விஜய் நடித்திருக்க வேண்டிய முதல்வன்- ஷங்கர்.
அண்மையில் தான் இளைய தளபதியின் வேட்டைக்காரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. பாடல்களும் பட்டையை கிளப்ப ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் அந்த விழாவிற்கு வந்திருந்த பல பிரபலங்களும் விஜயையும் வேட்டைக்காரனையும் வாழ்த்திப் பேசியதுடன் சில பழைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அழைக்கப்படிருந்த சிபிராஜ் சன் பிக்சர்சும் விஜயும்
கைகோர்த்திருக்கின்றார்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என வாழ்த்தினார்.
அடுத்து கருணாசும் மேடையில் அழைக்கப்பட்டு பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து வேட்டைக்காரி வந்தார் வந்தவர் கொஞ்சும் தமிழில் பேசியது
பாராட்டுக்குரியது. பல தமிழ் நடிகைகளே தமிழில் பேச தள்ளாடும் நேரம் இந்த
யோகா டீச்சர் தமிழில் பேசியது பாராட்டுக்குரியது.(விடுங்கப்பா நாலு
வார்த்தை தமிழில் பேசினாங்க அதை தான் சொன்னேன்.) அதற்காகவே அவரின் தாராள
மனதை சொல்லும் படம். இங்கே.
எந்திரன் படத்தை பற்றியும் பேசினார். அதை தொடர்ந்து நீண்டநாட்களாக இருந்து
வந்த சந்தேகம் ஒன்றையும் போட்டு உடைத்தார். ஏற்கனவே தெரியும் முதல்வன்
திரைப்படம் ரஜினிக்காக எழுதப்பட்ட கதை அந்த நேர அரசியல் சூழ்நிலை காரணமாக
ரஜினி நடிக்காமல் போக அர்ஜூன் நடித்து படம் பெற்ற வெற்றி. ஆனால் ரஜினிக்கு
அடுத்து தன்னுடைய தெரிவு விஜய் தான் என இதுவரை மெளனம் காத்து வந்த ஷங்கர்
வெளிப்படையாக சொல்லிவிட்டார். முன்பொருமுறை இதை விஜய் சொல்லி எள்ளி
நகையாடிய அத்தனைபேரின் மூஞ்சியிலும் கரி பூசப்பட்டு விட்டது. தொடர்ந்து
பேசிய ஷங்கர் தானும் விஜயும் ஒரே பள்ளியில் இருந்து அதாவது எஸ்.ஏ.சியின்
பள்ளியில் இருந்து வந்தவர்கள் ஏழு வருடம் அவரிடம் உதவி இயக்குனராய்
இருந்து இருக்கின்றேன். விரைவில் விஜயை வைத்து படம் செய்யும் திட்டம்
உண்டு என் குருநாதர் மகன் என்பது மட்டுமல்ல அவர் ஒரு திறமையான நடிகர் அவர்
ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது என சொல்ல அரங்கமே அதிர்ந்தது.
தொடர்ந்து விஜயும் பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பேசினார்.
Labels: ஏ.வி.எம்., விஜய் ஷங்கர், வேட்டைக்காரன்
Saturday, September 26, 2009 | 0 Comments
வில்லனாக மாட்டேன் - ஜீவன்
மீண்டும் 5 ஹீரோயின்களோடு நடிச்சிருக்கீங்க?
ஏற்கெனவே ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான படம்தான் நான் அவன் இல்லை. அதில் 5 ஹீரோயின்கள் நடிச்சிருந்தாங்க. அதை ரீமேக் செய்யும்போது அதேபோல 5 பேரை நடிக்க வைச்சோம். கிளாமருக்காக நாங்க 5 கேரக்டர்களை திணிக்கலை. அந்தப் படம் சூப்பர் ட்டாச்சு. அதனால அதோட 2-வது பாகத்தை எடுத்திருக்கிறோம். முதல் பாகம் முடிஞ்ச இடத்துலயிருந்து ரெண்டாவது பாகம் தொடங்குது. இந்த முறை வெளிநாடுகளுக்கு போயிட்டு ஹீரோயின்களை ஏமாத்துற கேரக்டர். அதுக்கு 5 ஹீரோயின்கள் தேவைப்பட்டாங்க.
5 பேரில் உங்களுக்கு பிடிச்ச நடிகை?
வம்புல மாட்டிவிடப் பாக்குறீங்க. எனக்கு 5 பேருமே பிடிக்கும். காரணம், அவங்க வந்தோம், போனோம்னு இதுல நடிக்கலை. டான்ஸ்ல காட்டுற ஆர்வத்தை விட நடிப்புல காட்டியிருக்காங்க. 5 பேரும் சின்சியரா உழைச்சிருக்காங்க. ஒவ்வொரு கேரக்டரா மாறி, அவங்களை ஏமாத்துறேன். அதனால என¢னோட நடிப்புத் திறமையை காட்டவும் படம் உதவியிருக்கு.
கிருஷ¢ணலீலை?
இந்த தலைப்பை பார்த்ததும் காதல் படம¢னு நினைக்கிறாங்க. அதுக்கு எதிர்மாறா இருக்கும். எப்போ எல்லாம் அதர்மம் தலைதூக்குதோ அப்போலாம¢ கிருஷ்ணனோட லீலை ஆரம்பமாகும்னு கீதையில வருது. இந்த படக்கதையும் அதுதான். லீலைங்கிறது இந்த பட ஹீரோவை பொருத்தவரை யுத்தம்னு அர்த்தம். ஸெல்வன் இயக்கியிருக்கிறார். பெங்களூரைச் சேர்ந்த மேக¢னா, ஹீரோயின்.
நீங்க நெகட்டிவ் ஹீரோவா நடிக்கிற படங்கள்தான் ஓடுதுங்கறாங்களே?
அப்படி கிடையாது. திருட்டுப் பயலே படத்துல எல்லோருமே தப்பு பண்றாங்க என்பதுதான் கதையே. அதுல தப்பு பண்றவன் கடைசியில என்ன ஆகுறான் என்பதுதான் முக்கியம். Ôநான் அவன் இல்லைÕ படத்துல நான் வில்லன் கிடையாது. தங்களோட பேராசைகள் காரணமா, 5 பெண்களும் ஏமாறிப்போறாங்க. அவ்வளவுதான். நெகட்டிவ்னா கொடுமைக்காரனா நடிக்கணும். நான் அப்படி நடிக்கலை. நான் நல்லவனா நடிச்ச தோட்டா ட்டாச்சே.
சரவெடி என்னாச்சு?
ஜான் மகேந்திரன் இயக்க இருந்தார். நல்ல கதை. அமர்க்களமா ஆரம்பிச்சோம். பிறகு என்ன பிரச்னைங்கிறதே எனக்கும் ஜானுக்கும் தெரியாது. தயாரிப்பாளரைத்தான் கேட்கணும்.
திரும்ப வில்லன்?
இப்போதைக்கு அந்த எண்ணம் கிடையாது. ஹீரோவாகவே நடிப்பேன்.
Saturday, September 26, 2009 | 0 Comments
விஜய் உச்சத்துக்கு வரமுடியும்!
ரஜினியின் வழியைப் பயன்படுத்திக் கொண்டால் விஜய் உச்சத்துக்கு வரமுடியும் என்றார் சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் நிர்வாகியும், எந்திரன் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளருமான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா.
ரஜினிதான் என் தலைவர், நான் என்றும் அவரது ரசிகன் என்று கூறிவந்தவர் விஜய். அதுமட்டுமல்ல… ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பல அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை ஆரம்ப காலம்தொட்டே ரஜினியிடம் பெற்றுவந்தவர் விஜய். குருவி படத்தில் ஒரு பாடலில் என் வாத்தியார் சூப்பர் ஸ்டார் என்று பாடுவார். கில்லி வெற்றி விழாவில் விஜய்யை தன் ரசிகன் என்று சொல்லி ரஜினி ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு சாப்ட் கார்னரை ஏற்படுத்தித் தந்தவர் ரஜினி.
ஆனால் ஏசி சண்முகம் கொடுத்த ஒரு டாக்டர் பட்டமும், அதைத் தொடர்ந்து லயோலா கல்லூரி நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் ஏதோ முக்காலே மூணு சதவிகிதம் செல்வாக்கு உயர்ந்திருப்பதாகக் கூறப்பட்டதும் அவரது மனநிலையை தலைகீழாக மாற்றிவிட்டது போலும்… விளம்பரம், போஸ்டர்கள், பேனர்கள் என சுய விளம்பரத்தில் இறங்கியவர், ரஜினி ரசிகர்களைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில் சில வார்த்தைகளை அவற்றில் இடம்பெறச் செய்ய, தானாகவே ஒரு கேலிப் பொருளாக மாறிவிட்டார்.
அவர் மதிப்பை யாரும் தாழ்த்தவில்லை.. தானாகவே தாழ்த்திக் கொண்டார். வர வேண்டிய இடத்திலிருந்து வந்தால்தான் அது மரியாதை. செட்டப் செய்வதால் அவமானம்தான் மிஞ்சும்.
இதையெல்லாம் உணர்ந்துதானோ என்னமோ, வேட்டைக்காரன் பட பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்யைப் பார்த்து இப்படிச் சொன்னார் ரஜினியின் தீவிர ரசிகர்களுள் ஒருவரான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா…
“சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு முதல் எங்கள் அணுகுமுறை, படங்களைத் தேர்வு செய்யும் விதம் என எல்லாமே மாறப்போகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ படம்தான் சன் பிக்சர்ஸின் நேரடி முதல் தயாரிப்பு. எந்திரன் படத்தை கலாநிதி மாறன் மிகுந்த நம்பிக்கையுடன் தயாரிக்கிறார். அதற்கு ஏற்ப ஷங்கரும் அவரது குழுவினரும் தங்கள் படம் போல் உழைக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளிவரும்.
இந்தப் படத்துக்கு இயக்குனர் ஷங்கர் கடினமாக உழைத்து வருகிறார். அதை பார்க்கும்போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது.
ரஜினியின் உழைப்பு ஒரு பிரமிப்பு. இன்னும் பல காலத்துக்கு அதைப் பற்றி இந்த திரையுலகம் பிரமிப்புடன் சொல்லிக் கொண்டுதான் இருக்கும். ரஜினி சாரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய நடிகர்கள், இளைஞர்களை அனைவருமே அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.
ரஜினியின் வழியை விஜய் பயன்படுத்திக்கொண்டால் உச்சத்துக்கு வர முடியும்…,” என்றார் சக்ஸேனா.
இந்த மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர், எந்திரன் படம் 85 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்துவிட்டதாகவும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், “எப்போது விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறீர்கள் என்று வெளியூர் சென்றாலும் ரசிகர்கள் கேட்கிறார்கள். ‘முதல்வன்’ படத்தில் முதலில் நடிக்க வைக்க எண்ணியது ரஜினியை. அவர் கிடைக்காவிட்டால் விஜய்யை வைத்து இயக்க நினைத்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.
விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கிறது. நான் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 7 வருடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். விரைவில் விஜய்யை வைத்து படம் செய்யும் திட்டம் உள்ளது. என் குருநாதர் மகன் அவர் என்பதால் மட்டுமல்ல… அவர் திறமையான நடிகர்… அவர் ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது…,” என்றார்.
பின்னர் பேசிய விஜய், வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் சிலவற்றைப் பாடிக் காட்டினார்.
“நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் தூங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே…”
-இப்படிப் போகின்றன அந்தப் பாடல் வரிகள்…!!
இந்தப் பாடலைக் கேட்டுவிட்டதால்தான் சக்ஸேனா அப்படிப் பேசினாரோ!!
Saturday, September 26, 2009 | 0 Comments
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை.
ஐரோப்பிய வரலாற்றில் என்றும் நடைபெறாத வகையில் சுமார் நூறு கோடி சுவீடிஸ் குறோணர்களை பணவைப்பு களஞ்சியத்தில் இருந்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். திருடப்பட்ட பணத்தொகை பெரிய விடயமல்ல திருடப்பட்ட முறையே உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
இன்று புதன் அதிகாலை உலங்குவானூர்தி ஒன்றைக் கடத்திவந்த கொள்ளையர்கள் உலங்குவானூர்தியில் இருந்து கயிற்றில் வழியாக இறங்கி களஞ்சியத்தின் முகட்டை உடைத்து ஜி.45 என்ற டிப்போட் பகுதியில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் கொண்டுவந்த உலங்கு வானூர்தியை ஓட்டிய விமானி சாதாரணமான ஒருவரல்ல என்று கூறப்படுகிறது. இராணுவத்தில் பயிற்சி யெடுத்த ஒருவராகவே இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர், அனைவருமே மிகவும் பயிற்றப்பட்ட நபர்களாக உள்ளார்கள். சாதாரண திருடர்களால் செய்ய முடியாத அபார சாதனை இதுவாகும். பயங்கரமான ஆயுதங்களை பாவித்து இதைச் செய்துள்ளார்கள். இதற்காக விசேட முகமூடிகளையும் அணிந்துள்ளார்கள்.
இந்தச் சம்பவம் சுமார் 22 நிமிட நேரத்திற்குள் நடந்து முடிந்துள்ளது. உலங்குவானூர்தி சுவீடிஸ் தலைநகர் ஸ்ரொக்கோமில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பணத்தையும் திருடியவர்களையும் கண்டறிய முடியவில்லை. இதன் பின்னர் போலீசார் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர், ஆனால் இவர்களா சந்தேக நபர்கள் என்பதை போலீஸ் ஊர்ஜிதம் செய்யவில்லை.
இந்தக் கொள்ளையைக் கண்டு பிடிப்பதற்காக பெருந்தொகையான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சகல ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 100 சந்தேக நபர்களின் பெயர் அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைவரையும் தேடி வலை விரித்துள்ளனர் போலீசார். உலங்குவானூர்தியை செலுத்தியவர் கட்டிடத்திற்கு மிகவும் அருகருகாக அதை அந்தரத்தில் நிறுத்தியுள்ளார். ஒரு சில மீட்டர் இடைவெளியில் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. ஓர் ஆக்சன் திரைப்படத்தில் வருவதுபோல காரியம் நடந்தேறியுள்ளது.
Saturday, September 26, 2009 | 1 Comments
திரு.. திரு.. துறு.. துறு- திரை விமர்சனம்
ரொம்ப நாளாச்சு இவ்வளவு லைட்டான திரைகதையில், பரபரவென, ஸ்லாப்ஸ்டிக்கும், ஒன்லைனரும், கலந்து அடிக்கும் ஒரு லவ்லி கூத்தை..
ஒரு பர்பெக்ட் பெண் ரூபா மஞ்சரிக்கும், அன் பெர்பெக்ட் அஜ்மலுக்கும் இடையே நடக்கும் ரசிக்கும் படியான கதை.அஜ்மல் ஒரு விளம்பர கம்பெனியின் ஆர்ட் டைரக்டர், விஷுவலைசர், ரூபா அவனுடன் வேலை பார்க்கும் பெண், மெளலிக்கு பிள்ளைகள் இல்லாததால் செல்லப் பிள்ளையாய் அஜ்மல் இருக்க, அவனின் பொறுப்பற்ற தன்மையால் ஒரு மிக பெரிய கார்பரேட் கம்பெனியின் ஆர்டர் கைநழுவி போக இருக்க, அதை இழுத்த் பிடித்து ரூபாவும், அஜ்மலும் பிடித்து வேலையை ஆரம்பிக்க, அது ஒரு குழந்தைகளுக்கான ப்ராடக்ட், அதற்கான குழந்தை கிடைக்காமல் போக, ஒரு குழந்தையை அஜ்மல் கண்டுபிடிக்க, அந்த குழந்தையின் தாயிடம் அனுமதி வாங்க துரத்த, அவள் ஒரு ஆட்டோவில் அடிபட்டு மயக்கமாக, குழந்தை அஜ்மலிடம் இருக்க, திரும்ப போகும் போது குழந்தையின் அம்மா காணாமல் போயிருக்க, ப்ளாட் இறுகுகிறது.
அதன் பிறகு நடக்கும் கூத்துக்கள், மிக இயல்பான ஸ்லாப்ஸ்டிக் காமெடி.. குழந்தையின் தாய் தகப்பனை தேடி பிடிகக் அலைய, காணாமல் போனவள் ஒரு டுபாக்கூராய் இருக்க, அவள் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருக்க, ஒரு பக்கம் ஒரிஜினல் அப்பா அம்மா அலைய, அக்ரிமெண்ட் கிடைககாமல் மெளலி டென்ஷனாகி இருக்க, அவரிடம் உண்மையை சொல்லாமல் காரிய முடிக்க முயலும் ரூபா, அஜ்மல் ஜோடி, இதற்குள் அவர்களுக்குள் உண்டாகும் காதல். என்று ஒரே ஜாலிதான்.
அஜ்மலுக்கு மிக இயல்பாய் காமெடி வருகிறது.. பொறுப்பில்லாத ஒரு கேர்ஃபிரி இளைஞனை கண் முன்னே நிறுத்துகிறார். அதே போல் ரூபா மஞ்சரி. முதல் காட்சிகளில் பார்க்கும் போது சுமாராய் இருப்பவர், படம் முடியும் போது அவரை பிடிக்க ஆரம்பித்துவிட்டது.. அவ்வளவு இயல்பான கேர்ள் நெக்ஸ்ட் டோர் இம்பாக்ட்.. இவருக்கும் ரியாக்ஷன்கள் இயல்பாய் வந்து உட்காருகிறது.
மெளலி தான் ஒரு எக்ஸ்பீரியன்ஸ்டு ஆர்டிஸ்ட் என்பதை வரும் காட்சிகளில் எல்லாம் நிருபித்து காட்டுகிறார். டென்ஷனான நேரட்த்திலும் ஜோக்கடித்து கொண்டே, முகத்தில் மட்டும் டென்ஷனை காட்டும் காட்சிகள், ஆளை தவிர பேரை எப்போதுமே மாற்றி, மாற்றி சொல்லும் அவரின் கேரக்டர் அருமை.
தமிழில் வந்திருக்கும் மூன்றாவது ரெட் ஒன் டிஜிட்டல் படம். அவ்வளவு துல்லியம்.. ஒளிப்பதிவாளர் சுதிர் பாராட்ட பட வேண்டியவர்.. அருமையான பேக்ரவுண்ட் கலர்ஸ், துல்லியமான ஒளிப்பதிவு என்று கலக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் மணிசர்மாவின் பாடல்கள் ஓகே. ஜில்லுனு வீசும் பூங்காற்று பாடல் மட்டும் நல்ல மெலடி.
கதை, திரைகதை,வசனம், எழுதி இயக்கி இருக்கும். ஜே.எஸ்.நந்தினிக்கு முதல் படம்.. பார்த்தால் தெரியவில்லை. மிக இயல்பான டயலாக்குகள், ஒன்லைனர்கள், ஆர்டிஸ்டுகளிடம் வேலை வாங்கியிருக்கும் பாங்கை பார்த்தால் நிச்சயம் தெரியவில்லை.. ஆரம்பித்த முதல் பத்து நிமிஷத்துக்கு வழக்கம் போல இரண்டு பேருக்கான ஈகோ க்ளாஷ் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, குழந்தையை கொண்டு வந்து திருப்பத்தை ஏற்படுத்தி, அதற்கப்புறம் ஸ்பீடுதான்.
ஆங்காங்கே பல இடங்களில் திரைக்கதை தொங்கினாலும் பின்னால் வரும் சில காட்சிகள் அதை ஈடு கொடுத்து சரி செய்து விடுகிறார். குழந்தை திருடி நர்ஸை தர்ட் டிகிரி மெத்தடில் விசாரிக்கும் காட்சி செம ரகளை.. க்ளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல காமெடி கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பை மிஸ் செய்து விட்டார்.
Saturday, September 26, 2009 | 2 Comments
ACTRESS PRIYANKA CHOPRA HOT SEXY SIZZLING PHOTO GALLERY
Saturday, September 26, 2009 | 0 Comments
ஸ்ரீதேவி புதிய கலர்புள் கவர்ச்சி
Saturday, September 26, 2009 | 0 Comments