் இருக்க, போலீஸ் கமிஷனர் மோகன்லாலிடம் பேரம் பேசுகிறார் கமல். இந்தியாவின் முக்கியமான குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது பேரம்.
காவல்துறை தனது முழு பலத்தைப் பிரயோகித்தும் கமலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. டெக்னிக்கலாக அப்படியொரு தண்ணி காட்டுகிறார். வேறு வழியில்லாமல் நான்கு தீவிரவாதிகளையும் கமல் சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அடுத்த இருபது நிமிடங்களுக்கு பளீர், சுளீர் திருப்பங்கள். ஹிந்தியில் வெளியான எ வெட்னெஸ் டே படத்தின் தமிழாக்கம்.
காலையில் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறிகள் வாடி வதங்குவதற்குள், மாநகரத்தைத் துளிக்கூட சலனப்படுத்தாமல் போலீஸுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாடம் எடுக்கிற ஜெட் வேகத் திரைக்கதைதான் படத்தின் ரியல் ஹீரோ.
பிரேமுக்கு பிரேம் தானே ஆக்கிரமிக்க நினைக்கிற ஹீரோக்களுக்கு மத்தியில் பிற நடிகர்களுக்குச் சமமான ஸ்கோப், சொல்லப் போனால் தன்னைவிடக் கூடுதலாக வாய்ப்பு கொடுத்த கமலுக்கு அன்பான கைகுலுக்கல்கள்.
போலீஸ் கமிஷனராக மோகன்லால், ஒரு பெர்ஃபெக்ட் ஃபிட், அசாத்தியமான சூழலில் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கண் முன் நிறுத்துகிறார்.
தலைமைச் செயலாளருடன் உரசிக் கொள்ளும்போதும், தனது ஜூனியர் அதிகாரிகளிடம் கனிவும், கண்டிப்புமாக வேலை வாங்கும்போதும் வெல்டன் லால்.(த.செ.வாக வரும் லட்சுமியின் க்ளோஸ் அப்புகளைத் தவிர்த்திருக்கலாம்)
படம் முழுக்க ஒரே இடத்தில் இருந்தபடி ஹெட்போன் மைக்கில் பேசிக் கொள்வதுதான் கமல் வேலை. ஆனால், அதிலும் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்களைக் காட்டி மறுபடி நிரூபித்திருக்கிறார். சின்சியருக்கு சின்சியர்.
ஜூனியர்களாக வரும் பரத்ரெட்டி, கணேஷ் வெங்கட்ராம் எல்லாமே கேரக்டருக்கு ஏற்ற மிடுக்கு. நியூஸ் ரிப்போர்ட்டராக வரும் அனுஜா ஐயர், ணோகன்லாலிடம் "கேன் ஐ ஸ்மோக் ஹியர்..?" எனும் இடத்தில் அட போட வைக்கிறார்.
ஒரு காமன்மேன் இத்தனை அசகாயக் காரியங்கள் மூலம் அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுகிறதுதான். ஆனால் அதற்கான டெக்னிக்கல் சங்கதிகளைக் காட்டி நியாயப்படுத்தி விடுகிறார்கள். தேவை தில்லும், துணிச்சலும்தான்.
ஆனால் படமே கொஞ்சம் டெக்னிக்கல் அறிவைத் தாண்டி நிற்கும்போது, காட்சிக்குக் காட்சி இங்கிலீஷில் இப்படி சொடுக்கியிருக்க வேண்டுமா? "ரீமேக் படத்தை இன்னொரு வாட்டி தமிழ்ல டப்பிங் பண்ணுங்கப்பா" என்கிற கமெண்ட்டுகள் காதில் விழுகின்றன.
கேமராமேன் மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு கிரிஸ்டல் கிளியர். அறிமுகம் என்பதாலேயே மனம் போன போக்கில் வாத்தியங்களை இசைக்கவிடாமல் கச்சிதமாக பின்னணி இசையை ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
ஹிந்தி ஒரிஜினலில் அந்தக் கதாநாயகனின் கோபத்துக்குக் காரணமான ரயில் குண்டு வெடிப்புகள், படத்தின் கிளைமாக்ஸில் அவன் வார்த்தைகளில் வெடிப்பதற்கு வலுவான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இங்கே கமலின் கோபத்திற்குச் சொல்லப்படுவதோ இங்குள்ள வெகுஜனத்தின் உணர்வுகளைத் தூண்டாத சமாச்சாரங்கள் பல(பெஸ்ட் பேக்கரிகூட..!) எந்த மதத்திலிருந்து வந்தாலும் தீவிரவாதத்தைத் தண்டிப்பதில் தாமதம்கூடாது என்ற நியாயமான உண்மையை பளிச்சென்று கன்னத்தில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கலாம்.
அதையே, கன்னத்தில் தடவிச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்(நாலில் மூவர் முஸ்லீம், ஒருவர் ஹிந்து) திரைக்கதை, வசனகர்த்தாவுக்கு இங்கே இருப்பது புரிகிறது. ஆனால், கிளைமாக்ஸ் வேகத்தை அதுவும் சேர்த்தல்லவா நீர்க்கச் செய்கிறது?
இருந்தாலும், 'இவனைப் போல் நம்மில் எத்தனை பேர்' என்ற ஏக்கம் எழவே செய்கிறது.
மதிப்பெண் : 42 / 100
Tuesday, September 29, 2009 | 0 Comments
பின்வாங்கிய நயன்தாரா!
ிடீரென்று பின் வாங்கிவிட்டார் நயன்தாரா. முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு முக்கியமான விஷயத்தை மறுத்திருக்கிறார். என்னைக் கண்டிக்க ரமலத்துக்கு அருகதை கிடையாது என்று தான் பேட்டியளிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார். ஏன் இந்தப் பின்வாங்கல்? வேறொன்றுமில்லை. ரமலத் வீட்டுக்கு நாலைந்து பெண்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் போயிருப்பதாகத் தகவல் வந்ததாம் அவருக்கு. ரமலத்துக்கு ஆறுதல் கூறிய அந்தப் பெண்கள் அமைப்பினர், நயன்தாரா எங்கு போனாலும் அவரைச் சூழ்ந்துகொண்டு கேரோ செய்யப் போவதாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும் ஆவேசமாகக் கூற, இந்த விஷயமும் அப்படியே நயன்தாரா காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான் இனி இதுபற்றிப் பேசவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். இது சம்பந்தமாகக் கேள்வி கேட்க விரும்புகிற பத்திரிகையாளர்கள் பிரபுதேவாவைக் கேட்கட்டும். என்னிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டாராம் தெளிவாக. |
Tuesday, September 29, 2009 | 0 Comments