feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count
Sep
24

ஆறுமுகம், திருதிரு ,துறுதுறு

Labels:

இந்த வாரம் நான்கு படங்கள் வெளியாகின்றன. ஆறுமுகம், திருதிரு துறுதுறு, கண்ணுக்குள்ளே மற்றும் சூரியன் சட்டக்கல்லூ‌ரி.

பரத் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா ஆறுமுகத்தை இயக்கியிருக்கிறார். ப்‌ரியாமணி ஜோடி. வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பது படத்தின் ப்ளஸ். தேவா இசையமைத்திருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.

சத்யம் சினிமாஸும், ‌ரியல் இமேஜும் இணைந்து திருதிரு துறுதுறு படத்தை தயா‌ரித்துள்ளன. நந்தினி இயக்கம். ரொமா‌ண்டிக் காமெடியான இதில் அ‌ஜ்மலுடன் பெங்களூருவை சேர்ந்த ரூபா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அபர்ணா நடித்திருக்கும் படம் கண்ணுக்குள்ளே. இதில் ஒரு குழந்தைக்கு தாயாக அவர் நடித்துள்ளார். லேனா மூவேந்தன் படத்தை இயக்க மிதுன் ஹீரோவாக நடித்துள்ளார்.

சிவசக்தி பாண்டியன் பல வருடங்களுக்குப் பிறகு சூ‌ரியன் சட்டக்கல்லூரி படத்தை தயா‌ரித்துள்ளார். க‌ஜினி, மித்ரா என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஆர்.பவண் இயக்கம். படத்தின் கதையை சிவசக்தி பாண்டியனே எழுதியிருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார்.

கடைசி நிமிடத்தில் மேலும் சில படங்கள் திரைக்கு வர வாய்ப்புள்ளது.



0 comments:

Post a Comment