feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count
Sep
24

நடிகை சினேகாவிடம் சில்மிஷம்

Labels:

சினேகாவுக்கு ரொம்ப சினேகமாக இருக்கிறது சர்ச்சைகள். இப்போதுதான் ரியல் எஸ்டேட் அதிபருடனான சர்ச்சை கொஞ்சம் ஓய்ந்தது. அதற்குள் அடுத்த சர்ச்சை.

திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகை கடை ஒன்று உள்ளது. இதன் 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. இதில் நடிகை சினேகா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


இதைத்தொடர்ந்து இன்று காலையே சின்னகடைவீதியில் ஏராளமான ரசிகர்களும், பொது மக்களும் கூடினர். சுமார் 11 மணி அளவில் நடிகை சினேகா சுடிதார் அணிந்து நகைக் கடைக்கு வந்தார். அப்போது அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் முண்டியத்தனர்.

அப்போது கூட்டத்தில் சிக்கிய சினேகாவிடம் வாலிபர் ஒருவர் இடுப்பை கிள்ளி “சில்மிஷம்” செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நடிகை சினேகா கடையின் காவலாளியிடம் நீல நிற சட்டை அணிந்த வாலிபர் தான் சில்மிஷம் செய்ததாக கூறினார்.

அதனை தொடர்ந்து காவலாளி 2 பேர் அந்த நபரை தேடினர். அப்போது அங்கு நின்ற நீல நிற சட்டை அணிந்த வாலிபர் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

அப்போது பாதுகாப்புக்கு நின்ற சப்-இன்ஸ்பெக்டர் சிவராமனும், ஏட்டுவும் வாலிபரை அடிப்பதை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும் காவலாளிகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

போலீசரிடம் கடை காவலாளிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சினோகா அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார்.

பின்னர் போலீசார் அந்த வாலிபரையும் 2 காவலாளியும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அந்த வாலிபர் மேலசிந்தாமணி காவேரி பார்க்கை சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்றும் நிதிநிறுவன அதிபர் என்றும் தெரிய வந்தது.


அவர் போலீசாரிடம் கூறும் போது , நான் எனது மனைவியுடன் கடைக்கு சென்றேன். அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது எனது கை தெரியாமல் சினேகா மீது பட்டு இருக்கலாம்” என்று கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.





0 comments:

Post a Comment