feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

திரு.. திரு.. துறு.. துறு- திரை விமர்சனம்

Labels:




ரொம்ப நாளாச்சு இவ்வளவு லைட்டான திரைகதையில், பரபரவென, ஸ்லாப்ஸ்டிக்கும், ஒன்லைனரும், கலந்து அடிக்கும் ஒரு லவ்லி கூத்தை..

ஒரு பர்பெக்ட் பெண் ரூபா மஞ்சரிக்கும், அன் பெர்பெக்ட் அஜ்மலுக்கும் இடையே நடக்கும் ரசிக்கும் படியான கதை.அஜ்மல் ஒரு விளம்பர கம்பெனியின் ஆர்ட் டைரக்டர், விஷுவலைசர், ரூபா அவனுடன் வேலை பார்க்கும் பெண், மெளலிக்கு பிள்ளைகள் இல்லாததால் செல்லப் பிள்ளையாய் அஜ்மல் இருக்க, அவனின் பொறுப்பற்ற தன்மையால் ஒரு மிக பெரிய கார்பரேட் கம்பெனியின் ஆர்டர் கைநழுவி போக இருக்க, அதை இழுத்த் பிடித்து ரூபாவும், அஜ்மலும் பிடித்து வேலையை ஆரம்பிக்க, அது ஒரு குழந்தைகளுக்கான ப்ராடக்ட், அதற்கான குழந்தை கிடைக்காமல் போக, ஒரு குழந்தையை அஜ்மல் கண்டுபிடிக்க, அந்த குழந்தையின் தாயிடம் அனுமதி வாங்க துரத்த, அவள் ஒரு ஆட்டோவில் அடிபட்டு மயக்கமாக, குழந்தை அஜ்மலிடம் இருக்க, திரும்ப போகும் போது குழந்தையின் அம்மா காணாமல் போயிருக்க, ப்ளாட் இறுகுகிறது.

அதன் பிறகு நடக்கும் கூத்துக்கள், மிக இயல்பான ஸ்லாப்ஸ்டிக் காமெடி.. குழந்தையின் தாய் தகப்பனை தேடி பிடிகக் அலைய, காணாமல் போனவள் ஒரு டுபாக்கூராய் இருக்க, அவள் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருக்க, ஒரு பக்கம் ஒரிஜினல் அப்பா அம்மா அலைய, அக்ரிமெண்ட் கிடைககாமல் மெளலி டென்ஷனாகி இருக்க, அவரிடம் உண்மையை சொல்லாமல் காரிய முடிக்க முயலும் ரூபா, அஜ்மல் ஜோடி, இதற்குள் அவர்களுக்குள் உண்டாகும் காதல். என்று ஒரே ஜாலிதான்.

அஜ்மலுக்கு மிக இயல்பாய் காமெடி வருகிறது.. பொறுப்பில்லாத ஒரு கேர்ஃபிரி இளைஞனை கண் முன்னே நிறுத்துகிறார். அதே போல் ரூபா மஞ்சரி. முதல் காட்சிகளில் பார்க்கும் போது சுமாராய் இருப்பவர், படம் முடியும் போது அவரை பிடிக்க ஆரம்பித்துவிட்டது.. அவ்வளவு இயல்பான கேர்ள் நெக்ஸ்ட் டோர் இம்பாக்ட்.. இவருக்கும் ரியாக்‌ஷன்கள் இயல்பாய் வந்து உட்காருகிறது.

மெளலி தான் ஒரு எக்ஸ்பீரியன்ஸ்டு ஆர்டிஸ்ட் என்பதை வரும் காட்சிகளில் எல்லாம் நிருபித்து காட்டுகிறார். டென்ஷனான நேரட்த்திலும் ஜோக்கடித்து கொண்டே, முகத்தில் மட்டும் டென்ஷனை காட்டும் காட்சிகள், ஆளை தவிர பேரை எப்போதுமே மாற்றி, மாற்றி சொல்லும் அவரின் கேரக்டர் அருமை.

தமிழில் வந்திருக்கும் மூன்றாவது ரெட் ஒன் டிஜிட்டல் படம். அவ்வளவு துல்லியம்.. ஒளிப்பதிவாளர் சுதிர் பாராட்ட பட வேண்டியவர்.. அருமையான பேக்ரவுண்ட் கலர்ஸ், துல்லியமான ஒளிப்பதிவு என்று கலக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் மணிசர்மாவின் பாடல்கள் ஓகே. ஜில்லுனு வீசும் பூங்காற்று பாடல் மட்டும் நல்ல மெலடி.

கதை, திரைகதை,வசனம், எழுதி இயக்கி இருக்கும். ஜே.எஸ்.நந்தினிக்கு முதல் படம்.. பார்த்தால் தெரியவில்லை. மிக இயல்பான டயலாக்குகள், ஒன்லைனர்கள், ஆர்டிஸ்டுகளிடம் வேலை வாங்கியிருக்கும் பாங்கை பார்த்தால் நிச்சயம் தெரியவில்லை.. ஆரம்பித்த முதல் பத்து நிமிஷத்துக்கு வழக்கம் போல இரண்டு பேருக்கான ஈகோ க்ளாஷ் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, குழந்தையை கொண்டு வந்து திருப்பத்தை ஏற்படுத்தி, அதற்கப்புறம் ஸ்பீடுதான்.

ஆங்காங்கே பல இடங்களில் திரைக்கதை தொங்கினாலும் பின்னால் வரும் சில காட்சிகள் அதை ஈடு கொடுத்து சரி செய்து விடுகிறார். குழந்தை திருடி நர்ஸை தர்ட் டிகிரி மெத்தடில் விசாரிக்கும் காட்சி செம ரகளை.. க்ளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல காமெடி கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பை மிஸ் செய்து விட்டார்.





2 comments:
gravatar
பின்னோக்கி said...
September 26, 2009 at 8:54 AM  

http://cablesankar.blogspot.com/2009/09/blog-post_25.html

என்னங்க இது.. ஏற்கனவே இந்த வலைத்தளத்தில் இருக்கிறது ??

gravatar
Cable சங்கர் said...
September 26, 2009 at 8:04 PM  

நீங்களே நல்லாத்தானே எழுதறீங்க அப்புறம் எதுக்கு இந்த மாதிரி.. பேசாம என் பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கலாம்..

Post a Comment