feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count
Sep
24

நாயகி தேடும் தனுஷ்

Labels:

உண்மையிலேயே கோடம்பாக்கத்தில் ஹீரோயின் பஞ்சம் தலைவி‌ரித்தாடுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தனுஷ்.

ஆடுகளம் படத்தில் ஒப்பந்தமான த்‌ரிஷா, இந்தி வாய்ப்பு வந்ததும் ஆடுகளத்துக்காக வாங்கிய அட்வான்ஸை திருப்பி‌க் கொடுத்தார். இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் ஸ்ரேயா. வெற்றிமாறன் படத்தை தொடங்க தாமதமானதால் அவர் படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆடுகளம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஹீரோயின் இல்லாமல் என்பது முக்கியமானது. பட யூனிட் ஹீரோயின் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது.

தெலுங்கில் ராம்சரண் தேஜா, ஜெனிலியா நடித்த ரெடி படத்தை தமிழில் ‌ரீமேக் செய்கிறார்கள். தமிழில் நடிப்பவர் தனுஷ். அவருக்கு ஜோடியாக நடிக்க ஜெனிலியாவிடம் கால்ஷீட் கேட்டிருந்தனர். இந்தியில் இரண்டு கோடி சம்பளம் வாங்கும் ஜெனிலியா கால்ஷீட் இல்லையென்று கைவி‌ரிக்க, வேறு நடிகையை தேடி வருகிறார்கள்.

யாராவது இருந்தால் சொல்லுங்கப்பா.



0 comments:

Post a Comment