feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

விஜய் உச்சத்துக்கு வரமுடியும்!

Labels:

ரஜினியின் வழியைப் பயன்படுத்திக் கொண்டால் விஜய் உச்சத்துக்கு வரமுடியும் என்றார் சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் நிர்வாகியும், எந்திரன் 10002_1படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளருமான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா.

ரஜினிதான் என் தலைவர், நான் என்றும் அவரது ரசிகன் என்று கூறிவந்தவர் விஜய். அதுமட்டுமல்ல… ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பல அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை ஆரம்ப காலம்தொட்டே ரஜினியிடம் பெற்றுவந்தவர் விஜய். குருவி படத்தில் ஒரு பாடலில் என் வாத்தியார் சூப்பர் ஸ்டார் என்று பாடுவார். கில்லி வெற்றி விழாவில் விஜய்யை தன் ரசிகன் என்று சொல்லி ரஜினி ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு சாப்ட் கார்னரை ஏற்படுத்தித் தந்தவர் ரஜினி.

ஆனால் ஏசி சண்முகம் கொடுத்த ஒரு டாக்டர் பட்டமும், அதைத் தொடர்ந்து லயோலா கல்லூரி நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் ஏதோ முக்காலே மூணு சதவிகிதம் செல்வாக்கு உயர்ந்திருப்பதாகக் கூறப்பட்டதும் அவரது மனநிலையை தலைகீழாக மாற்றிவிட்டது போலும்… விளம்பரம், போஸ்டர்கள், பேனர்கள் என சுய விளம்பரத்தில் இறங்கியவர், ரஜினி ரசிகர்களைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில் சில வார்த்தைகளை அவற்றில் இடம்பெறச் செய்ய, தானாகவே ஒரு கேலிப் பொருளாக மாறிவிட்டார்.

அவர் மதிப்பை யாரும் தாழ்த்தவில்லை.. தானாகவே தாழ்த்திக் கொண்டார். வர வேண்டிய இடத்திலிருந்து வந்தால்தான் அது மரியாதை. செட்டப் செய்வதால் அவமானம்தான் மிஞ்சும்.

இதையெல்லாம் உணர்ந்துதானோ என்னமோ, வேட்டைக்காரன் பட பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்யைப் பார்த்து இப்படிச் சொன்னார் ரஜினியின் தீவிர ரசிகர்களுள் ஒருவரான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா…

“சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு முதல் எங்கள் அணுகுமுறை, படங்களைத் தேர்வு செய்யும் விதம் என எல்லாமே மாறப்போகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ படம்தான் சன் பிக்சர்ஸின் நேரடி முதல் தயாரிப்பு. எந்திரன் படத்தை கலாநிதி மாறன் மிகுந்த நம்பிக்கையுடன் தயாரிக்கிறார். அதற்கு ஏற்ப ஷங்கரும் அவரது குழுவினரும் தங்கள் படம் போல் உழைக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளிவரும்.

இந்தப் படத்துக்கு இயக்குனர் ஷங்கர் கடினமாக உழைத்து வருகிறார். அதை பார்க்கும்போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது.

ரஜினியின் உழைப்பு ஒரு பிரமிப்பு. இன்னும் பல காலத்துக்கு அதைப் பற்றி இந்த திரையுலகம் பிரமிப்புடன் சொல்லிக் கொண்டுதான் இருக்கும். ரஜினி சாரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய நடிகர்கள், இளைஞர்களை அனைவருமே அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.

ரஜிprimary-large-1னியின் வழியை விஜய் பயன்படுத்திக்கொண்டால் உச்சத்துக்கு வர முடியும்…,” என்றார் சக்ஸேனா.

இந்த மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர், எந்திரன் படம் 85 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்துவிட்டதாகவும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “எப்போது விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறீர்கள் என்று வெளியூர் சென்றாலும் ரசிகர்கள் கேட்கிறார்கள். ‘முதல்வன்’ படத்தில் முதலில் நடிக்க வைக்க எண்ணியது ரஜினியை. அவர் கிடைக்காவிட்டால் விஜய்யை வைத்து இயக்க நினைத்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.

விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கிறது. நான் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 7 வருடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். விரைவில் விஜய்யை வைத்து படம் செய்யும் திட்டம் உள்ளது. என் குருநாதர் மகன் அவர் என்பதால் மட்டுமல்ல… அவர் திறமையான நடிகர்… அவர் ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது…,” என்றார்.

பின்னர் பேசிய விஜய், வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் சிலவற்றைப் பாடிக் காட்டினார்.

“நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் தூங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே…”

-இப்படிப் போகின்றன அந்தப் பாடல் வரிகள்…!!

இந்தப் பாடலைக் கேட்டுவிட்டதால்தான் சக்ஸேனா அப்படிப் பேசினாரோ!!





0 comments:

Post a Comment