feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ - சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்

Labels:

வழக்கமா நம்ம நிகழ்ச்சிக்கு ஒரு நடிகரையோ இல்லை இயக்குனரையோ இல்லன்னா ஏதாவது பிரபலமான வலைப்பதிவரையோ தான் அழைச்சிட்டு இருந்தோம். முதல் முறையா இந்த நிகழ்ச்சிக்கு துறை சார்ந்த ஒருவரை கூப்பிட்டு வந்திருக்கோம். அது என்ன துறை சார்ந்த ஒருத்தர்னு பாக்கறீங்களா? அதான் எப்பவுமே தமிழ் படத்துல பல்பு வாங்கறதுக்குனே வருவாங்களே ஒரு கூட்டம், அதான் அந்த சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ். அதுல இருந்து ஒருத்தரை புடிச்சிட்டு வந்திருக்கோம். இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாடா கீபோர்ட் மண்டையா. அது என்னடா நாய் மாதிரி கழுத்துல டோக்கன் மாட்டிருக்க?

சா.இ : இது டோக்கன் இல்லை. என் டேக்.

க: டேய் அதை ஏண்டா இங்க போட்டிருக்க? எப்ப பார்த்தாலும் அதை கழுத்துலயே மாட்டிட்டு அலையறீயே. ஏன் அது இல்லைனா கார்ப்பரேஷன் காரன் வந்து நாய் புடிக்கிற வண்டில ஏத்திட்டு போயிடுவானு பயமா?

சா.இ : நோ மிஸ்டர் பெல். இது இருந்தா தான் ஊர்ல எல்லாரும் மதிப்பாங்க. அதான்.

க: டேய் நாயே நாயே. இப்படியே நீங்க போட்டுட்டு திரிஞ்சா இன்னும் கொஞ்சம் நாள்ல உங்களை யாரும் மதிக்க மாட்டாங்கடா. மிதிப்பாங்க.
அப்பறம் ஏன்டா தப்பு தப்பா இங்கிலிஸ் பேசினாலும் கூச்சப்படாம ஊருல இருக்குற ஆயவைக்கூட விட்டு வைக்காம ”ஹை பாட்டி, யூ ஆர் மை ஸ்வீட்டினு” இங்கிலிஸ்ல பேசறீங்க?

சா.இ : யூ சீ. நாங்க எவ்ரிடே யூ.எஸ், யூ.கே, ஆஸ்ட்ரேலியா க்ளைண்ட்ஸ்'கிட்ட இண்ட்ராக்ட் பண்றோம். சோ வீ ஆர் யூஸ்டு டூ இட். வாட் சே யா?

க: என்னடா மண்டையா 1431 பயாரியா பல்பொடி விக்கறவன் மாதிரி மலேசியா, சிங்கப்பூர்னு கலர் கலரா ரீல் விடற. சரி, நீங்க எல்லாம் தனியா எங்கயும் சாப்பிடவே போக மாட்டீங்களா? கூட்டமா பொண்ணுங்களைக் கூப்பிட்டு தான் போவீங்களா?

சா.இ : யூ ஆர் மிஸ்டேக்கன். அது டீம் இண்ட்ராக்‌ஷன்.

க : டேய் மௌஸ் பால் மண்டையா. டீம் இண்ட்ராக்‌ஷனு கண்ட பொண்ணுங்களையும் கூப்பிட்டு பீசா ஹட்டு, மெக் டோனால்ட்ஸ்னு போறிங்களே. என்னைக்காவது ஃபேமிலி இண்ட்ராக்‌ஷனு சொல்லி அப்பா அம்மாவை இந்த மாதிரி கூப்பிட்டு போய் சந்தோஷப்பட வெச்சிருக்கீங்களாடா?

சா.இ : நோ மிஸ்டர் கவுண்ட்ஸ். அவுங்களுக்கு அந்த மாதிரி எல்லாம் சாப்பிட்டு பழக்கமில்லை. அவுங்களுக்கு அதெல்லாம் ஒத்துக்காது.

க: ஆமாம். இவர் பொறக்கும் போதே ஒரு கைல பர்கரும், இன்னொரு கைல பீசாவும் வெச்சிக்கிட்டு பொறந்தாரு. டேய் ஜாவா மண்டையா, யார் கைல ரீல் விடற. தோசைல சட்னி சாம்பார் ஊத்தி பிசையற மாதிரி பீசால சாஸ் ஊத்தி சாப்பிடற நாயி நீயீ. உனக்கு இவ்வளவு பில்ட் அப்பா?

சா.இ : @#$

க: சரி, அது ஏன்டா ட்ரெயின்ல ஏறினா செண்பகமே செண்பகமேனு பால் கறக்கற ராமராஜன் மாதிரி டவுசர் போட்டு திரியறீங்க?

சா.இ : யூ சி இந்தியாவுல ரொம்ப ஹாட் மேன். வென் ஐ வாஸ் இன் யூ எஸ்

க: ஆரம்பிச்சிட்டானுங்கடா. இவனுங்க அக்கப்போரு தாங்கலயேடா. இதே ஒரு அட்டு ஃபிகர் வெயிட் பண்ண சொல்லுச்சினாலும், மெரினா பீச்லயும் உச்சி வெயில்ல நிப்பானுங்க. ஆனா வெளில இவனுங்க கொடுக்குற பில்ட் அப்புக்கு மட்டும் அளவே இல்லையேடா. அது ஏன்டா பொண்ணுங்களுக்கு வேலை வந்தா மட்டும் போட்டி போட்டு லாஜிக் சொல்லி தரேனு விடாம கடலை போடறீங்க. அதே பசங்களுக்கு ஒண்ணுனா அப்ஸ்காண்ட் ஆகிடறீங்க?

சா.இ: இதெல்லாம் யாரோ புரளி கிளப்பிவிட்டுட்டாங்க கவுண்ட்ஸ். அவனவனுக்கு இருக்குற ஆணியையே இப்பல்லாம் புடுங்க முடியல. இதுல எங்க இருந்து லாஜிக் சொல்லி தரது.

க: அது என்னடா எப்ப பார்த்தாலும் ஆணி, கடப்பாரைனு? எல்லாம் சரி, அது ஏன் நீங்க எல்லாம் லூயி பிலிப், பீட்டர் இங்கிலாண்ட், வேன் ஹிசைனுனு ரெண்டாயிரம் கொடுத்து தான் சட்டை பேண்ட் எல்லாம் வாங்கி போடுவீங்களா? வெள்ளைக்காரனே திருப்பூர்ல இருந்துதாண்டா வாங்கி போடறான். நீங்க என்னனா அதையே திரும்ப அவன்கிட்ட இருந்து கண்ட பிடிக்கு காசு கொடுத்து வாங்கறீங்க?

சா.இ: பிராண்டட் சட்டையெல்லாம் வாங்கினா தான் ரொம்ப வருஷம் தாங்குது.

க: டேய். சும்மா அடிச்சி விடாதடா பீட்டர் இங்கிலாண்ட் மண்டையா. உங்க வீட்ல போய் உங்க அப்பா சட்டை பேண்ட் எல்லாம் எடுத்து பாரு. பத்து, இருபது வருஷத்துக்கு முன்னாடி எடுத்ததெல்லாம் கூட இன்னும் நச்சுனு இருக்கும். அவர் என்ன உன்னை மாதிரி ஆயிரக்கணக்குல கொடுத்தா எடுத்தாரு. சும்மா பில்ட் அப் கொடுக்காத மேன். அது எல்லாம் சரி, இந்த சின்ன வயசுல உங்களுக்கு எல்லாம் காது கேக்காம போயிடுச்சே அது எப்படிடா?

சா.இ : இல்லையே. எனக்கு நல்லா காது கேக்குமே.

க: அப்பறம் எதுக்குடா எல்லாரும் காதுல எப்ப பார்த்தாலும் செவிட்டு மெஷினை வெச்சிக்கிட்டே அலையறீங்க?

சா.இ : அது செவிட்டு மெஷின் இல்லை கவுண்ட்ஸ். ஐ பாட். ஆப்பிள் கம்பெனி கண்டுபிடிச்சது.

க: ஆப்பிள் கம்பெனி கண்டுபிடிச்சிதோ, வாழப்பழக் கம்பெனி கண்டுபிடிச்சிதோ அதை என்னத்துக்குடா எப்ப பார்த்தாலும் காதுல வெச்சிட்டு அலையறீங்க? பாட்டு கேக்காம ஒரு நிமிஷம் கூட உங்களால வெளிய வர முடியாதா?

சா.இ: எல்லாம் சும்மா பில்ட் அப் தான்.

க: அதான்டா நானும் சொல்றேன். நீங்க கொடுக்கற பில்ட் அப் தான் தாங்க முடியலையேடா, PC ஸ்ரீராம் ரேஞ்சுக்கு கைல ஒரு அடி நீளத்துக்கு கேமரா வெச்சிக்கிட்டு சுத்தறது, அப்ப அப்ப ஆத்தா கோவில்ல குடிக்கிற கூலு, கஞ்சினு சொல்லிட்டு திரியறது, ராத்திரி நேரத்துலயும் ராஜ பார்வை கமல் மாதிரி கூலிங் கிளாஸ் போட்டுட்டு சுத்தறது, மொக்கை படமா இருந்தாலும் முன்னூறு ரூபாய் கொடுத்து மால்ல படம் பாக்கறதுனு நீங்க பண்ற அலும்பு தாங்கலடா. இனிமேவாது திருந்துங்கடா. இல்லைனா இனிமே நான் பேச மாட்டேன். என் கைல இருக்குற கீ போர்ட் தான் பேசும்.

சா.இ: திட்டி மெயில் அனுப்புவீங்களா?

க: உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. நீயெல்லாம் வாங்கினா தான் திருந்துவ.

கவுண்டர் கையில் கீபோர்டை எடுத்து ஓங்க, சா.இ தலை தெறிக்க ஓடுகிறார்.




1 comments:
gravatar
SUREஷ்(பழனியிலிருந்து) said...
September 24, 2009 at 9:07 AM  

சூப்பர் தொடர்ந்து எழுதுங்கள்

Post a Comment