feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

தீபாவளி விருந்து படைக்க வருகிறான் வேட்டைக்காரன்

Labels:

விஜய் ரசிகர்களுக்கு இந்த வருட தீபாவளி விருந்து படைக்க வருகிறான் வேட்டைக்காரன். இன்று முதன் முதலாக இந்த பட பாடலை கேட்டேன். முதல் முறை கேட்கும்போதே பாடல் எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கு பிடிக்கும் இந்த பட பாடல்கள்.

மொத்தம் ஐந்து பாடல்கள். பாடலை எழுதியவர்கள்: கபிலன், விவேகா, அண்ணாமலை. இசை 'நாக்க முக்க' புகழ் விஜய் அன்டனி.

இனி பாட்டுக்கு வருவோம் :

1. நமக்கு பிடித்தவர்களை / கவர்தவர்களை காணும்போதெல்லாம் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுவது இயற்கை. அதுபோலத்தான், இங்கே, நாயகனும் நாயகியும் தமக்குள் ஏற்படும் உணர்வை வெளிக்காட்டும் விதமாக அமைத்த பாடலோ இது ...? பாட்ட கேட்டும் போதே சும்மா கிர்ருனு இருக்கு. படத்துல பார்த்தா ..(உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்). கிருஷ்ணா ஐயர், ஷோபா சேகர் பாடிய அந்த பாடலின் வரிகள் :

என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....
கிட்டே நீ வந்தாலே விர்ருங்கிது.... டர்ருங்கிது ...

என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....
கிட்டே நீ வந்தாலே விர்ருங்கிது.... டோர்ருங்கிது...

கை தொடும் தூரம் காய்த்தவளே
சர்கரையலே செஞ்சவளே
எம்பசி தீர்க்க வந்தவளே - சுந்தரியே...

தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்ன சாய்த்தவனே
ராத்திரி தூக்கம் கேடுத்தவனே - சந்திரனே...
2.ஒரு காதல். ஒரு கவிதை. ஒரு காதலி. ஒரு காதலன். இவற்றை கொண்டு எழுதப்பட்ட ஒரு காதல் பாடல். கொஞ்சம் - மெலடி ஜோரு சும்மா சுவைத்து பாரு. கிருஷ், சுசித்ரா பாடிய அந்த பாடலின் வரிகள் :

ஒரு சின்ன தாமரை என் கண்ணை பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே
இதை உண்மை என்பதா ? இல்லை பொய் தான் என்பதா ?
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்கின்றதே.

என் ரோமக்கால்களே ஒரு பயணம் போகுதே
உன் ஈர புன்னகை சுடுதே
என் காட்டு பாதையில் ஒரு ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் - உயிரே
3.ஒரு காதல் பாடல். கேள்வி- பதில் போல வித்தியாசமான பாடல் கம்போசிங். பாடலை கேட்டும் போது படத்தின் இறுதி பகுதியில் இடம் பெறுவது போல இருக்கு. ஒரு குலைவு ஒரு நெளிவு இந்த பாடலில். அருமை. சுர்சித்ரா, சங்கீதா ராஜேஷ்வரன் பாடிய அந்த பாடலின் வரிகள் :
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு
குழலிலை குழலிலை தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டையப்போல செவந்திருக்குது உதடு
உதடில்லை உதடில்லை மந்திரித்ததகடு

பருத்தி பூபோல பதியுது உன் பார்வை
பாதமில்லை பாதமில்லை பச்சரிசி சாதம்

வலம்புரி சங்கைப்போல வழுக்குது உன் கழுத்து
கழுத்தில்லை கழுத்தில்லை கண்ணதாசன் எழுத்து
4.கொஞ்சம் ஓவரா தான் இருக்கு இந்த பாடலும். இது எவருக்காக எழுதியதுன்னு தெரியல. மத்தபடி சொல்ல ஒன்னும் இல்ல இதில். கொஞ்சம் தெனாவெட்டா பாடியிருக்காரு நம்ப சங்கர்மகாதேவன், பாடிய அந்த பாடலின் வரிகள் :
நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே
நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

நான் புடிச்ச உடும்பு புடி நான் சிரிச்சா வானவெடி
நான் பாடும் பாட்டுக்கு தொல்பறை நீ எடு

நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

வாழு வாழு வாழவிடு
வாழும்போதே வானை தோடு
வம்பை பார்த்தா வாளைஎடு
வணக்கி நின்னா தொலை கொடு

வாழு வாழு வாழவிடு
வாழும்போதே வானை தோடு
வம்பை பார்த்தா வாளைஎடு
வணக்கி நின்னா தொலை கொடு

நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே
5.வழக்கமான ஒரு ஓபனிங் சாங்கு. கொஞ்சம் ஓவரா தான் இருக்கு பாடல் வரிகள். இது விஜய்க்கு அரசியல் கனவை சுமத்து வருவது போல இருக்கு. ஒரே கர்ஜனை. ஆனந்து, மகேஷ் வினயக்ரம் இணைத்து பாடிய அந்த பாடலின் வரிகள் :
புலி உரும்புது புலி உரும்புது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது - வேட்டைக்காரன் வர்றதபார்த்து

கொல நடுக்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நடு நடுக்குது நடு நடுக்குது - வேட்டைக்காரன் வர்றதபார்த்து

பட்டாகத்தி பளபளக்க
பாட்டி தொட்டி கலகலக்க
பரந்து வரான் - வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுகாரன்.
நிக்காம ஓடு ஓடு ஓடு .....வரான் பாரு வேட்டைக்காரன்.

மொத்ததுல பாட்டு படு ஜோரு. இனி நீங்களே இந்த படத்தோட பாட்டை கேட்களினாலும் 'சன்' உங்களை கேட்கவைப்பான்.

விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளிக்கு ஒரு பெரும் விருந்து கார்த்திருக்கு. கடந்த மூன்று படங்களும் சரியாக ஓடாத நிலையில் இந்த படம் நன்கு ஓடவேண்டி உங்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



0 comments:

Post a Comment