விஜய் கேட்டார் அஜித் கொடுத்தார்
Posted by
bayo
Labels:
cinema
உரிமைக்குரல், மீனவ நண்பன் என பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து ஒருவாறு சுறா என விஜயின் ஐம்பதாவது படத்துக்கு பெயர் சூட்டிவிட்டார்கள். இதென்னடா பெயர் என நாமே கொஞ்சம் யோசிக்கின்றோம். ஆனால் இந்த பெயருக்கு பின்னால் ஒரு கறுப்பு சரித்திரமே இருக்கின்றது.
எதிர் எதிர் துருவங்களாக இருந்து விஜயும் அஜித்தும் மோதியது ஒருகாலம் இப்போது ஒரே தட்டில் உணவருந்தும் அளவிற்கு இந்த மானுக்கும் புலிக்கும் இடையில் நட்பு. ஒருவர் மேல் ஒருவர் என்ன அக்கறை. இப்படி இருக்கையில் விஜய் கேட்கும்போது மறுப்பாரா என்ன அஜித். ஆனால் விஜய் கேட்டதோ படப்பெயரை, அதுவும் அஜித் தன் படத்துக்கு சூட்டி மகிழ இருந்த பெயரை.
வெளி உலகிற்கு தான் இவர்கள் நட்பு உள்ளுக்குள்ளே இன்னும் அதே புகைச்சல் எரிவு என கூறி இரண்டுபேரின் ரசிகர்களின் மனதிலும் கர்ப்பூரத்தை ஏற்றிவைத்தவர்களுக்கு இப்போது அவர்கள் வயிற்றில் கர்ப்பூரம் எரியும் நிலை. காரணம் சுறா என்னும் தலைப்பு சிவாஜி புரடக்சன் சார்பில் அஜித் நடிக்க இருந்த திரைப்படத்துக்கு சூட்டிய பெயர். அதன் பின் ஒரு சில காரணங்களால் சுறா அசலாகிப்போனது.
இந்த நிலையில் சிவாஜி புரடக்சனிடம் வேறொரு சந்தர்ப்பத்தில் இதே பெயரில் இன்னொரு படம் செய்யலாம் என சொல்லி வைத்திருந்த அஜித்துக்கு சுறா மீது அளவில்லா காதலாம். இப்படி இருக்கையில் தான் சிவாஜி புரடக்சனிடம் சுறா என்னும் பெயரை விஜய் கேட்டிருக்கின்றார். விஜய் கேட்பதை மறுக்க முடியாத அதேநேரம் அஜித்தின் பேச்சையும் தட்டமுடியாமல் இருதலை கொள்ளி எறும்பாக தவித்த ராம்குமார். இந்த பெயரை தெரிவுசெய்த அஜித்திடமே நீங்கள் கேளுங்கள் என சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் கிளைமாக்ஸ்.
நட்பு ரீதியில் அஜித்திடம் பேசிய விஜய் பெயரை வாங்கிவிட்டார். மனமுவந்து பெயரைக் கொடுத்தாலும் அஜித்துக்கு உள்ளுக்குள் ஒரு கவலையாம். வேறொன்றுமில்லை தன் நண்பன் விஜயின் படங்களுக்கு சுறா என்னும் பெயர் பொருந்தாதே என்பதுதானாம். இதுதானே உண்மையான நண்பர்களுக்குள் இருக்கவேண்டியது.
அஜித்தின்
மனம் யாருக்கு வரும். விஜய்-அஜித் என சண்டை இடும் ரசிகர்களுக்கு இது ஒரு
நல்ல பாடம். இந்த நட்பு காலம் பூர நிலைக்கவேண்டும். அதே நேரம் விஜயும்
அரசியலை தவிர்த்து விட்டு சினிமாவில் கவனம் செலுத்தினால் ரஜினி- கமல்
இணைக்கு அடுத்து அசைக்கமுடியாத இனியாக விஜய்-அஜித் இணை வேரூன்றி நிற்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment