குழந்தையிடம் பந்தை தந்தால் என்ன செய்யும் ??
இன்று யாஹூ தலைப்பு செய்தியாக பிலிடெல்பியா மாஹானத்தில் நடந்த ஒரு பேஸ்பால் போட்டியின் போது அதில் விளையாடிய பில்லீஸ் என்னும் டீமின் ரசிகர், நம்ம கிரிக்கெட்டில் அவ்வப்போது அடிக்கும் சிக்ஸர் போல அடிக்கப்பட்ட ஒரு பந்தை (பேஸ்பாலில் இப்படி அடித்தால் foul என்று சொல்லுவார்கள்) பிடிக்க நேர்ந்தது. இப்படி பந்து வருவதே அபூர்வம் அதையும் பிடிக்க முடிந்தால் அது அதைவிட ஆபூர்வம் போலிருக்கிறது. பிடித்த உற்சாகத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர்களுடன் `ஹை பைவ்` தட்டிய பின்அந்த பந்தை தன்னுடை மூன்று வயது குழந்தை எமிலியிடம் கொடுக்க அதை அந்த சிறு பெண் தடுப்பு சுவரை தாண்டி மீண்டும் மைதானத்துக்குள்ளேயே விட்டெறிய இதை சற்றும் எதிர்பார்க்காத அப்பா ஒரு புன்முறுவலுடன் தன் பெண்ணை கட்டி அணைத்துக் கொண்டதை நேரடி ஒளிபரப்பில் கண்ட பல லட்சம் அமெரிக்கர்கள் புளங்காகிதமடைந்து விட நேர்ந்து இப்படி தலைப்பு செய்தி ஆகிவிட்டிருக்கிறது.
பில்லீஸ் ரசிகர்கள் காட்டான்கள் இல்லை இப்படி அன்பானவர்கள் என்று வேறு டிவி செய்தியாளர் மேலும் ஒரு விவரம் தருகிறார்.
எனினும் மிகவும் கவித்துவமாக ஒரு குறும் படம் போல இருக்கிறது. இதனை பதிவு செய்த அந்த காமிராமேனை பாராட்ட வேண்டும்.
Thursday, September 17, 2009 | 0 Comments