சிம்புவுடன் நான்.

வானம் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பதற்கு அர்த்தம், என் மார்க்கெட் சரிந்து விட்டது என்பதல்ல… இந்தி மாதிரி தமிழிலும் பல ஹீரோக்கள் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் லட்சியமும், தயாரிப்பாளர்களுக்கு லாபமும் ஆகும்.
இதை நான் ஆரம்பம் தொட்டே உணர்ந்திருப்பதால்தான் பாய்ஸ், 4 ஸ்டூடண்ட்ஸ், பட்டியல், வெயில் எனு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும், கதைகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன்.
சமீபமாக வித்தியாசமான கதை அம்சங்கள் கொண்ட படங்கள் வெளிவருகின்றன. பெரிய நடிகர்கள், அறிமுக நாயகர்கள் யார் நடித்தாலும் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்கள் ஜெயித்து வருகின்றன. அதன் அடிப்படையிலேயே சற்று இடைவெளிக்குப் பின் மீண்டும் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்க துணிந்துள்ளேன்…!
- சிம்பு படத்தில் 2வது ஹீரோவாக நடிப்பதற்கு விளக்கவுரை, பொழிப்புரை எல்லாம் கொடுத்திருப்பவர் வேறு யாருமல்ல… சாட்சாத் காதல் நாயகர் பரத்தான்!
மார்க்கெட் டல் ஆனால் எல்லோரும் சொல்லும் சொல்தான்! வரேவா!!
Saturday, October 09, 2010 | 0 Comments
நயனிடமிருந்து விலகிச் செல்லப் போகிறாராம் அஜீத்.
ஐயா படத்திலிருந்து நயனின் கால்ஷீட் மேனேஜராக இருந்தவர் இந்த அஜீத். நயன் பிரபுதேவா திருமண அறிவிப்பால் அப்செட் ஆகியிருந்த இவர் இப்போது தீர்மானமாக ஒரு முடிவெடுத்துவிட்டார்.
ஆகவே அஜீத்தை வைத்துக்கொள்ள (கால்ஷீட் மேனேஜராக மட்டும்), ஆசைப்படும் நடிகைகள் முயற்சித்துப் பார்க்கலாம்.
Saturday, October 09, 2010 | 0 Comments
