feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

(கள்ள)காதல் கொடுத்த பரிசு!

Labels:

விதி வழியோட போனாலும் வில்லங்கம் விருந்து வச்சு அழைக்குமாம். அப்படி ஆகியிருக்கு நயன்தாரா நிலைமை. பிரபுதேவாவுடனான கள்ள காதலை முறித்துக் கொண்டு அவரிடமிருந்து விலகிக் கொண்டதாக அறிவிக்கணும். அப்படி இல்லேன்னா நயன்தாரா படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் பண்ணுவோம் என்று அறிவித்திருக்கிறது மாதர் சங்கங்கள்.

ஏதோ நாலு பேரு ஒண்ணா சேர்ந்து கத்துறாங்க. நம்மை என்ன செய்ய முடியும்? என்று அலட்சியமாக போய்விட முடியாது நயன்தாரா. ஏனென்றால் மாதர் சங்கங்களின் மகிமை என்ன என்பதை கடந்த காலங்களில் உணர்த்தியிருக்கிறார்கள் பல விஷயங்களில். எனவே நயன்தாரா பிரபுதேவா விவகாரத்தில் அது சீரியஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வது இரு தரப்புக்குமே நல்லது.

இதற்கிடையில் பெங்களூர் மற்றும், மும்பையிலேயே தங்கியிருக்கும் பிரபுதேவா, சென்னைக்கு வருவதையே தவிர்த்து வருகிறாராம். வந்தால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சம்தான் காரணம். ஆனால் போனிலேயே தனது அதிருப்தியை வெளியிட்டதோடு இப்படி மீடியாவிடம் பேசி மானத்தை வாங்குறியே என்றும் கடிந்து கொண்டாராம்.

தலைக்கு மேலே போய்விட்டது. இனிமேலும் அமைதியாக இருந்தால் குல்லாதான் மிஞ்சும். எனவே போராட்டத்தை வலுவாக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ரமலத். இதற்கிடையில் சென்னையில் 28 ந் தேதி நடைபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்திருந்த கள்ளக்காதல் தம்பதி அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டார்களாம்.

கமல்ஹாசனுக்கு எடுக்கப்படும் இந்த விழாவில் இந்த தம்பதிகள் கலந்து கொண்டால் நிகழ்ச்சியின் நோக்கம் திசை மாறக் கூடும். அது கமலுக்கு பெருமை சேர்ப்பதாக அமையாது என்பது தொலைக்காட்சி நிர்வாகத்தின் கணிப்பு. எனவே அவர்கள் தரப்பிலிருந்தே இந்த கள்ளக்காதல் தம்பதிகளுக்கு "வராதீர்கள்" என்று செய்தி போயிருக்கிறதாம்.

(கள்ள)காதல் கொடுத்த பரிசை பார்த்தீங்களா?
நம்பர் 1 தமிழ் சினிமா !

Labels:

1920-ல் துவங்கி காந்தி சுடப்பட்ட தினத்தோடு முடியும் "காஞ்சிவரம்' சினிமா, என் ஒன்பது வருஷ கனவு. பங்கெடுத்த அத்தனை பட விழாக்களிலும் காஞ்சிவரத்துக்கு கிடைத்த வரவேற்பு, கௌரவம் இதுவரை நான் செய்த படங்களுக்குக் கிடைக்கவில்லை.


இப்போது அதற்கு மணி மகுடமாக தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. கண்ணீர் துளிர்த்து நின்ற தருணங்களை மறக்க முடியாது என தேசிய விருது தந்த மகிழ்ச்சியில் பேசுகிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.

"காஞ்சிவரம்' எப்படி நடந்தது இது?
சினிமாவில் எனக்கான ஓர் அங்கீகாரத்தை பெற வேண்டும் என இயங்கத் தொடங்கியதில் இருந்தே இதன் கரு எனக்குள்ளே உருவாகியிருந்தது. ஆனால், மும்பை பர்சத் பிக்சர்ஸ் கம்பெனியின் மூலம்தான் பலிக்கணும்னு இருந்திருக்கு.

காஞ்சிபுரம் பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கினால் கூடைக் கூடையாய் அவ்வளவு செய்திகள். ஆயிரம் கோயில்கள் அங்கே இருந்திருக்கு.

இப்ப அதற்கான தடயங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. காஞ்சிபுரத்தின் அசல் மொழி எனக்குத் தெரியாது.

ஆனால், அதன் ஆன்மா புரியும். கார்ட்டூனிஸ்ட் மதன் அதற்கு பெரிதும் உதவினார். 1920-ல் இருந்த காஞ்சிபுரத்தைக் கண் முன்னால் உலவ விட்டார் சாபுசிரில். உலகம் புரிந்து கொள்ளாத பிரகாஷ்ராஜின் அபூர்வமான மறுபக்கம் பிரமிப்பாகப் பதிவாகியிருந்தது.

இதை ஆர்ட் பிலிம் என்று சொல்லி விட முடியாது. அர்த்தமுள்ள சினிமாங்கிற வார்த்தைதான் சரி
ஐ.சி.சி சாம்பியன் திரோபி - பாகிஸ்த்தானிடம் வீழ்ந்தது இந்தியா !

Labels:

ஐசிசி நடத்தும் சாம்பியன் கிண்ணப்போட்டிகளில் குழு A பிரிவில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்திய பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சொயிப் மலிக்கின் அதிரடி சதத்தால் பாகிஸ்த்தான் அபார வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. ஆஷஸ் நேஹ்ரா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஆனால் மலிக், யூசப் ஜோடி களமிறங்கியதும், ஆட்டம் சூடுபிடித்தது. அதிரடியாக ஆடிய சொஹிப் மலில் 16 பவுன்றிகள் அடங்களாக 126 பந்துகளில் 126 ஓடங்களை எடுத்தார். மொஹ்மட் யூசப் 87 ஓட்டங்களை எடுத்தார்.

65 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட் வீழ்ந்திருந்தது. அடுத்த விக்கெட் 271 ஓட்டங்கள் பெற்றிருந்த போதே வீழ்ந்தது. யூசப் அவுட்டாகியதும், 'சச்சின் தமக்கு ஒரு பொருட்டே இல்லை என பேட்டியளித்த அப்ரிடி களமிறங்கினார். ஆனால் 0வந்த வேகத்திலேயே பவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்தவர்கள் யாவரும் குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்த போதும், மலிக்கின் சதத்தினால், 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்த்தான் அணி, 302 ஓட்டங்களை குவித்திருந்தது.

பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் சச்சின் வந்த வேகத்திலேயே பவிலியன் திரும்பினார். இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த ட்ராவிட், கம்பீர் ஜோடி இந்தியாவிற்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் கௌதம் கம்பீர் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்த போது, ஆட்டமிழக்க நேரிட்டது. அடுத்தடுத்து வந்தவர்கள் பிரகாசிக்கத்தவறிய போதும் ஒரு பக்கம் ட்ராவிட் மட்டும் நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்தார்.

சுரேஷ் ரைனா, ட்ராவிட்டிற்கு கைகொடுக்க வந்தார். ஆனால் 46 ஓட்டங்களை பெற்றிருந்த போது அவரும் ஆட்டமிழந்தார். இந்தியாவின் தோல்வி உறுதியானது. 44.5 ஓவர்கள் முடிவில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை மாத்திரமே இந்தியாவால் எடுக்க முடிந்தது.

டிராவிட் மட்டும் அதிகூடிய ஓட்டமாக 78 ஓட்டங்களை குவித்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சொஹிப் மலிக் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை குழு A பிரிவில் நடைபெற்ற மற்றுமொரு ஆட்டத்தில் அஸ்திரேலியா அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியினை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நியுசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே ஒரு போட்டியும், இங்கிலாந்து-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே மற்றுமொரு போட்டியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.