feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

ஐ.சி.சி சாம்பியன் திரோபி - பாகிஸ்த்தானிடம் வீழ்ந்தது இந்தியா !

Labels:

ஐசிசி நடத்தும் சாம்பியன் கிண்ணப்போட்டிகளில் குழு A பிரிவில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்திய பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சொயிப் மலிக்கின் அதிரடி சதத்தால் பாகிஸ்த்தான் அபார வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. ஆஷஸ் நேஹ்ரா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஆனால் மலிக், யூசப் ஜோடி களமிறங்கியதும், ஆட்டம் சூடுபிடித்தது. அதிரடியாக ஆடிய சொஹிப் மலில் 16 பவுன்றிகள் அடங்களாக 126 பந்துகளில் 126 ஓடங்களை எடுத்தார். மொஹ்மட் யூசப் 87 ஓட்டங்களை எடுத்தார்.

65 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட் வீழ்ந்திருந்தது. அடுத்த விக்கெட் 271 ஓட்டங்கள் பெற்றிருந்த போதே வீழ்ந்தது. யூசப் அவுட்டாகியதும், 'சச்சின் தமக்கு ஒரு பொருட்டே இல்லை என பேட்டியளித்த அப்ரிடி களமிறங்கினார். ஆனால் 0வந்த வேகத்திலேயே பவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்தவர்கள் யாவரும் குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்த போதும், மலிக்கின் சதத்தினால், 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்த்தான் அணி, 302 ஓட்டங்களை குவித்திருந்தது.

பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் சச்சின் வந்த வேகத்திலேயே பவிலியன் திரும்பினார். இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த ட்ராவிட், கம்பீர் ஜோடி இந்தியாவிற்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் கௌதம் கம்பீர் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்த போது, ஆட்டமிழக்க நேரிட்டது. அடுத்தடுத்து வந்தவர்கள் பிரகாசிக்கத்தவறிய போதும் ஒரு பக்கம் ட்ராவிட் மட்டும் நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்தார்.

சுரேஷ் ரைனா, ட்ராவிட்டிற்கு கைகொடுக்க வந்தார். ஆனால் 46 ஓட்டங்களை பெற்றிருந்த போது அவரும் ஆட்டமிழந்தார். இந்தியாவின் தோல்வி உறுதியானது. 44.5 ஓவர்கள் முடிவில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை மாத்திரமே இந்தியாவால் எடுக்க முடிந்தது.

டிராவிட் மட்டும் அதிகூடிய ஓட்டமாக 78 ஓட்டங்களை குவித்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சொஹிப் மலிக் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை குழு A பிரிவில் நடைபெற்ற மற்றுமொரு ஆட்டத்தில் அஸ்திரேலியா அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியினை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நியுசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே ஒரு போட்டியும், இங்கிலாந்து-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே மற்றுமொரு போட்டியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment