எங்கெங்கு காணினும் பனி
கிழக்கில் ரஷ்யாவிலிருந்து வரும் மிகக் குளிர்ந்த காற்று பனியை கொண்டுவரும் என்று bbcயில் ஆரூடம் சொன்னார்கள். சென்ற வாரமும் இந்த வாரமும் பனியோ பனிதான். இந்த மாதிரி பனி எடின்பரோவில் 1996/97 வருடத்திற்கு பின் இந்த வருடம்தான் இப்படியாம்.
கலையில் எழுந்து ஜன்னலை திறந்து பார்த்தால்..
வீட்டைவிடு வெளியே வந்தால்..
நடந்து பஸ் நிறுத்தத்தில் வந்து..
பஸ்ஸில் செல்லும் போது...
பல்கலைகழகம் ஸ்டாப்பில் இறங்கி...
என்னுடைய department நோக்கி நடக்கும் வழியில்...
குளிருக்கு இதமாக சூடாக டீ குடிக்கலாம் என்று சமையல் அறையில் டீ போடும் போது ஜன்னல் வழியே பார்த்தால் ..மீண்டும் பனி விழ தொடங்கியது
வெளியே என்னவோ இப்படி இருக்க என் மேசையில் இருக்கும் இந்த பெயர் தெரியா செடி மிக அழகாக பூத்திருந்தது
இதுதானோ பனி விழும் மலர் வனம்...
படங்கள் உபயம்:samsung Tocco கைத்தொலைபேசி
Monday, February 09, 2009 | 0 Comments