மண் குதிரை
புத்தகம் எழுதி வெளியிட்டு, பின்பு தனக்கு தெரிந்த வட்டாரத்தில் சொல்லி அந்த புத்தகத்தை பற்றி ஆஹா ஓஹோ என்று கருத்து வெளிடுவதற்கு ஏற்பாடு செய்து ஒரு மாதிரி அதிக விற்பனை ஆகும் பட்டியலில் இடம் பெற வைக்க இரண்டு குறிக்கோள்கள் இருக்கலாம். ஒன்று விற்பனையால் லாபம், இரண்டு புகழ். இந்த இரண்டும் வேண்டாம் என்று யார் சொல்லுவார்கள்?
சரி என்ன மாதிரி புத்தகம்? நாவல், புனைவு, அனுபவம், பயண குறிப்பு, வாழ்க்கை வரலாறு என பல பிரிவுகளில் இதெல்லாம் சகஜம். உண்மையாகவே ஒரு புத்தகம் மிகவும் சிறந்ததாக இருந்தால் இந்த மாதிரி போலி அரியனைகள் தேவையில்லை. தானாகவே அரியனையேறிவிடும்.
ஆனால் சமீபத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து செரில் சைமோனி என்ற அமெரிக்கப் பெண்மணி எழுதி அமெரிக்க பதிப்பகமான Hampton Roads Publishing கம்பெனியால் வெளியிடப்பட்ட Midnight With the Mystics: A Little Guide to Freedom and Bliss: A Little Guide to Blissful Living என்ற இந்த ஆன்மீக புத்தகத்துக்கு கருத்து எழுதுங்க, அப்படி எழுதினா அமெசான்ல இது அதிக விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் இடம்பெற வெக்க முடியும் அவசரம் அப்படின்னு ஒரு மின்னஞ்சல் வந்தது.
----- Forwarded Message ----
Sent: Sunday, July 6, 2008 10:15:39 PM
Subject: !! Urgent Help Needed !!
Hope you are well.
We really need your help.
We are collecting book reviews for Midnights with the Mystic and it is very crucial that we recieve enough number of reviews in order for our book to maintain its best seller status.
Can we count on you to write a review?
Please let us know. We are aiming to collect over 200 reviews and we want to track the number.
(If you are writing a comment, it will be good if it doesn't sound like it is coming from an Isha meditator but rather from someone new that just read the book).
Below are instructions about how to review. Its really simple:
-Just log into Amazon.co.uk and Amazon.com (if you dont have an account, you can easily create one with username and password)
(To make a review you should have been an Amazon customer)
-Search "Midnights with the Mystic"
-Scroll down and you will find many reviews and an option "Create your own review"
-Write and post your comment (as if you are a new reader, not an Isha meditator)
-Email us your review (we are tracking how many we get)
Thanks so much.
Lets make this into a big success
with love
Isha Volunteers
---------------------
இது நிச்சயமாக ஜக்கிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அனேகமாக இது ஒரு சில சீடர்கள் மெய்ஞானத்தின் உச்சியை கண்டுவிட்ட ஏதோ ஒரு அகஸ்மாத்தான தருனத்தில் அளவுகடந்த அன்பினால் புளங்காகிதமடைந்து இப்படி ஒரு வேலையை செய்ய தோண்றியிருக்க வேண்டும்.
இந்த மின்னஞ்சல் வந்த மறுநாள் மெய்பொருள் காண உண்மையாக பயிலும் மேலும் சில ஈஷா பக்தர்களுக்கு இது சரியல்ல என்று தோண்றியிருக்க வேண்டும். எப்படியோ, படுத்து, உட்கார்ந்து, நடந்து, யோசித்து மறுபடி ஒரு மின்னஞ்சல் வந்தது:
அப்படியெல்லாம் புத்தகத்த பத்தி அள்ளி விட வேண்டாம் படிச்சுட்டு உள்ளது உள்ளபடி எழுதினா போதும்னு.
----- Forwarded Message ----
Sent: Monday, July 7, 2008 9:57:30 AM
Subject: !! Urgent Help Needed !!
Dear All
This is a follow up regarding the previous message for Midnights with the Mystic book review.Here is some clarification regarding the last message because it seemed unclear to a few people.
After reading the book, please write the review as objectively as possible with an unbiased fresh perspective regardless of whether you have taken an Isha program or not.This is just because we want as truthful of an opinion as possible.
with loveIsha Volunteers
இதன் பின்னனி என்னவாக இருக்க முடியும்? எனக்கு தோன்றுவது, ஒரு கூட்டம் தாங்கள் செல்லும் பாதையே சிறந்தது என மறைமுகமாக நிலைநிறுத்தும் ஆசை. இதுதான் மனிதனின் மூலப் பிரச்சனையே. அதை என்ன ஆன்மீக பயிற்சி செய்தாலும் மாற்ற முடியவில்லை.
உலகில் பலவும் மிகப் போலியாகிவிட்டது. இந்த மாதிரி ஆன்மீக/மெய்ஞானத்திலும் (இதுலதான் ஜாஸ்தின்னு ஆன்மீக ஆந்தை சவுண்ட் விடுவது கேட்கிறது). இந்த மாதிரி நடப்பதை தவிர்க்க ஆன்மீகத்தை முன்னெடுத்து செல்லும் கலியுக குருக்கள் கவனமாக இருந்தால் ஆன்மீகம் நலமாக இருக்கும்.
Tuesday, July 08, 2008 | 0 Comments