சென்னைக்கு வந்த சிந்து மேனன்
இட்லியிலிருந்து ஆவி வருதுன்னு சொல்லுங்க நம்புறேன். அதுக்காக ஆவி, பிசாசுன்னு என்னை பயமுறுத்தாதீங்க" என்றார் சிந்து மேனன்.
பொண்ணு சென்னைக்கு வந்து சில மணி நேரம்தான் ஆகுது. அதுக்குள்ளே போன்லே பேசி பயமுறுத்த ஆரம்பிச்சிட்டோம்ல...
ஆவி மேல எனக்கு நம்பிக்கையெல்லாம் இல்லை. ராத்திரி ஒரு மணிக்கு சுடுகாட்டுக்கு போக சொல்லுங்க. எல்லாருக்கும் முன்னாடி நான்தான் நிற்பேன் என்கிறார் அஹ்ஹ்ஹா... சிரிப்புடன். சிந்து சொன்னா அதை சீரியசா எடுத்துக்கணும். ஏன்னா, ஈரம் படத்திலே ஆவியா வந்து அத்தனை பேரையும் போட்டுத்தள்ளுவதே இவர்தானே!
எனக்கு இந்த படத்திலே ரொம்ப பிடிச்சதே ஆவியோட கேரக்டர்தான். பொதுவா இதுபோன்ற படங்களில் வெள்ளை புடவை கட்டிக்கிட்டு பின்னாடி சாம்பிராணி புகை பறக்க ஜல் ஜல்லுன்னு நடந்து போற மாதிரிதான் ஆவிகளை காமிப்பாங்க. ஆனால் அறிவழகன் வேற மாதிரி காமிச்சிருக்கார். அதுதான் ஹைலைட் என்றார் சிந்து.
ஆமா, தமிழ்நாட்டையே மறந்திட்டீங்களே, ஏனுங்க? என்றால் நல்ல கதைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இடையிலே கன்னடம், தெலுங்கு, மலையாளம்னு இருபது படங்களுக்கு மேல் பண்ணிட்டேன். ஷங்கர் சார் படங்கள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்திற்காக ஹீரோயின் தேடிட்டு இருக்கும்போதுதான் என் போட்டேவை ஏதோ ஒரு மேகசின்லே பார்த்தாராம் ஷங்கர் சார். அறிவழகனிடம் சொல்லியிருக்கார். ஐதராபாத்திற்கே வந்து என்னிடம் கதை சொன்னார். அப்பவே சைன் பண்ணிட்டேன் தெரியுமா? நான் உங்களை விட்டு எங்கேயும் போயிர மாட்டேன் என்றார் சிந்து மேனன்.
Post a Comment