feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

கவுதம் லூசுதேவ மேனன்

Labels:


இந்த கட்டுரை, கவுதம் 'லூசு'தேவ மேனனைத் தவிர வேறு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...!!

சமீப காலமாக நம்மூர் மக்கள் கவுதம்மேனனை தலையில் தூக்கிவைத்து ஆடுவதில் மும்முரமாக உள்ளதைக் கண்டதின் பலனாகவே இதை எழுதுகிறேன். இவரின் முதல் சில சினிமாக்களில் இவர் பெயர் வெறும் 'கவுதம்'. பின் 'கவுதம் மேனன்'. பின் 'கவுதம் வாசுதேவ மேனன்'. பின்வரும் நாட்களில் கவுதம் 'லூசு'தேவ மேனனாகக் கூட மாறலாம்.

ஆங்கிலப் படங்களை திருட்டு விசிடியில் பார்த்து படம் எடுப்பதை வரவேற்பவன் நான். ஏனென்றால் இங்கிருக்கும் பல இயக்குனர்கள் சொந்தமாக சிந்தித்து படமெடுத்தால் நம் கதி அவ்வளவுதான். ஆனால் கவுதம் என்ற அறிவுஜீவி, தான் காப்பி அடித்ததை ஒத்துக்கொள்ள மறுப்பதோடல்லாமல், காப்பியடிக்கப்பட்ட கதை தன் வாழ்வில் தனக்கு நடந்த சம்பவம் என கொஞ்சமும் கூச்சப்படாமல் சொல்லும் ஒரு வெட்கங்கெட்ட கேரக்டர். அது எப்படியோ தெரியவில்லை, கவுதம் வாழ்க்கைல நடந்த கதையை அமெரிக்காகாரன் 'Forrest Gump'னு TomHanksச வச்சு படமா எடுத்துட்டான். (என்னால கவுதமை பற்றி எழுத்துத் தமிழ்ல இதுக்கு மேல எழுத முடில. அதுனால பேச்சுத்தமிழ்லயே எழுதிறேன்.!!)

முதல்ல 'வானரம்' ஆயிரம் படத்த பாப்போம். ஒரு அருமையான அமெரிக்க படத்தை காப்பி அடிச்சதையாவது ஒழுங்கா அடிச்சுச்சா இந்த அதிகப்பிரசங்கி? முதல் காட்சில புருசன் சூர்யா ரத்தம் ரத்தமா கக்குறத பார்த்து பொண்டாட்டி சிம்ரன் சாவகாசமா "ஹேய் வாட் ஹேப்பண்ட் (Hey, what happened?)"னு ரொம்ப ஜாலியா, கூலா ஒரு வசனம் பேசுச்சு பாருங்க, எனக்கு ரத்தவாந்தியே வந்துருச்சு. அடுத்த சீன்ல அடுத்த அட்டாக் என்னன்னா, அப்பன் சாகுறத பார்த்து மகள் ரசிச்சுட்டே சொல்லுவா "(mom.See.He is smiling!!)மாம். சீ.. ஹி இச் ஸ்மைலிங்"னு!!! அடங்கொன்னியா!! என்னால முடிலடா சாமி!!
ஸ்கூல் ஃபீசு கட்ட வக்கில்லாம தங்கச்சிகிட்ட கடன் வாங்குன அப்பன், பையன அமெரிக்கா அனுப்புவாராம். பையன் அங்கபோயி ஜாலியா கும்மாளம் போடுவாராம்!! அப்பன், பையனோட நண்பர்கள் முன்னாடி பொண்டாட்டி மேல சாஞ்சுகிட்டே தண்ணியடிப்பாராம், அதுவும் 1980கள்ல. இப்ப அப்படி பண்ணாலே எந்தப் பையனும் செருப்பால அடிப்பான். ஆனா படத்துல பையனும் பொண்டாட்டியும், அப்பன் தண்ணியடிக்கிறத கும்பலா ரசிக்கிறாங்கப்பா.

எல்லாத்தையும் விட காமெடி, "மாலினி நீ அவ்ளோ அழகு"னு சூர்யா சொல்றப்ப சிம்ரன் ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க, அய்யோ அம்மா... செத்துப்போன எங்கப்பத்தா கூட அழகா சிரிக்கும்டா சாமி. படம் இப்ப முடிஞ்சிரும் அப்ப முடிஞ்சிரும்னு பார்த்தா கிழவன் சூர்யா நடந்துகிட்டே அட்வைச போடுறான், பையன் ஆடிகிட்டே அருவைய போட்றான். "ஐ தின்க் ஐ ஃபெல் இன் லவ் வித் யூ (i think i fell in love with you)"னு படத்துல அத்தனை பேரும் பத்து தடவ சொல்றாய்ங்க. எனக்கு பைத்தியமே புடிச்சு போச்சு. ஆங்கில படத்த காப்பியடிச்ச சரி, அதுக்காக வசனத்தையுமா ராசா காப்பியடிக்கிறது??!!!

இன்னொன்னு..
கவுதம் படத்துல எல்லாருமே நீளமா முடி வளர்த்துகிட்டு கெட்ட கெட்ட வார்த்தையா பேசுவாய்ங்க. எல்லாமே ஆங்கிலப் படத்துல வர்ற "Fuck, Cunt, Son of a bitch, etc" போன்ற மிகக் கேவலமான வார்த்தைகள். இந்த லூசுதேவ மேனன் அதைக் கூட விடுறதில்ல. எல்லா வார்த்தையையும் அப்படியே தமிழ்ல டப்பிங் பண்ணி வசனம் எழுதிரும். நமக்கு தியேட்டர்ல பாக்குறப்ப "****தா வாடா" "பெரிய போலீஸ் ******டையாடா நீ", "உன் பொம்பளை****** தூக்கிட்டேன்டா"னு முக்கால்வாசி சென்சார் பண்ணித்தான் கேக்கும்! ஆனா ஈயடிச்சான் காப்பில கவுதமை மிஞ்ச முடியாது. பெரிய ஜார்ஜ் புஷு பேரன்னு நினைப்பு, காதலை சொல்றதை கூட "நான் உன்ன விரும்புறேன்"னு இவரு படத்துல சொல்ல மாட்டாய்ங்க. "ஐ ஃபெல் இன் லவ் வித் யூ"னு எஸ்.எம்.எஸ் அனுப்புற மாதிரிதான் பேசுவாய்ங்க. அப்பத்தான் படம் உலகசினிமா அளவுல இருக்குமாம். இப்படி போயி ஒரு பொண்ணுகிட்ட காதலை சொன்னா, லவ் லெட்டர் இல்ல, நம்மல மென்டல்னு நினைச்சு நம்ம மேல ஒரு ஈவ்டீசிங் கேசு கூட கொடுக்காது.

வேட்டையாடு விளையாடு படம் அப்படியே RED DRAGON மற்றும் இன்னும் சில சீரியல் கில்லர் படங்களின் காப்பி. அதுல வில்லன்களை ஓரினசேர்க்கையாளர்களாகவும், பெண்களை வல்லுறவு கொள்ளும் வெறியர்களாகவும் காமிச்சிருப்பாரு இந்த அரைவேக்காட்டு இயக்குனர்!! எங்க போயி சொல்றது. அந்தப் படத்துல நடிச்சதுக்கு கமலே வருத்தப்பட்டது வேற விஷயம். பச்சைக்கிளி முத்துச்சரம் 'Derailed' என்ற படத்தின் அச்சு அசல் காப்பி.

சமீபத்துல ஒரு இணையதள நேர்காணல்ல இந்த லூசுதேவ மேனன் ஒரு செம காமெடி பண்ணாரு. நிருபர், இயக்குனர் மிஸ்கின் பத்தி கேட்டதுக்கு, கருத்து சொல்ல மாட்டாராம் இவரு. ஏன்னா மிஸ்கின் இரண்டு படம் தான் இயக்கியிருக்காராம். ஆனா சுப்பிரமணியபுரம் நல்ல படம், சசிகுமார் நல்ல டைரக்டர்னு மட்டும் அதே நேர்காணல்ல சொல்லுவாராம். சசிகுமார் மட்டும் என்ன மூணு படமா இயக்கிருக்காரு!!
http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/gautham-menon-2.html

சூர்யா மட்டும் இல்லென்னா வாரணம் ஆயிரம் 'சாம் ஆண்டர்சனின்' 'யாருக்கு யாரோ' ரேஞ்சுக்கு ஆயிருக்கும்.

நண்பர்களே நிறைய படங்களை பாருங்க. எது நல்ல படம், யார் நல்ல இயக்குனர் என்பதை முதலில் உங்கள் மனதில் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஊரில் நிறைய பேர் சொல்கிறார்கள் என நீங்களும் குமபலோடு கோவிந்தா போடுவதால்தான் கவுதம் வாசுதேவ மேனன் போன்ற ஆட்கள் நிறைய முளைக்கிறார்கள்.

ஆனா எனக்கு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. ஏன்னா அடுத்த படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ல கவுதமோட சோடி போட்டுருக்குறது 'ஆம்பிளை ஷகீலா' சிம்பு. அதுவும் போக, எப்பவும் இணையத்துல நல்ல ஆங்கில பாடல்களை தேடி, சுட்டு, மெட்டு போடும் ஆரீஸ் ஜெயராஜும் இந்தப்படத்துல கிடையாது. சிம்புவும்-கவுதமும் மட்டும் சேர்ந்துருக்காங்கப்பா.4 comments:
gravatar
cibi said...
September 24, 2009 at 10:15 AM  

//இந்த கட்டுரை, கவுதம் 'லூசு'தேவ மேனனைத் தவிர வேறு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...!!//

எப்படிப்பா இவ்வளவு கிண்டலா எழுதுறீங்க.. பிரமாதம். (உனக்கு ஒட்டு போட்டுட்டுதான் மறுவேலை பார்க்கப்போபோறேன் )

gravatar
enRenRum-anbudan.BALA said...
September 24, 2009 at 10:33 AM  

யப்பா, துவைச்சு காயப் போட்டுட்டீங்க போல :)

கௌதம் over-rated என்பதில் சந்தேகமே இல்லை, நாம தான் "ஏத்தி" விடறதில் மன்னர்களாச்சே ;-)

gravatar
பின்னோக்கி said...
September 24, 2009 at 10:25 PM  

வாரணம் ஆயிரம் - சுமார் என்கிறீர்கள். அப்பா சூர்யா, தன் பேரனை பற்றி சொல்லும் வசனம். top class. இதே வசனம் என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன் :-(, தன் மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் போது.

May be Gautham Menon, அப்பா இறக்கும் போது இதயே சொல்லி இருக்கலாம்.
"daddy is no more" என்றதை ப்ற்றி திட்டி இருக்கிறீர்கள்.
கதைப் படி, சூர்யாவுக்கு புற்றுநோய். ஆதனால், இறப்பை அனைவரும் உணர்ந்து இருப்பார்கள்.
புற்றுநோய் நோயாளிகள் படும் கஷ்டம் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அதுவும், கீமோ தெரபி என்ற விஷம், கொடுக்கபட்டவுடன், பக்கவிளைவுகள் கொடூரமானவை.
இதை பார்க்கும், குடும்பத்தினர்க்கு, நோயாளி இறப்பதற்கு முன்பே அழுது அழுது, கண்ணீர் தீர்ந்துவிடும்.

மரணம் சம்பவிக்கும் போது, ஒரு மவுனம் மட்டுமே மிஞ்சும். இந்த காரணத்தினால், அப்படி பட்ட வசனம் எழுதியிருக்கலாம்.
மேலும், English பேசுவதை பற்றி கிண்டல் செய்திருக்கிறீர்கள். படத்தின் ஆரம்பத்திலிருந்து பல காட்சிகளில், அந்த குடும்பம், metropolitan city களில் வசித்திருப்பதை இயக்குனர், வசனம் + காட்சிகளில் காட்டியிருப்பார். இந்த கதை ஒரு taminglish பேசும், குடும்பத்தை பற்றி என நினைக்கலாம் இல்லயா ?. சற்று யோசியுங்கள், நீங்கள், உங்கள் பெற்றோரிடம் பேசியற்கும், நீங்கள், உங்கள் பிள்ளையிடம், பேசும் போது English வார்தைகள் அதிகம் உபயோகிப்பது இல்லயா ?

நான் இவரை மிகப்பெரிய இயக்குனர் என சொல்ல வரவில்லை. ஆனால், பார்க்கத்தகுந்த படங்களை கொடுக்க கூடியவர். இந்த அளவுக்கு கடுமையான விமர்சனம் தேவையில்லாதது.

உங்களின் கருத்து இது என்ற அளவில் இதை எடுத்துக் கொள்ளலாம்.

gravatar
பின்னோக்கி said...
September 24, 2009 at 10:33 PM  

//"மாலினி நீ அவ்ளோ அழகு"னு சூர்யா சொல்றப்ப சிம்ரன் ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க, அய்யோ அம்மா

நீங்கள் சொல்வது முற்றும் உண்மை. இதைப்பற்றி கேட்ட போது, கவுதம் மிகவும் வருத்ததுடன், இந்த சீனைப் பற்றி சிம்ரனிடம் சொல்லிவிட்டதாகவும், ஆனால், அதன் பின்னும் அவர் தன் தோற்றத்தை மேம்படுத்த முயற்சி எடுக்கவில்லை என வருத்தப்பட்டார்.

வாரணம் ஆயிரம் - பெற்றவர்க்ள் உயிருடன் இருப்பவர்கள் இப்படத்தை அவ்வளவாக ரசிக்க முடியாது. காரணம் முதல் காட்சியில் இருந்து பல காட்சிகள் தன் தந்தை இறந்தபின் நடப்பதாக கூறியிருப்பார். எனக்கு இப்படத்தை பார்க்கும் போது கலங்கி போனேன். அதனால் இப்படத்தை பிடிக்கும். பெரும்பாலும் இப்படத்திற்கு நெகடிவ்வான விமர்சனங்கள் தான் வந்தன. அதனால் உங்கள் விமர்சனம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை.

ஆனால் ஒருவரை மிகவும் எளிதாக “லூசு” என எழுதியிருக்கிறீர்கள். அவரின் படங்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் அவரை தனிப்பட்ட விதத்தில் லூசு என விமர்சிப்பது சரி தானா என யோசியுங்கள். வருத்தமாக இருக்கிறது.

Post a Comment