| | நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு தமிழக அரசின் திரைப்பட விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த 2007ம் ஆண்டு நடந்த தமிழக அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் சந்திரமுகிக்காக ரஜினிக்கும், வேட்டையாடு விளையாடு படத்துக்காக கமலுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டும் ரஜினி மற்றும் கமலுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன சிவாஜி படத்துக்கு நிச்சயம் விருது வழங்கப்படும் என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தசாவதாரத்தில் வித்தியாசமான 10 கெட்-அப்களில் வந்து கலக்கிய கமல்ஹாசனுக்கு விருது கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருவருமே கடந்த 2 ஆண்டில் ஹிட் படங்களை கொடுத்திருப்பதால் ரஜினி மற்றும் கமலுக்கு இந்த ஆண்டின் தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கப்படலாம் என தெரிகிறது. இது தவிர ரஜினியின் கவுரவ நடிப்பில் நட்பை பறைசாற்றி வெளியான குசேலன் படமும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. | | |
Post a Comment