த்ரிஷா ஆட்டம்!
Posted by
bayo
Labels:
funny
மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் ஓடி ஓடி உட்கார்ந்து கொள்கிறார் தமன்னா. அசின், த்ரிஷா, நயன்தாரா, நடிக்க வேண்டிய படத்திலெல்லாம் தமன்னாவின் ஆதிக்கம்.இதனால் அரண்டு போயிருக்கிறார்கள் மேற்படி நடிகைகள். அதிலும் இந்திக்கு போவதாக கொஞ்சமே கொஞ்சம் இடத்தை காலி பண்ணிய த்ரிஷா, அந்த வாய்ப்பும் சரவர அமையாமல் திரும்பி வந்தால், இவரது பழைய ஏரியா ஹவுஸ்ஃபுல்! எல்லா வாய்ப்பும் தமன்னாவுக்கே...
பிரியதர்ஷனின் இந்திப்படம் துவங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதால், தோழிகளுடன் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டாராம். எப்பவுமே ஈசிஆர் சாலையில் ஆட்டம் போடும் த்ரிஷ் இந்த முறை, கேரள எல்லைப்புறம் ஒதுங்கியிருக்கிறார். (மேட்டர் சீக்ரெட்டாக இருக்கட்டும் என்றுதான்...) இடையில் ரம்யாகிருஷ்ணனின் பிறந்த நாள் பார்ட்டியையும் கோலகலமாக கொண்டாடினாராம்.
அந்த இடத்தில்தான் அடித்தது யோகம். இத்தனை நாட்களாக மலையாள படங்களில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்த த்ரிஷாவை அந்த பார்ட்டியில் பார்த்து அழைப்பு விடுத்தார்களாம் சில மலையாள ஹீரோக்கள். சம்பள விஷயத்தில் தாராளம் காட்டினால், மலையாளம் என்ன? போஜ்பூரின்னா கூட ரெடி என்றாராம் த்ரிஷ். பேச்சு வார்த்தை பிரைட்டாக முடிய, இன்னும் சில தினங்களில் த்ரிஷாவின் மலையாள பட அறிவிப்பு முறைப்படி வரலாம் என்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment