feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

அசத்தலான அசல் கதை ஒரு கற்பனை !

Labels:காட்சி 1:
(இடம் : நெதர்லாந்து நாட்டில் உள்ள Amsterdam மாநகராட்சி அலுவலகம்)
Amsterdam கவுன்சிலர் திரு.பீட்டர் வட்ட மேஜையின் நடுவில் உட்கார்ந்து இருக்கிறார்.
அவருக்கு இருபுறமும் மாநகராட்சி ஊழியர்களும் contract எடுப்பவர்களும் உட்கார்ந்து இருக்கின்றனர்.அனைவரது முன்பும் froster mini beer வைக்க பட்டுள்ளது. அந்த contract கூட்டத்தில்
வில்லன் கோஷ்டியின் வலது கையான SRIMAN உட்கார்ந்து இருக்கிறார். வில்லன் கோஷ்டியின் கண்களில் ஒரு வெறி தெரிந்தது, எப்படியும் இந்த தடவை நம்ம BOSSku contract வாங்கிடனும் என்று
கவுன்சிலரை கரெக்ட் செய்து விட்டார்கள்.

காட்சி 2:
சில நாட்களுக்கு முன்பு:
(இடம்: amsterdam பார்க் ஓரம் இருக்கும் பப்ளிக் restroom)
SRIMAN தன் சகாக்களுடன் அந்த RESTROOMil நுழைகிறார்கள். ஸ்டோர் ரூம் சென்று அங்கிருக்கும் PHENOYIL BOTTLEil நம்ம NAPOLEAN சரக்கை கலந்து விடுகிறார்கள். அந்த MIXED PHENOYILai ஊற்றி
அங்குள்ள ஊழியர்கள் கழுவி விடுகிறார்கள். ரெஸ்ட்ரூம் முழுதும் சரக்கு நாத்தம்.அதனால் அந்த பழைய contract CANCEL செய்து அதை வில்லனுக்கு சாதகமாக மாற்றுவதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் கூடியுள்ளனர்.

காட்சி 3:
(இடம் : அதே மாநகராட்சி அலுவலகம் )

கேமரா கட் SHOTil ஒருவர் கோட் சூட் உடன் வாயில் ஒரு சுருட்டு கையில் ஒரு பை அதனுள் சில உயர் ரக PHENOYIL BOTTLEgal.
அப்புறம் X-MEN படத்தல வர HUGH JACKMAN மாதிரி ஒரு கிரிதாவுடன் உள்ளே நுழைகிறார். அவர் தான் நம்ம தல அஜித், அப்படியே அலுவலகம்
உள்ளே முன்னும் பின்னும் நடக்கிறார்...நம்ம பரத்வாஜ் உடனே ஒரு இங்கிலீஷ் பாட்ட BACKGROUNDla போடுறார். ஒரு பத்து தடவ உள்ளே நடக்கிறார் .

கவுன்சிலர் கடுப்பாகி தன் ஊழியர்களிடம்

கவுன்சிலர்: டேய் யாருடா அது இங்கே வந்து FASHION SHOW காட்டறது..போப்பா பக்கத்துக்கு பில்டிங்கலதான் FASHION SHOW நடக்குது...சும்மா இங்க வந்து சீன் போட்டுட்டு இருக்க.

தல: நான் தான் தல.. என் பின்னாடி 6 கோடி பேர் இருக்காங்க.

கவுன்சிலர்: ஓ! முன்னால் CONTRACT காரரா... சரி ஏன் இவளோ BUILDUP ?

தல: எல்லாரும் என்ன TREND SETTERnu சொல்வாங்க. அதான் இப்படி, அதனால உனக்கென்ன?

கவுன்சிலர்:சரி விடுங்க தல..நீங்க பாட்டுக்கு உனக்கென்ன உனக்கென்ன பாட்டு பாடிர போறீங்க. அப்புறம் மீட்டிங் கான்செல் ஆயிடும்.

காட்சி 4:
( சந்தானம் உள்ளே நுழைகிறார்)

சந்தானம்: ஏய் கவுன்சிலர் தல கிட்டயே மோதி பாக்கறியா அவரு யார் தெரியுமா, இந்தியாவுல
நாலு வருஷம் முன்னாடி "SUPERSTAR நாற்காலி எனக்கு வேணும்னு" சொன்னவர்டா.

கவுன்சிலர்: SUPERSTAR நாற்காலி கிடைச்சிதா?

(தல பேச போகுமுன் சந்தானம் குறிக்கிட்டு)

சந்தானம்: ROYAPETTAa மார்கெட்ல ஒரு வராம் தேடி பாத்தாரு ஒரு சந்தன நாற்காலி கூட அவருக்கு கிடைக்கல.

தல கடுப்பாகி: மழை நிக்கறதுக்குள்ள!!!!!! contract எனக்கு திரும்பி குடுக்கணும்.

சந்தானம்: மழை பெய்யல தல

தல: எப்போ மழை பெய்தோ அது நிக்கறதுக்குள்ள. அது!!!!!!!!!!!!!!!.

இப்போ தல கிட்ட AMSTERDAMla நாய் புடிக்குற CONTRACT MATTUM THAAN இருக்கு.
ஒரு நாள் நாய் புடிக்கும் பொது சமீராவோட நாயையும் பிடித்து, அப்புறம் ROMANCE ஆகி
அது ஒரு தனி TRACK.

காட்சி 5:
(இடம்: AMSTERDAM COURT)
தல தனக்கு மீண்டும் ரெஸ்ட்ரூம் CONTRACT வேண்டி COURTil கேஸ் போட்டுள்ளார்.நீதிபதியாக நமது கவுண்டமணி.

கவுண்டமணி. : டேய் டகால்டி உன் பேர் என்ன?

தல: என்னை தெரிஞ்சவங்க தலன்னு சொல்வாங்க, புரிஞ்சவங்க நல்லவன்னு சொல்வாங்க

நீதிபதி கவுண்டமணி. குறிக்கிட்டு: யோவ் அதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது...ஐயோ ராமா ஏன் இந்த களிசடையோட என்ன கூட்டு சேர உடுற.உன் பேர் என்ன அத சொல்லு?

தல: CITIZEN என்று உறுமுகிறார்.

நீதிபதி: அடி கோன்னியன் என்னைய வாட்ச் கம்பெனி பேர்லாம் சொல்லிட்டு இருக்க. சரி அத உடு ஏன்யா கக்கூஸ் கழுவுற PHENYOILla சரக்கை கலந்திங்க?

தல: நோ நான் கலக்கலா MY LORD

கவுண்டமணி: அப்போ வேற யாரு TELL ME TELL ME NOW.

தல: நான் வாங்கறது ஊத்தறது கழுவறது எல்லாமே அசல் PHENOYIL
சார்.

கவுண்டமணி.: இவரு பெரிய G.D.NAIDU, எல்லாம் அசல் PHENOYILam
narayana இந்த கொசு தொல்லை தாங்கலைடா. டேய் ஆப்ப மண்டையா இப்ப என்னதாண்டா சொல்ல வர.....

தல: என் எதிரியின் மாமன், மாமி , அண்ணன் அண்ணி ,சித்தப்பன் சித்தி, பெண் கொடுத்தோர் பெண் எடுத்தோர்

கவுண்டர் குறிக்கிட்டு: இவங்களை எல்லாம் உன் கூட வந்து கக்கூஸ் கழுவ சொல்லனுமா?

தல: கொஞ்சம் மரியாதையா பேசுங்க.நானும் பெரிய தொழிலதிபர்

கவுண்டமணி.: அடடா நாட்ல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா...புண்ணாக்கு விக்கிறவன் கக்கூஸ் கழுவரவன் எல்லாம் தொழில்அதிபராம்.....

தல: சார் எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க நான் ஊத்தறது அசல் PHENOYILnu நீங்க சொல்விங்க.

கடைசியில் வில்லனுடன் மோதி ,தல அவர்கள் தான் உபயோகிப்பது அசல் phenyoil என்று நிருபித்து, தன் contract திரும்ப பெறுகிறார்.AMSTERDAM மக்கள் மூக்கை பிடிக்காமல்
இருப்பதற்கு உதவியாக இருக்கிறார்.

தல விசிறிகள் கோக்சிக்கபடாது, சும்மா உல்லுலாயிக்கு தான்.
0 comments:

Post a Comment