பரி.. பாரீஸ்
ஒரு வார காலம் பாரீஸில் போதாதுதான் இருந்தாலும் முடிந்தவரை அந்த வசீகர நகரை (மீண்டும்)சென்ற வாரம் சுறறி வந்தேன். கிட்டத்தட்ட டிசம்பர் மாத சென்னை போல 27-30 C வெய்யில் எடின்பரோவின் குளிருக்கு நல்ல மாறுதலாக இருந்தது.
14 மெட்ரோக்கள் முயல் வலை போல தரைக்கு அடியில், 5 தொலைதூர ரெர்(Rer) எனப்படும் ரயில்கள், இவை செல்லாத இடத்தை அடைய 59 பேருந்து தடங்களும் மேலும் நான்கு ட்ராம்களும் உள்ளது. ஆனால் பாரீஸ் என்னவோ நடந்தே (நடக்க முடிந்தவர்களுக்கு) பார்க்க வேண்டிய நகரம். கால் வலித்தால் மேலே சொன்ன ஏதாவது ஒரு பிரயாண வசதியை பிடித்து செல்லலாம்.
பாதாள மெட்ரோவில் சற்று கூட்டமும் வெப்பமும் அதிகமாக இருக்கும். நான் கவனித்தது இந்த் பாதாள ரயில் செல்லும் வழி எங்கும் க்ரஃபிடி எனப்படும் சுவர் கிறுக்கல்கள். வேலை மெனக்கெட்டு நள்லிரவில் இந்த ரயில்கள் ஓடாதபோது வந்து கிறுக்குவார்கள் போலிருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது பிரென்ச்சுக்கான ஒரு கலை நயம் இருக்கத்தான் செய்கிறது.
(பாரீசின் புகழ் பெற்ற Galaries Laffeyetன் விளம்பரம் நகரமெங்கும்)
ரெஸ்டாரண்டில் சாப்பிடும் போது பக்கத்து டேபிளில் இரண்டு பிரென்சு பெண்கள் வாய் ஓயாது பேசிக்கொண்டிருந்தனர். ஒரு ஆங்கில வார்த்தை கூட கலக்காமல் பிரென்சு மொழியிலேயே பேசியதை கவனித்தபோதுதான் இவர்கள் எந்த அளவுக்கு தங்கள் மொழியை பாதுகாக்கிறார்கள் என்று புரிந்தது. நம்ம தமிழிலோ, சுஜாதா சொன்ன மாதிரி, ஆயிரம் வார்த்தைகளில் தமிழ் அடங்கிவிடும் போலிருக்கிறது.
உதாரணத்துக்கு, `பில்` வந்தவுடன் `பர்ஸை` எடுத்து பணத்தை `பே` பண்ணி, வெளியே வந்து `ரோட்டை` க்ராஸ்` பண்ணி `பஸ் ஸ்டாப்புக்கு` வந்து `பஸ்` பிடித்து `டிக்கெட்` வாங்கி `சீட்`டில் அமர்ந்து யோசித்த போது சே எந்த அளவுக்கு ஆங்கிலத்தை ஊடுறுவ விட்டு அழகிய தமிழை பண்ணித்தமிழாக ஆக்கிவிட்டிருக்கிறோம்??
Post a Comment