feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

Murugan Suprabhatham

Murugan Suprabhatham



விஜய்யின் பேவரிட் ஹீரோயின் அடம்.


‘காவலன் படத்தின் மிச்சப் பகுதியை கேரளாவிலே வச்சிக்கலாம். பாலக்காட்டுக்குப் போயிடலாம் அதான் சேஃப் சேட்டா!’

-மேட்டுப் பாளையத்தில் பெரியார் திகவினர் மேற்கொண்ட கறுப்புக் கொடி போராட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன அசின் சொன்னது இது.

ஹீரோயினாச்சே… அதிலும் விஜய்யின் பேவரிட் ஹீரோயின் சொன்ன பிறகு அப்பீலேது?

அடுத்த நாளே பாலக்காடு பறந்தது காவலன் படக்குழு, ஹீரோ விஜய்யுடன்.

மேட்டுப் பாளையத்தில் எடுக்க வேண்டிய பல காட்சிகளை ஒத்தப்பாலம் மற்றும் பாலக்காடு பகுதியிலேயே வைத்து எடுத்துக் கொண்டார்களாம். மூன்று தினங்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பில் வடிவேலுவும் பங்கேற்றார். “இப்போதான் எனிக்கு ரிலீஃப்” என்று அசின் கூற, “அதெப்படி… ரிலீசாகணுமில்ல. அதையும் பாலக்காட்டிலேயே வச்சிக்கிற முடியுமா… போத்தா!” என்று நக்கலடித்தாராம் வடிவேலு.






சிம்புவுடன் நான்.


வானம் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பதற்கு அர்த்தம், என் மார்க்கெட் சரிந்து விட்டது என்பதல்ல… இந்தி மாதிரி தமிழிலும் பல ஹீரோக்கள் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் லட்சியமும், தயாரிப்பாளர்களுக்கு லாபமும் ஆகும்.

இதை நான் ஆரம்பம் தொட்டே உணர்ந்திருப்பதால்தான் பாய்ஸ், 4 ஸ்டூடண்ட்ஸ், பட்டியல், வெயில் எனு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும், கதைகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன்.

சமீபமாக வித்தியாசமான கதை அம்சங்கள் கொண்ட படங்கள் வெளிவருகின்றன. பெரிய நடிகர்கள், அறிமுக நாயகர்கள் யார் நடித்தாலும் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்கள் ஜெயித்து வருகின்றன. அதன் அடிப்படையிலேயே சற்று இடைவெளிக்குப் பின் மீண்டும் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்‌டில் நடிக்க துணிந்துள்ளேன்…!

- சிம்பு படத்தில் 2வது ஹீரோவாக நடிப்பதற்கு விளக்கவுரை, பொழிப்புரை எல்லாம் கொடுத்திருப்பவர் வேறு யாருமல்ல… சாட்சாத் காதல் நாயகர் பரத்தான்!

மார்க்கெட் டல் ஆனால் எல்லோரும் சொல்லும் சொல்தான்! வரேவா!!





நயனிடமிருந்து விலகிச் செல்லப் போகிறாராம் அஜீத்.

Labels: ,


நயனிடமிருந்து விலகிச் செல்லப் போகிறாராம் அஜீத். இது என்ன புதுக்கதை என்கிறீர்களா, நிஜந்தான். ஆனால் இந்த அஜீத் வேற சார்.

ஐயா படத்திலிருந்து நயனின் கால்ஷ‌ீட் மேனேஜராக இருந்தவர் இந்த அஜீத். நயன் பிரபுதேவா திருமண அறிவிப்பால் அப்செட் ஆகியிருந்த இவர் இப்போது தீர்மானமாக ஒரு முடிவெடுத்துவிட்டார்.

ஆகவே அஜீத்தை வைத்துக்கொள்ள (கா‌ல்ஷ‌ீ‌ட் மேனேஜராக மட்டும்), ஆசைப்படும் நடிகைகள் முயற்சித்துப் பார்க்கலாம்.





எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்

Labels:


சினிமா நகைச்சுவை நடிகரும், அதிமுகவில்கொள்கை பரப்பு செயலாளருமான எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் காலமானார். திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மன்னார்குடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார்.

அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

69 வயதாகும் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் 1986ம் ஆண்டு பாலைவன ரோஜாக்கள் படத்தில் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.

இவர் பாட்டி சொல்லைத் தட்டாதே, மாப்பிள்ளை, உழைப்பாளி, ஆத்தா உன் கோவிலிலே, சின்னப்பதாஸ், காக்கை சிறகினிலே, கதாநாயகன், நாடோடி பாட்டுக்காரன், தங்கைக்கோர் கீதம், வண்டிச்சோலை சின்னராசு, தங்கமான புருஷன், உனக்காக எல்லாம் உனக்காக, உயிருள்ளவரை உஷா, காதல் ரோஜாவே, ஒன்ஸ்மோர், புதிய மன்னர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.





நடிக்க நயனுக்கு பிரபுதேவா தடை!

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், தற்போதைய சூப்பர் ஸ்டாருமான சிவராஜ்குமாருடன் இணைந்து நடிக்க வேண்டாம் என பிரபுதேவா அறிவுறுத்தியதால் அந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் நயனதாரா.

பிரபுதேவா, நயனதாரா நட்பு குறித்து விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. அனைவரும் அறிந்ததே. தற்போது பிரபுதேவாவின் அட்வைஸ்படிதான் சினிமா தொடர்பான முடிவுகளை எடுக்கிறாராம் நயனதாரா.

ஆனாலும் அவரைத் தேடி பெரிய அளவில் வாய்ப்புகளும் குவிந்து விடவில்லை. தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மட்டுமே நடத்தி வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கி்போதுதான் அவருக்கு திடீரென மயக்கம் வந்து விழுந்து விட்டார். நன்கு ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் கூறியதன் பேரி்ல தற்போது ஓய்வில் இருப்பதாக தெரிகிறது.

வேறு படம் எதுவும் அவர் வசம் இல்லை. இந்த நிலையில் கன்னடத்திலிருந்து அவரைத் தேடி மெகா வாய்ப்பு வந்தது. படத்தின் நாயகன் சிவராஜ்குமார். படத்தின் பெயர் ஜோகய்யா. இது சிவராஜ்குமாரின் 100வது படம். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 1 கோடி வரை நயனதாராவிடம் சம்பளம் பேசினர்.

தனது அட்வைஸரிடம் இதுகுறித்து கேட்டாராம் நயனதாரா. ஆனால் இப்படம் வேண்டாம் என பிரபுதேவா கூறி விட்டாராம். இதையடுத்து சிவராஜ்குமார் படத்தில் நடிக்க நயனதாராவும் மறுத்து விட்டாராம்.

நடிக்க தயாராக இருந்தவரை இப்படி கெடுத்து விட்டாரே என்று சிவராஜ்குமார் தரப்பு பிரபுதேவா மீது சற்று கோபமாக உள்ளதாம்.



முத்தமிட ஆர்வத்தை தூண்டும் நடிகைகள்!



வித்தியாசமான சர்வேக்களை நடத்திவரும் இதழ் ஒன்று புதுமையான சர்வேயை நடத்தி பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது. பான்டசி என்ற ஆண்களுக்கான அந்த இதழ் சமீபத்தில் நடத்தியிருக்கும் கருத்துக்கணிப்பில் இடம்பெற்ற கேள்வி ரொம்பவே வித்தியாசமானது. இந்திய நடிகைகளில் முத்தமிடுவதற்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் கவர்ந்திழுக்கும் தோற்றம் கொண்டவர் யார்? என்பதே அந்த கேள்வி.


இந்த சர்வேயில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார். அவருடைய உதடுகள் கொள்ளை அழகாக உள்ளன, அவற்றை பார்த்த உடனேயே முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுகிறது என்று பெரும்பாலான நபர்கள் கருத்து கூறி உள்ளனர். ஐஸ்வர்யா ராய் 2வது இடத்தையும், கரீனா கபூர் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். பாலிவுட்டின் வங்காள அழகி பிபாஷா பாசு 4வது இடத்திலும், கத்ரினா கைப் 5வது இடத்திலும், சோனம் கபூர் 6வது இடத்திலும், மல்லிகா ஷெராவத் 7வது இடத்திலும் வந்துள்ளனர். தீபிகா படுகோனுக்கு 8வது இடமும், ஜெனிலியாவுக்கு 9வது இடமும் கிடைத்துள்ளது. நடிகை அசின் 10வது இடத்தை பிடித்திருக்கிறார்.




சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்

Labels:

கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்..






கௌதம் மேனன், சமீராவுடன் இணையும் அஜித்?



அல்ட்டிமேட் ஸ்ட்டார் அஜித் குமாரின் 49 வது திரைப்படம் தான் 'அசல்'. ஒரு வருடத்திற்கு மேல் நடைபெற்ற படப்பிடிப்பு ஒரு வழியாக பூர்த்தியாக 2010 தொடக்கத்தில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் அஜித்தின் 50 வது திரைப்படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்பதில் தான், ஒரே குழப்பம்!
மீண்டும் பில்லா கூட்டணி ஒன்று சேர வாய்பிருப்பதாக ஒரு தரப்பு தெரிவிகிறது. ஆனால் விஷ்ணு வர்தனுக்கு பதிலாக, வெங்கட் பிரபு இயக்கப்போவதகவும் சன் பிக்ஸர்ஸ் இந்தப்படத்தை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், துரைதயாநிதியின் Cloud 9 பிக்ஸர்ஸ் சார்பில் அஜித்தின் ஐம்பதாவது படம் உருவாகப்போவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. இதை கௌதம் மேனன் இயக்குவதாகவும், ஏற்கனவே கௌதம் மேனனின் வாரணம் ஆயிரம் திரைப்படத்திலும், அஜித்தின் 'அசல்' படத்திலும் கதாநாயகியாக நடித்த ஷமீரா ரெட்டிதான் இந்தப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கப்போவதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் அஜித் தரப்பில் இருந்து அடுத்த படத்தை பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் பெற முடியவில்லை.




காலடேனியன் காட்டின் கோலங்கள்

Labels: , , ,

இங்க பக்கத்துல போட்டிருக்கிற கோலத்த பாருங்க..
அட கோலம் என்றால் தமிழ்ல இன்னொரு அர்த்தம் பன்றிங்கோ.


உதாரணத்துக்கு இந்த புராண பாடல்களில் பார்க்கலாம்.




ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவர்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை. (--- நளவெண்பா)

கோலமெனு மோருருவு கொண்டுபில மேகி
ஞாலமெவ ணுற்றதென நாடியது தன்னை
வாலிய வெயிற்றினிடை வல்லைகொடு மீண்டு
மூலமென வேநிறுவி மொய்ம்பினொடு போனான் (-19--கந்தபுராணம்)
பன்றிக் காய்ச்சலால் உலகமே அரண்டு போய் பன்றியை கண்டாலே தெறிச்சு ஒடும் அளவுக்கு இந்த (அப்)பிராணி மேல பழி வந்து விட்டது. விமான நிலையத்துல முழு-உடல் வெப்பமாணிகளை வைத்து பிராயனிகளை சோதனை செய்யும் அளவுக்கு பீதி பரவியது. இந்த வெப்பமாணிகளை கடந்து போகும் பிரயாணிகளின் உடல் வெப்பத்தை திரையில் பார்த்தபின் அவர்களை அனுமதிக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் சென்னை சென்று வந்த நண்பர் சொன்னது என்ன வென்றால், சில அதிகாரிகள் மானிடரை சிறிதுகூட பார்க்காமலேயே பிரயாணிகளை கடந்து செல்ல அனுமதித்து இருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் எந்த அளவுக்கும் சலித்து/நொந்து போயிருக்க வேண்டும்?

ஆனால் இந்த அப்பிராணியின் மூதாதயைரான காட்டு பன்றி (wild boar) இருக்க வேண்டிய இடமான காட்டில் இல்லாமல் போனதால காடே காணாமல் போய் விடக்கூடும் அபாயம் இருப்பதாக Trees for life அறக்கட்டளை மக்கள் அபிப்ராயப்படுகிறார்கள். இதற்காக இந்த வாரம் பல காட்டு பன்றிகளை சுதந்திரமாக இந்த காலடேனியக் காட்டில் விட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 13ம் நூற்றாண்டு வாக்கில் இந்த பக்கத்து, ஆங்கிலோ-சாக்ஸன், வைக்கிங் மற்றும் இன்ன பிர குறு, மற்றும் மாமன்னர்களும், ராசாக்களும் பொழுது போகாமல் வேட்டையாடி கிட்டத்தட்ட இந்த வகை பன்றிளை அழித்தே விட்டார்கள்.

இந்த வகை பன்றிகள் மூக்கால் நிலைத்தை கிளறி அதனடியிலிருக்கும் ஒருவகை Rizhomeகிழங்குளை (??) உண்ணும். இந்த வகை செடிகள் fern என்னும் மரங்களை வளரவிடாமல் செய்யும். இந்த பன்றிகள் இதை உண்பதால் இந்த வகை செடிகள் மிகவும் கட்டுப்படுத்தப் பட்டு fern மரங்களும் அதயொட்டிய மற்ற வகை தாவரங்களும் இயற்கையில் எப்படி வளருமோ அவ்வாறே வளர்வதை பரிசோதித்து நிரூபித்திருக்கிறார்கள். ஆக எல்லா ஜீவ ராசிகளுக்கும் பங்கு இருப்பதை மீண்டும் இந்த பன்றியின் முலம் இயற்கை எடுத்து சொல்லியிருக்கிறது. வீரப்பன் போன்று காட்டில் விடப்பட்ட இந்த பன்றிகளை யாராவது வேடையாடி ஏப்பம விட்டுவிடாமல் இருக்க இந்த பன்றிகளின் மீது ட்ரான்ஸ்மீட்டர் பொருத்தியிருக்கிறார்கள்.

ஆக திருமால் வராகமாக தோண்டியெடுத்து பூமிய காப்பாத்துனாருன்னு சொன்னது இதத்தானோ?? பெரியாரிஸ்டுகளால் ஒத்துக்கொள்ள முடியாது.



நடந்தவை நடப்பவை-12

Labels:

மீண்டும் ஒரு பனிக்கால துவக்கம். சென்ற பனிக்காலத்தை விட இந்த வருடம் மழை கம்மி என மதிய உணவு, இல்லை டீ குடிக்கும் இடைவேளையில் ஒரு பேச்சு துவக்கியாக பருவகாலத்தை பற்றி அங்கலாய்க்கிறார்கள்.

`அப்பா எங்களுக்கே எப்படா வெய்யில் அடிக்கும்னு ஆகிப்போச்சு`

நேற்றிலிருந்த் பரபரப்பாக பேசப்படும் இன்னொரு விஷயம் தியரி ஹென்றியின் கையால் போடப்பட்ட கோல். மரடோனாவுக்கு பின் மறுபடியும் நிகழ்வதால் இதை Hand of God part 2 என்கிறார்கள். இதனால் அயர்லாந்தை தோற்கடித்து ப்ரான்ஸ் 2010 உலக கோப்பை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது. அயர்லாந்து FIFAவிடம் மறுபடி விளையாட வைத்த கோரிக்கையை, நடுவரின் முடிவு இறுதியானது என நிராகரித்து விட்டது.

இதனால் கிரிக்கெட் டென்னிஸ் போல கால்பந்தாட்டத்திலும் மூன்றாம் விடியோ நடுவர் கொண்டுவரலாமா கூடாதா என விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் விளையாட்டை நிறுத்தி, நிதானமாக பெரிய திரையை பார்த்துகொண்டு கோலா இல்லியா, கையால போட்டானா என்றா பார்த்துகொண்டிருக்க முடியும் என என்று இங்கிருக்கும் பரம கால்பந்தாட்ட ரசிகர்கள் அபிப்ராய படுகிறார்கள். கிரிக்கெட் மாதிரி விளையாட்டுக்கு வேண்டுமானால் அது சரிப்பட்டு வரும். அவுட்டா இல்லியா என்று முடிவு தெரிவதற்கு முன், ட்ரின்க்ஸ் குடித்து, நகர்ந்துபோய் தொந்திரவு மண்ணும் கவட்டைகார்டை சரி செய்து கொண்டு, அவிழ்ந்த் போன ஷூ லேசை கட்டிக்கொண்டு என சாகவாசமாக விளையாட்டை தொடர முடியும்.

மனித திறனின் வரையரைக்கு உட்ட பட்டே இந்த மாதிரி விளையாட்டுக்கள் இருக்க வேண்டும். என்னதான் தொழில்நுட்பங்கள் வந்தாலும், இப்ப இந்த ஹென்றி மாதிரி கையால கோல் போடுற மாதிரி நிலை வரும் போது, அந்த தனி நபரின் நேர்மை இனி சந்தேகிக்கப்படும்.

1956-வரை ஓடிக்கொண்டிருந்த ட்ராம்களை அப்போது வந்த டீசல் பேருந்து கவர்ச்சியாக இருந்ததால் பிடிங்கி வைத்துவிட்டார்கள். இப்போது மறுபடி சின்னக்குழந்தை மாதிரி அடம் பிடித்து மற்ற ஐரோப்பிய நகரங்களில் இருப்பது போல் எனக்கும் ட்ராம் வேணும் என எடின்பரோவின் ராசகுமார தெருவை ட்ராம் வண்டிக்காக தோண்டி, இப்படி இருந்ததை


இப்படி ஆக்கிவிட்டார்கள்.


வாரா வாரம் இந்த ராசகுமார வீதிக்கு போகும் சாலைகளில் போக்குவரத்தை வெவ்வேறு திக்கில் திருப்பி விட்டுவிடுவார்கள். கிட்டதட்ட வானிலை அறிக்கை மாதிரி எப்படி திருப்பி விடுவார்களோ என்ற குழப்ப நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் பாடு பரவாயில்லை சுற்றுலா வரும் மக்கள் நிலைதான் பரிதாபம். GPS, மற்றும் வரைபடத்தை வைத்துக்கொண்டு ஆங்காங்கே முழித்துக்கொண்டு நிற்கும் பல பிரயாணிகள் இப்போது சகஜம். இதனால் இந்த தெருவிலிருக்கும் அநேக கடைகளில் வியாபாரம் மந்தமாகிவிட்டது என பெருமூச்சு விடுகிறார்கள்.

2011 முடித்து விடுவோம்னு சொல்லி இப்ப இந்த ட்ராமுக்கான் இருப்பு பாதையை அமைக்கும் நிறுவனம் செலவு அதிகரிக்க கூடும் அப்படீன்னு இதுக்காக எடின்பரோ நகர மன்றத்திடம் மேலும் நிதி கேட்க, அதை மன்றம் ஏற்க மறுத்து இழுபறி நிலையாகி இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என உணர்ந்து எப்படியோ சமரசம் செய்து 2012ல் முடிச்சுடுவோம்னு சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பதிவை முடிப்பதற்கு முன் சமீபத்தில் நான் பார்த்த ஸ்காட்லாந் பற்றிய விடியோ, பேக்பைப்பர் இசையுடன் மிக அறுமையாக பதிவு செய்ய பட்டுள்ளது.





சைக்கிளில் என்ன செய்யலாம்?

Labels:

வெறும் காலிலேயே செய்ய முடியாததை சைக்கிளில் செய்ய முடியுமா?

இந்த வீடியோவை பார்த்தால் இப்படியெல்லாம் சாத்தியமா என ஆச்சர்யமாக உள்ளது.



எடின்பரோவை சேர்ந்த டான்னி மெக்காஸ்கில் -க்கு (Danny MacAskill) வெறும் காலில் நடப்பது கஷ்டம் என தோண்றுகிறது. இந்த வீடியோ மிக அற்புதமாக எடின்பரோ நகரில் உள்ள பல பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது.



ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் ஏ.ஆர்.ரஹ்மான்

Labels:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களைத் தேர்வு செய்யும் கெüரவம் மிக்க நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
திரைப்படத்துறையில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆஸ்கர். 1929-ம் ஆண்டிலிருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள சிறந்த திரைக்கலைஞர்கள் ஆஸ்கர் விருது பெறுவதையே தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.
இத்தகைய மதிப்பு வாய்ந்த ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் 2009-ம் ஆண்டுக்கான நடுவர் குழுவில் பொறுப்பேற்க ஆஸ்கர் விருது கமிட்டியிடமிருந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 82-ம் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் பொறுப்பேற்க ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 139 பேருக்கு இந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களோடு சேர்ந்து, உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 6,000 திரைத்துறை சாதனையாளர்கள் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கத் தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள். அவர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இயக்குநர் மீரா நாயர், ஹாலிவுட் பிரபலங்கள் வில் ஸ்மித், க்வென்டின் டரான்டினோ, ஜேக் நிக்கல்ஸன், ஹக் ஜேக்ஸன், பீட்டர் கேப்ரியல் ஆகியோரும் அடங்குவர்.
ஆஸ்கர் விருதுக்கு ஒரு முறையாவது பரிந்துரை செய்யப்பட்டவர்களே இந்தத் தேர்வுக்குழுவில் இடம்பெற மூடியும். இசைத்துறையில் தன்னுடைய பங்களிப்பால் சிறந்த சாதனை படைத்ததற்காகவும் 2008-ம் ஆண்டு "ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்காக சிறந்த பாடல் இசையமைப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் என இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதாலும் ஏ.ஆர்.ரஹ்மான், இருவேறு கருத்துக்கு இடமில்லாமல் இந்த நடுவர் குழுவில் பொறுப்பேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய இசையமைப்பாளர் ஒருவர் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. 43 வயதாகும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது "கப்ஃபுள்ஸ் ரெட்ரீட்', "எ நைட் ஆஃப் பேúஸஜ்' போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றி வருகிறார். ஆஸ்கர் விருதுகளை வென்ற பிறகு ஏராளமான ஹாலிவுட் படங்களில் பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழில் மணிரத்னத்தின் "ராவணா', ரஜினியின் "எந்திரன்', கெüதம் மேனனின் "விண்ணைத்தாண்டி வருவாயா' உள்பட 7 திரைப்படங்களுக்கு இப்போது இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.




உன்னைப் போல் ஒருவன் - 'ஆனந்தவிகடன்' விமர்சனம்

Labels:

நகரின் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு அவற்றை வெடிக்கச் செய்யாமல் இருக்க, போலீஸ் கமிஷனர் மோகன்லாலிடம் பேரம் பேசுகிறார் கமல். இந்தியாவின் முக்கியமான குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது பேரம்.

காவல்துறை தனது முழு பலத்தைப் பிரயோகித்தும் கமலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. டெக்னிக்கலாக அப்படியொரு தண்ணி காட்டுகிறார். வேறு வழியில்லாமல் நான்கு தீவிரவாதிகளையும் கமல் சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அடுத்த இருபது நிமிடங்களுக்கு பளீர், சுளீர் திருப்பங்கள். ஹிந்தியில் வெளியான எ வெட்னெஸ் டே படத்தின் தமிழாக்கம்.

காலையில் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறிகள் வாடி வதங்குவதற்குள், மாநகரத்தைத் துளிக்கூட சலனப்படுத்தாமல் போலீஸுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாடம் எடுக்கிற ஜெட் வேகத் திரைக்கதைதான் படத்தின் ரியல் ஹீரோ.

பிரேமுக்கு பிரேம் தானே ஆக்கிரமிக்க நினைக்கிற ஹீரோக்களுக்கு மத்தியில் பிற நடிகர்களுக்குச் சமமான ஸ்கோப், சொல்லப் போனால் தன்னைவிடக் கூடுதலாக வாய்ப்பு கொடுத்த கமலுக்கு அன்பான கைகுலுக்கல்கள்.

போலீஸ் கமிஷனராக மோகன்லால், ஒரு பெர்ஃபெக்ட் ஃபிட், அசாத்தியமான சூழலில் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கண் முன் நிறுத்துகிறார்.

தலைமைச் செயலாளருடன் உரசிக் கொள்ளும்போதும், தனது ஜூனியர் அதிகாரிகளிடம் கனிவும், கண்டிப்புமாக வேலை வாங்கும்போதும் வெல்டன் லால்.(த.செ.வாக வரும் லட்சுமியின் க்ளோஸ் அப்புகளைத் தவிர்த்திருக்கலாம்)

படம் முழுக்க ஒரே இடத்தில் இருந்தபடி ஹெட்போன் மைக்கில் பேசிக் கொள்வதுதான் கமல் வேலை. ஆனால், அதிலும் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்களைக் காட்டி மறுபடி நிரூபித்திருக்கிறார். சின்சியருக்கு சின்சியர்.

ஜூனியர்களாக வரும் பரத்ரெட்டி, கணேஷ் வெங்கட்ராம் எல்லாமே கேரக்டருக்கு ஏற்ற மிடுக்கு. நியூஸ் ரிப்போர்ட்டராக வரும் அனுஜா ஐயர், ணோகன்லாலிடம் "கேன் ஐ ஸ்மோக் ஹியர்..?" எனும் இடத்தில் அட போட வைக்கிறார்.

ஒரு காமன்மேன் இத்தனை அசகாயக் காரியங்கள் மூலம் அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுகிறதுதான். ஆனால் அதற்கான டெக்னிக்கல் சங்கதிகளைக் காட்டி நியாயப்படுத்தி விடுகிறார்கள். தேவை தில்லும், துணிச்சலும்தான்.

ஆனால் படமே கொஞ்சம் டெக்னிக்கல் அறிவைத் தாண்டி நிற்கும்போது, காட்சிக்குக் காட்சி இங்கிலீஷில் இப்படி சொடுக்கியிருக்க வேண்டுமா? "ரீமேக் படத்தை இன்னொரு வாட்டி தமிழ்ல டப்பிங் பண்ணுங்கப்பா" என்கிற கமெண்ட்டுகள் காதில் விழுகின்றன.

கேமராமேன் மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு கிரிஸ்டல் கிளியர். அறிமுகம் என்பதாலேயே மனம் போன போக்கில் வாத்தியங்களை இசைக்கவிடாமல் கச்சிதமாக பின்னணி இசையை ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

ஹிந்தி ஒரிஜினலில் அந்தக் கதாநாயகனின் கோபத்துக்குக் காரணமான ரயில் குண்டு வெடிப்புகள், படத்தின் கிளைமாக்ஸில் அவன் வார்த்தைகளில் வெடிப்பதற்கு வலுவான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இங்கே கமலின் கோபத்திற்குச் சொல்லப்படுவதோ இங்குள்ள வெகுஜனத்தின் உணர்வுகளைத் தூண்டாத சமாச்சாரங்கள் பல(பெஸ்ட் பேக்கரிகூட..!) எந்த மதத்திலிருந்து வந்தாலும் தீவிரவாதத்தைத் தண்டிப்பதில் தாமதம்கூடாது என்ற நியாயமான உண்மையை பளிச்சென்று கன்னத்தில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கலாம்.

அதையே, கன்னத்தில் தடவிச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்(நாலில் மூவர் முஸ்லீம், ஒருவர் ஹிந்து) திரைக்கதை, வசனகர்த்தாவுக்கு இங்கே இருப்பது புரிகிறது. ஆனால், கிளைமாக்ஸ் வேகத்தை அதுவும் சேர்த்தல்லவா நீர்க்கச் செய்கிறது?

இருந்தாலும், 'இவனைப் போல் நம்மில் எத்தனை பேர்' என்ற ஏக்கம் எழவே செய்கிறது.

மதிப்பெண் : 42 / 100





பின்வாங்கிய நயன்தாரா!

Labels:



ிடீரென்று பின் வாங்கிவிட்டார் நயன்தாரா. முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த

பேட்டியில் ஒரு முக்கியமான விஷயத்தை மறுத்திருக்கிறார். என்னைக் கண்டிக்க ரமலத்துக்கு அருகதை கிடையாது என்று தான் பேட்டியளிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.


ஏன் இந்தப் பின்வாங்கல்? வேறொன்றுமில்லை. ரமலத் வீட்டுக்கு நாலைந்து பெண்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் போயிருப்பதாகத் தகவல் வந்ததாம் அவருக்கு. ரமலத்துக்கு ஆறுதல் கூறிய அந்தப் பெண்கள் அமைப்பினர், நயன்தாரா எங்கு போனாலும் அவரைச் சூழ்ந்துகொண்டு கேரோ செய்யப் போவதாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும் ஆவேசமாகக் கூற, இந்த விஷயமும் அப்படியே நயன்தாரா காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான் இனி இதுபற்றிப் பேசவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.


இது சம்பந்தமாகக் கேள்வி கேட்க விரும்புகிற பத்திரிகையாளர்கள் பிரபுதேவாவைக் கேட்கட்டும். என்னிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டாராம் தெளிவாக.





சினேகா மீது மான நஷ்ட வழக்கு?

Labels:

எல்லாருக்குமே சிநேகாவை பிடிப்பது போல சர்ச்சைகளுக்கும் சிநேகாவை பிடிக்கும் போல...! சினிமாவில் சிநேகா அறிமுகமான புதிதில் டைரக்டர் சுசி.கணேசனுடன் மோதல்! அதன் பின் ஸ்ரீகாந்த்துடன் காதல், கலா மாஸ்டருடன் ஃபைட்டோ ஃபைட், நாக் ரவியுடன் எங்கேஜ்மென்ட், பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிபர் ராகவேந்திராவின் செக்ஸ் டார்ச்சர், என பலப்பல பரபரப்புகளை கடந்து இப்போது தன்னிடம் சில்மிஷம் செய்ததாக ஒரு அப்பாவியை தர்ம அடி வாங்க வைத்துள்ளார்.

திருச்சியில் உள்ள ஒரு நகைகடையில் (செப்.24) நடந்த விழாவில் சினேகா கலந்து கொண்டார். சினேகா நகைக்கடைக்கு வந்தபோது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக முன்னோக்கி சென்றனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது நெரிசலில் அங்கிருந்த ஒரு வாலிபர் சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா இதுபற்றி அங்கிருந்த காவலாளிகளிடம் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை நீலநிற சட்டை போட்டவர் என்று அடையாளம் காட்டினார்.

இதைத்தொடர்ந்து நீலநிற சட்டை அணிந்திருந்த ஒரு வாலிபரை கண்டுபிடித்த காவலாளிகள் அவரை இழுத்து சென்று அடித்து உதைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபர் தாக்கப்படுவதை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கடை காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்பு தாக்கப்பட்ட வாலிபரையும், கடை காவலாளிகள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி காவேரி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) என்றும், அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.

இந்நிலையில் சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், நான் எனது கணவரும் 24.09.2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை தாக்கியதாக நகைக்கடை காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா,

நானும் எனது கணவரும் மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றோம். அப்போது ஒரு கடை முன்பு கூட்டமாக இருந்தது.

இதுபற்றி கேட்டபோது நடிகை சினேகா வந்திருப்பதாக கூறினார்கள். உடனே நான், சினேகாவை பார்க்க வேண்டும் என்று கூறினேன். உடனே எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு நின்றார். அப்போது கடையில் இருந்து வந்த 3 பேர்கள் அந்த புளு கலர் சட்டை போட்டவனை புடிங்கடா என கூறிக்கொண்டு ஓடிவந்தனர்.

எனது கணவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். நான் அழுதேன். எதற்காக எனது கணவரை அடிக்கிறார்கள் என்று கேட்ட போது சினேகா புளு கலர் சட்டைகாரணை புடிங்க என்று கூறியதால் பிடித்து அடித்ததாக கூறினார்கள்.

நாங்கள் நின்ற இடத்திற்கும் கடைக்கும் 200 மீட்டர் தூரம் இருக்கும் எனது கணவர் அப்படிப்பட்டவர் இல்லை. அநியாயமாக அவரை சினேகா அசிங்கப்படுத்தி விட்டார்.

சினேகா எங்கே சென்றாலும் இந்த பிரச்சினைதான். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்து உள்ளேன்.

இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு என்று சர்மிளா கண்ணீருடன் கூறினார்.





நடந்தவை நடப்பவை-11

Labels:

இந்த மாத துவக்கத்தில் சத்தம் போடாம ஸ்காட்லாண்டின் மேற்கு பக்கம் ஃபிர்த் ஆஃப் க்லைட்-ல் லிட்டில் கம்ப்ரே (Little Cumbrae) என்கிற தீவ சுமார் இருபது லட்சம் பவுண்டுகளுக்கு (£2m), பதஞ்சலி யோக பீடம் என்னும் அறக்கட்டளை நடத்தும் சாம் போத்தார்-சுனிதா போத்தார் தம்பதியினர் வாங்கியுள்ளனர். இந்த தீவை அமைதி (இல்லை சமாதான??) தீவு (Peace Island) என நாமகரணம் செய்து இங்கு யோக குரு ராம் தேவ் அவர்களின் யோகா மையம் செயல் படும் என அறிவித்திருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளில் பலவாரான செய்திகள் இதை பற்றி. யோகி ராம் தேவ் புற்று நோய் மற்றும் எய்ட்ஸ்க்கான மருந்து விற்பது ஒத்துக்கொள்ள முடியாது, இது ஏமாற்று வேலை என்றெல்லாம் சின்னதாக சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கை செய்திக்கான பின்னூட்டத்தில் ஒரு மண்ணின் மைந்தர் ரொம்ப ஃபீலிங் ஆகி

"I once contemplated buying a small property in India - I was told that as a foreigner I couldn't own anywhere in India. It is sure a sorry day for Bonnie Scotland when one of its islands is allowed to become a spiritual curry restaurant. It would be interesting to see what would happen if the Scottish proposed building anything similar in Rishikesh."

அண்ணா, நீங்க நேரடியா வாங்க முடியாட்டியும் பினாமி பேர்ல வாங்கி உங்க இஷ்டம் போல செய்யலாண்ணா. அது கூட வேண்டாம், நாங்களே ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு இந்தியால இன்னும் மிச்சமிருக்கும் வனப்பிரதேசங்களையும் எதாவது ஒரு யோகா இல்லை ஆன்மீக மையத்துக்காக ஒரு வழி பண்ணீட்டுதான் இருக்கோம்.


வாழ்நாள் சாதனை பட்டம் வாங்க போனவர சோதனையா கைது பண்ணினா எப்படி இருக்கும்??

தெய்வம் நின்று கொல்லும் என்பது போல 31 வருஷம் முன்னாடி 13 வயது சிறுமியுடன் உறவு வெச்சுகிட்ட தப்புக்காக அமெரிக்க போலீஸ் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனரான ரோமன் போலன்ஸ்கியை ஸ்விஸ்ல் வைத்து கைது செய்ததுள்ளது. போலன்ஸ்கியின் சைனா டவுன் படத்தின் இறுதியில் ஒரு புகழ் பெற்ற வசனம் வரும் " Forget it, Jake, Its Chinatown" என்று, இப்படி அமெரிக்க போலிசும், "Foget it, Polanski, it is Swiss" போனா போகுதுன்னு விட்டுருவாங்கன்னு நினச்சுட்டாரு போலருக்கு.



(கள்ள)காதல் கொடுத்த பரிசு!

Labels:

விதி வழியோட போனாலும் வில்லங்கம் விருந்து வச்சு அழைக்குமாம். அப்படி ஆகியிருக்கு நயன்தாரா நிலைமை. பிரபுதேவாவுடனான கள்ள காதலை முறித்துக் கொண்டு அவரிடமிருந்து விலகிக் கொண்டதாக அறிவிக்கணும். அப்படி இல்லேன்னா நயன்தாரா படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் பண்ணுவோம் என்று அறிவித்திருக்கிறது மாதர் சங்கங்கள்.

ஏதோ நாலு பேரு ஒண்ணா சேர்ந்து கத்துறாங்க. நம்மை என்ன செய்ய முடியும்? என்று அலட்சியமாக போய்விட முடியாது நயன்தாரா. ஏனென்றால் மாதர் சங்கங்களின் மகிமை என்ன என்பதை கடந்த காலங்களில் உணர்த்தியிருக்கிறார்கள் பல விஷயங்களில். எனவே நயன்தாரா பிரபுதேவா விவகாரத்தில் அது சீரியஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வது இரு தரப்புக்குமே நல்லது.

இதற்கிடையில் பெங்களூர் மற்றும், மும்பையிலேயே தங்கியிருக்கும் பிரபுதேவா, சென்னைக்கு வருவதையே தவிர்த்து வருகிறாராம். வந்தால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சம்தான் காரணம். ஆனால் போனிலேயே தனது அதிருப்தியை வெளியிட்டதோடு இப்படி மீடியாவிடம் பேசி மானத்தை வாங்குறியே என்றும் கடிந்து கொண்டாராம்.

தலைக்கு மேலே போய்விட்டது. இனிமேலும் அமைதியாக இருந்தால் குல்லாதான் மிஞ்சும். எனவே போராட்டத்தை வலுவாக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ரமலத். இதற்கிடையில் சென்னையில் 28 ந் தேதி நடைபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்திருந்த கள்ளக்காதல் தம்பதி அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டார்களாம்.

கமல்ஹாசனுக்கு எடுக்கப்படும் இந்த விழாவில் இந்த தம்பதிகள் கலந்து கொண்டால் நிகழ்ச்சியின் நோக்கம் திசை மாறக் கூடும். அது கமலுக்கு பெருமை சேர்ப்பதாக அமையாது என்பது தொலைக்காட்சி நிர்வாகத்தின் கணிப்பு. எனவே அவர்கள் தரப்பிலிருந்தே இந்த கள்ளக்காதல் தம்பதிகளுக்கு "வராதீர்கள்" என்று செய்தி போயிருக்கிறதாம்.

(கள்ள)காதல் கொடுத்த பரிசை பார்த்தீங்களா?




நம்பர் 1 தமிழ் சினிமா !

Labels:

1920-ல் துவங்கி காந்தி சுடப்பட்ட தினத்தோடு முடியும் "காஞ்சிவரம்' சினிமா, என் ஒன்பது வருஷ கனவு. பங்கெடுத்த அத்தனை பட விழாக்களிலும் காஞ்சிவரத்துக்கு கிடைத்த வரவேற்பு, கௌரவம் இதுவரை நான் செய்த படங்களுக்குக் கிடைக்கவில்லை.


இப்போது அதற்கு மணி மகுடமாக தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. கண்ணீர் துளிர்த்து நின்ற தருணங்களை மறக்க முடியாது என தேசிய விருது தந்த மகிழ்ச்சியில் பேசுகிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.

"காஞ்சிவரம்' எப்படி நடந்தது இது?
சினிமாவில் எனக்கான ஓர் அங்கீகாரத்தை பெற வேண்டும் என இயங்கத் தொடங்கியதில் இருந்தே இதன் கரு எனக்குள்ளே உருவாகியிருந்தது. ஆனால், மும்பை பர்சத் பிக்சர்ஸ் கம்பெனியின் மூலம்தான் பலிக்கணும்னு இருந்திருக்கு.

காஞ்சிபுரம் பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கினால் கூடைக் கூடையாய் அவ்வளவு செய்திகள். ஆயிரம் கோயில்கள் அங்கே இருந்திருக்கு.

இப்ப அதற்கான தடயங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. காஞ்சிபுரத்தின் அசல் மொழி எனக்குத் தெரியாது.

ஆனால், அதன் ஆன்மா புரியும். கார்ட்டூனிஸ்ட் மதன் அதற்கு பெரிதும் உதவினார். 1920-ல் இருந்த காஞ்சிபுரத்தைக் கண் முன்னால் உலவ விட்டார் சாபுசிரில். உலகம் புரிந்து கொள்ளாத பிரகாஷ்ராஜின் அபூர்வமான மறுபக்கம் பிரமிப்பாகப் பதிவாகியிருந்தது.

இதை ஆர்ட் பிலிம் என்று சொல்லி விட முடியாது. அர்த்தமுள்ள சினிமாங்கிற வார்த்தைதான் சரி




ஐ.சி.சி சாம்பியன் திரோபி - பாகிஸ்த்தானிடம் வீழ்ந்தது இந்தியா !

Labels:

ஐசிசி நடத்தும் சாம்பியன் கிண்ணப்போட்டிகளில் குழு A பிரிவில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்திய பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சொயிப் மலிக்கின் அதிரடி சதத்தால் பாகிஸ்த்தான் அபார வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. ஆஷஸ் நேஹ்ரா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஆனால் மலிக், யூசப் ஜோடி களமிறங்கியதும், ஆட்டம் சூடுபிடித்தது. அதிரடியாக ஆடிய சொஹிப் மலில் 16 பவுன்றிகள் அடங்களாக 126 பந்துகளில் 126 ஓடங்களை எடுத்தார். மொஹ்மட் யூசப் 87 ஓட்டங்களை எடுத்தார்.

65 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட் வீழ்ந்திருந்தது. அடுத்த விக்கெட் 271 ஓட்டங்கள் பெற்றிருந்த போதே வீழ்ந்தது. யூசப் அவுட்டாகியதும், 'சச்சின் தமக்கு ஒரு பொருட்டே இல்லை என பேட்டியளித்த அப்ரிடி களமிறங்கினார். ஆனால் 0வந்த வேகத்திலேயே பவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்தவர்கள் யாவரும் குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்த போதும், மலிக்கின் சதத்தினால், 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்த்தான் அணி, 302 ஓட்டங்களை குவித்திருந்தது.

பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் சச்சின் வந்த வேகத்திலேயே பவிலியன் திரும்பினார். இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த ட்ராவிட், கம்பீர் ஜோடி இந்தியாவிற்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் கௌதம் கம்பீர் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்த போது, ஆட்டமிழக்க நேரிட்டது. அடுத்தடுத்து வந்தவர்கள் பிரகாசிக்கத்தவறிய போதும் ஒரு பக்கம் ட்ராவிட் மட்டும் நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்தார்.

சுரேஷ் ரைனா, ட்ராவிட்டிற்கு கைகொடுக்க வந்தார். ஆனால் 46 ஓட்டங்களை பெற்றிருந்த போது அவரும் ஆட்டமிழந்தார். இந்தியாவின் தோல்வி உறுதியானது. 44.5 ஓவர்கள் முடிவில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை மாத்திரமே இந்தியாவால் எடுக்க முடிந்தது.

டிராவிட் மட்டும் அதிகூடிய ஓட்டமாக 78 ஓட்டங்களை குவித்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சொஹிப் மலிக் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை குழு A பிரிவில் நடைபெற்ற மற்றுமொரு ஆட்டத்தில் அஸ்திரேலியா அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியினை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நியுசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே ஒரு போட்டியும், இங்கிலாந்து-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே மற்றுமொரு போட்டியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.