feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

காலடேனியன் காட்டின் கோலங்கள்

Labels: , , ,

இங்க பக்கத்துல போட்டிருக்கிற கோலத்த பாருங்க..
அட கோலம் என்றால் தமிழ்ல இன்னொரு அர்த்தம் பன்றிங்கோ.


உதாரணத்துக்கு இந்த புராண பாடல்களில் பார்க்கலாம்.




ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவர்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை. (--- நளவெண்பா)

கோலமெனு மோருருவு கொண்டுபில மேகி
ஞாலமெவ ணுற்றதென நாடியது தன்னை
வாலிய வெயிற்றினிடை வல்லைகொடு மீண்டு
மூலமென வேநிறுவி மொய்ம்பினொடு போனான் (-19--கந்தபுராணம்)
பன்றிக் காய்ச்சலால் உலகமே அரண்டு போய் பன்றியை கண்டாலே தெறிச்சு ஒடும் அளவுக்கு இந்த (அப்)பிராணி மேல பழி வந்து விட்டது. விமான நிலையத்துல முழு-உடல் வெப்பமாணிகளை வைத்து பிராயனிகளை சோதனை செய்யும் அளவுக்கு பீதி பரவியது. இந்த வெப்பமாணிகளை கடந்து போகும் பிரயாணிகளின் உடல் வெப்பத்தை திரையில் பார்த்தபின் அவர்களை அனுமதிக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் சென்னை சென்று வந்த நண்பர் சொன்னது என்ன வென்றால், சில அதிகாரிகள் மானிடரை சிறிதுகூட பார்க்காமலேயே பிரயாணிகளை கடந்து செல்ல அனுமதித்து இருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் எந்த அளவுக்கும் சலித்து/நொந்து போயிருக்க வேண்டும்?

ஆனால் இந்த அப்பிராணியின் மூதாதயைரான காட்டு பன்றி (wild boar) இருக்க வேண்டிய இடமான காட்டில் இல்லாமல் போனதால காடே காணாமல் போய் விடக்கூடும் அபாயம் இருப்பதாக Trees for life அறக்கட்டளை மக்கள் அபிப்ராயப்படுகிறார்கள். இதற்காக இந்த வாரம் பல காட்டு பன்றிகளை சுதந்திரமாக இந்த காலடேனியக் காட்டில் விட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 13ம் நூற்றாண்டு வாக்கில் இந்த பக்கத்து, ஆங்கிலோ-சாக்ஸன், வைக்கிங் மற்றும் இன்ன பிர குறு, மற்றும் மாமன்னர்களும், ராசாக்களும் பொழுது போகாமல் வேட்டையாடி கிட்டத்தட்ட இந்த வகை பன்றிளை அழித்தே விட்டார்கள்.

இந்த வகை பன்றிகள் மூக்கால் நிலைத்தை கிளறி அதனடியிலிருக்கும் ஒருவகை Rizhomeகிழங்குளை (??) உண்ணும். இந்த வகை செடிகள் fern என்னும் மரங்களை வளரவிடாமல் செய்யும். இந்த பன்றிகள் இதை உண்பதால் இந்த வகை செடிகள் மிகவும் கட்டுப்படுத்தப் பட்டு fern மரங்களும் அதயொட்டிய மற்ற வகை தாவரங்களும் இயற்கையில் எப்படி வளருமோ அவ்வாறே வளர்வதை பரிசோதித்து நிரூபித்திருக்கிறார்கள். ஆக எல்லா ஜீவ ராசிகளுக்கும் பங்கு இருப்பதை மீண்டும் இந்த பன்றியின் முலம் இயற்கை எடுத்து சொல்லியிருக்கிறது. வீரப்பன் போன்று காட்டில் விடப்பட்ட இந்த பன்றிகளை யாராவது வேடையாடி ஏப்பம விட்டுவிடாமல் இருக்க இந்த பன்றிகளின் மீது ட்ரான்ஸ்மீட்டர் பொருத்தியிருக்கிறார்கள்.

ஆக திருமால் வராகமாக தோண்டியெடுத்து பூமிய காப்பாத்துனாருன்னு சொன்னது இதத்தானோ?? பெரியாரிஸ்டுகளால் ஒத்துக்கொள்ள முடியாது.