விவேக் அடுத்த ஹீரோ அவதாரம்?
கொண்டித்தோப்பு சுப்பு ங்கற படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஹீரோவாக நடிக்கிறேன். சரவண சக்தி இயக்குறார். காமெடியும் ஆக்ஷன் த்ரில்லரும் கலந்த கதை. செப்டம்பரில் ஷ¨ட்டிங். இதைத் தொடர்ந்து நான்தான் பாலா படத்துல ஹீரோவா நடிக்கிறேன். பிராமண இளைஞன் ஒருவனுக்கும் ரவுடிக்கும் உண்டாகும் நட்பை மையமாக கொண்ட கதை. கண்ணன் இயக்குகிறார்.
பாடல்கள் பாட ஆரம்பிச்சிட்டீங்க?
ஆமா. வித்தியாசமான குரல் வேணும்னு பாட சொல்றாங்க. சொல்லி அடிப்பேன் படத்துல சிக்குனு கீறியே/ எனக்கு பக்குனு கீதுமா/ டக்கரா கீறியே/ எனக்கு டாச்சரா கீதுமாங்கற பாடலை பாடியிருக்கேன். இதை கேட்டுட்டு பிரகாஷ்ராஜ் உட்பட பலர் ட்டாகும்னு சொன்னாங்க. அடுத்து இத்தனை நாள் எங்கிருந்தாய் படத்துல சில வரிகள் மட்டும் பாடி இருக்கேன்
.
பத்மஸ்ரீ விருது...
மெசேஜோட காமெடி செய்துகொண்டிருந்த காலகட்டத்துல, இந்த பாணியை மாற்றணும்னு நினைச்சிருந்தேன். அந்த நேரத்துலதான் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சது. நேர்மையான உழைப்புக்கும் வெற்றி கிடைக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். கமல்சாருக்கு பிறகு 15 வருடம் கழித்து ஒரு நடிகனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிருக்குன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு. நகைச்சுவை நடிகர் ஒருவருக்கு பத்மஸ்ரீ கிடைப்பதும் இதுதான் முதல்முறை.
Post a Comment