feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count
Sep
25

விஜய், விக்ரம், சூர்யா, விஷால் -ஒண்ணு கூடிட்டாங்களே....

Labels:


விஜய், விக்ரம், சூர்யா, விஷால் நாலு பேரும் ஓரிடத்தில் கூடினால் நவகிரகத்தை பார்த்த ஃபீலிங் இருக்கும். அந்தளவுக்கு உள்ளுக்குள் கர்...புர்... ஆகிற கோஷ்டி இது. ஆனால் இந்த பகையை மறந்து பரவச நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் ஒரு விஷயத்தில்!

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடும் ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி. அதில்தான் இந்த சூப்பர் ஹீரோக்கள் கலந்து கொண்டு பாடி நடிக்கப் போகிறார்களாம். ஆஹா... ஒன்ணு கூடிட்டாங்களே என்று ரசிகர்கள் சந்தோஷப்பட வேண்டாம். இவர்களை அணுகும் போதே “எல்லாரும் ஒரே பிரேமில் வர்றது கஷ்டம்” என்று கூறிவிட்டார்களாம் தெளிவாக.

“அவரு வராத நாளா சொல்லுங்க. நான் வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிடுறேன்” என்று கிளிப்பிள்ளை மாதிரி ஒரே வார்த்தையை ஒப்பித்தார்களாம் நால்வரும். “பிஸியாக இருப்பதால் நாங்கள் சொல்லுகிற தேதியில் படப்பிடிப்பை வைத்தால் சவுரியமாக இருக்கும்” என்று அடிஷனல் வேண்டுகோளும் வைத்தார்களாம்.

எல்லாவற்றும் தலையசைத்து சம்மதித்திருக்கிறது இந்த ஆல்பத்தை எடுக்க முடிவு செய்த டீம்.



0 comments:

Post a Comment