feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

நடந்தவை நடப்பவை-8

Labels:

நம்ம ஊர்ல குழந்தைகள் திருமணம் (child marriage) மிக சகஜம் (இப்போது மிகக்குறைவு) ஆனாலும் அவர்கள் 13 வயதில் பிள்ள பெற்றுக்கொண்டதில்லை. ஆனால் யூக்கேயில் இந்த வாரம் மிகுந்த சர்ச்சையை கிளப்பிய விஷயம் 13 வயதில் Alfie Patten அப்பாவனது. சரி, இவனது குழந்தைக்கு தாய் யாரென்று பார்த்தால் Chantelle Steadman வயது 15!!. ஊடகங்களுக்கு கொண்டாட்டம், , புகைப்படம் , மற்றும்:

அப்பாவனது பற்றி எப்படி உணர்கிறாய்?
எப்படி வளர்க்கப்போகிறாய்?
செலவுக்கு என்ன பண்ணுவாய்? என்கிர ரீதியில் பேட்டி.

இப்போது யார் குழந்தைக்கு தந்தை என்பதில் போட்டி வந்து விட்டது. இது ஏன் என்றால் Chantelle மேலும் இரண்டு பேரோடு உறவு வைத்திருந்ததாக சொல்லுகிறார்கள். அரசியல்வாதிகள் வழக்கம் போல் சமூகம் மிகவும் கெட்டுப்போய்விட்டது இதற்கு காரணம் எதிர்கட்சியின் சில கொள்கைகளே என்கிற ரீதியில் சவுண்டு விட்டாலும், இவர்களுக்கு ஆதரவாக கத்தோலிக்க பாதிரியார் சீமஸ் ஹெஸ்டர் குரல் கொடுத்திருக்கிறார், இவர்களுக்கு வயது என்னவாக வேண்டுமானாலும்(!!) இருந்துவிட்டு போகட்டும், இந்த குழந்தையை கருச்சிதைவு செய்யாமல், மனித உயிரின் பேரில் இவர்கள் கொண்டுள்ள மரியாதை போற்றத்தக்கது, என்று.

ஆஹா வாழ்க மனித நேயம்!!நடந்தவை நடப்பவை-7

Labels: ,

சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் மூலம் இந்தியாவில் மனித உரிமை அல்லது தனி மனித சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை மிக சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

ஒன்று மங்களூர் pubபில் (தமிழ்ல்??) பெண்களை அடித்து ஒட ஒட துரத்தியது. பார் என்பது ஆண்களுக்கு மட்டும் தானா என்ற கேள்வி மேலோட்டமாக இருந்தாலும் அதன் பின் உள்ள ஆணாதிக்க சமூக நிலைபாடு எல்லோருக்கும் (பெண்களுக்கும் கூட) பொதுவாகவே உள்ளது. pubபுக்கு போகும் பெண்ணை தவறான கண்ணோட்டத்துடனே பார்க்கும் மனோபாவம் மிக இயல்பான ஒன்று. கலாசாரம் மாறுவதை யாரால தடுக்க இயலும்? காலம் மாறினால் கலாச்சாரமும் மாறும். சட்டங்களும், நம்பிக்கைகளுமே கூட மாறித்தான் போகும். ஆனாலும் ராம சேனைகள் மாறுதலை தாங்க முடியாது சிறு குழந்தைகள் போல செய்யும் அடாவடிகள் (tantrums) இவர்களும் (மன) வளர்ச்சியுற்று தவிர்க்கவே முடியாத மாறுதலுக்கு உட்பட்டாலே ஒழிய இந்த மாதிரி கிளர்ச்சிகள் நடந்துகொண்டுதானிருக்கும் போலிருக்கிறது.

இப்போது வர இருக்கும் வெலண்டைன்ஸ் தினத்தையும் எதிர்த்து இந்த ராம சேனா கிளர்ச்சி செய்ய இருப்பதால் இவர்களை எதிர்த்து வலையில், facebookல் ஒரு 5000 உறுப்பினர்கள் (ஆண்கள் உட்பட) தங்களது கண்டனத்தை, இந்த ராம சேனைக்கு இளஞ்சிவப்பு உள்ளாடை அனுப்புவதன் மூலம் தெரியபடுத்தி இருக்கிறார்கள்.
இனி மற்றொன்று மும்பையில் நடந்த தீவிர வாத தாக்குதலின் போது NDTV இதனை ஒளிபரப்பிய விதத்தை விமர்சித்து தனது வலைத்தளத்தில் எழுதியதை கண்டித்து அந்த வலைப்பதிவாளருக்கு அவர் எழுதியதை நீக்குவதல்லாமல் மன்னிப்பும் கோர வேண்டும் என்றுநீதிமன்ற எச்சரிக்கை அனுப்பியது. அதன் பின் வேறு வழியின்றி அவர் அதை நீக்கி தன் வலைத்தளத்தில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

ஆக உங்களுக்கு பேச்சுரிமை மீது நம்பிக்கையிருந்தால் NDTVயின் நடவடிக்கையை எதிர்த்து உங்கள் வலையில் ஒரு சிறு எதிர்ப்பை தெரிவிக்கவும்.

Shame on NDTV, Ms Burkha Dutt, and Mr. Prannoy Roy


பிகு:
NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in Spain Supports Communism. Recently it has developed a soft corner towards Pakistan because Pakistan President has allowed only this channel to be aired in Pakistan . Indian CEO Prannoy Roy is co-brother of Prakash Karat, General Secretary of the Communist party of India . His wife and Brinda Karat are sisters.
எங்கெங்கு காணினும் பனி

கிழக்கில் ரஷ்யாவிலிருந்து வரும் மிகக் குளிர்ந்த காற்று பனியை கொண்டுவரும் என்று bbcயில் ஆரூடம் சொன்னார்கள். சென்ற வாரமும் இந்த வாரமும் பனியோ பனிதான். இந்த மாதிரி பனி எடின்பரோவில் 1996/97 வருடத்திற்கு பின் இந்த வருடம்தான் இப்படியாம்.

கலையில் எழுந்து ஜன்னலை திறந்து பார்த்தால்..வீட்டைவிடு வெளியே வந்தால்..நடந்து பஸ் நிறுத்தத்தில் வந்து..பஸ்ஸில் செல்லும் போது...


பல்கலைகழகம் ஸ்டாப்பில் இறங்கி...என்னுடைய department நோக்கி நடக்கும் வழியில்...குளிருக்கு இதமாக சூடாக டீ குடிக்கலாம் என்று சமையல் அறையில் டீ போடும் போது ஜன்னல் வழியே பார்த்தால் ..மீண்டும் பனி விழ தொடங்கியதுவெளியே என்னவோ இப்படி இருக்க என் மேசையில் இருக்கும் இந்த பெயர் தெரியா செடி மிக அழகாக பூத்திருந்ததுஇதுதானோ பனி விழும் மலர் வனம்...

படங்கள் உபயம்:samsung Tocco கைத்தொலைபேசி