ஆஸ்கர் நாயகன் மெழுகுச் சிலை
Posted by
bayo
Labels:
cinema

இரட்டை ஆஸ்கர் விருது பெற்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மெழுகுச் சிலையை உருவாக்கி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த கலைஞர் சுனில்.
அதேபோல ஆஸ்கர் விருது பெற்ற கேரள சவுண்ட் என்ஜீனியர் ரெசூல் பூக்குட்டியின் மெழுகுச் சிலையையும் வடித்துள்ளார் சுனில்.
இதேபோல புகழ் பெற்ற 35 பேரின் சிலைகளை உருவாக்கி வரும் அவர், இவற்றை மும்பையில் ஒரு இடத்தில் மியூசியத்தை உருவாக்கி அங்கே வைக்கப் போகிறாராம்.
இந்த சிலைகளை வடித்து வருபவரான சுனில் கூறுகையில், மு்ம்பையில் நான் வருகிற டிசம்பர் மாதம் சர்வதேச பிரபலங்களின் மெழுகுச் சிலை மியூசியத்தைத் தொடங்கப் போகிறேன். அங்கு இந்த சிலைகள் வைக்கப்படும். முதலில் ரெசூல் பூக்குட்டியின் சிலை வைக்கப்படும்.
கன்னியாகுமரியில் உள்ள பே வாட்ச் மெழுகுச் சிலை மி்யூசியத்துடன் இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன் என்றார் அவர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment