ஜெய்ஆகாஷ் பதிலடி!
ஆனால் அதே வேகத்தில் மறுப்பையும் தனது புகாரையும் நடிகர் சங்கத்தில் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஜெய் ஆகாஷ். நான் டூப் போட்டு அந்த காட்சிகளை எடுக்கவில்லை. அதில் நடித்திருப்பது அவர்தான். என் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதுதான் காதலில் விழுந்தேன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. அப்போது என்னிடம் வந்து அந்தப் படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சினார். நான்தான் போனால் போகிறது என்று அதில் நடிக்க அனுமதித்தேன். எங்கள் ஒப்பந்தப்படி படம் முடியாமல் வேறு படங்களில் நடிக்கக் கூடாது. ஆனால் அதையெல்லாம் பொருட்டாக நினைக்காமல் நான் உதவி செய்ததற்கு அவர் காட்டிய நன்றிக் கடன் இதுதானா? சங்கமே விசாரிக்கட்டும் என்கிறார் ஜெய் ஆகாஷ். |
Post a Comment