feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count
Sep
25

ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் ரகுமான்

Labels:

ரகுமான் ஹாலிவுட் படத்துக்கு புதுமையான இசை!
இசையமைத்து வரும் ஹாலிவுட் படத்தில் புதுமையான இசை மற்றும் சவுண்ட் இருக்கும் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.கபுள்ஸ் ரீட்ரீட் ஹாலிவுட் படத்துக்கு இசைமையத்து வருகிறார் ரகுமான். இப்பட இசை குறித்து அவர் கூறியதாவது:


ஸ்லம்டாக் மில்லியனர் பட இசைக்கும் கபுள்ஸ் ரீட்ரீட் இசைக்கும் சம்பந்தமே இருக்காது. ஸ்லம்டாக் மில்லியனர், இந்தியாவில் நடக்கும் கதை. அதனால் இந்த¤ய இசையும் இந்திய படங்களுக்கான சவுண்ட் மிக்ஸிங்கும் அதில் இருந்தது.

அதிலிருந்து வேறுபட்டதாக கபுள்ஸ் ரீட்ரீட் இசை இருக்கும். இதன் சவுண்டும் புதுமையாக இருக்கும். ஒரு பட இசையைப் போல் இன்னொரு பட இசை இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பேன். அதனால் புதுவித ட்யூன்களை புதுமையாக தரமுடியும். கபுள்ஸ் ரீட்ரீட், ரொமான்டிக் காமெடி படம் என்பதால் அதற்கேற்ப எனது இசை இருக்கும்.
இவ்வாறு ரகுமான் கூறினார்.



0 comments:

Post a Comment